ஐம்பது பைசாவில் இருந்து, நூறு ரூபாய் வரைக்கும், வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு உபாதையாகவும் இருக்கும் ஏகப்பட்ட கலர் கலராய் மொறுமொறு பாக்கெட்கள் , சந்தையில் குவிந்து வருகின்றன. காய்கறி, பழங்கள் வாங்கும் அளவை விட, இந்த வகை பாக்கெட் உணவுகள் விற்பனை தான் கொடிகட்டிப் பறக்கிறது. "உடல் கும்மென்று இருக் கும்; மூளை சுறுசுறுப்பாகும்; களைப்பே இருக்காது; சத்துக்கள் உள்ளது' என்று எவ்வளவோ பம்மாத்து அறிவிப்புகளுடன் இந்த கலர் பாக்கெட்கள் விற்பனைக்கு வந்தாலும், உண்மையில், அவற்றில் சத்துக்கள் இருக்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியே. அதில் சத்துக்கள் இருக்கிறதா, அது உடம்புக்கு நல்லதில்லையே என்ற சிந்தனை, குட்டீஸ்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இந்த தலைமுறை பெற்றோர்களுக்கும் தெரியாமல் இருப்பது தான் வேதனை.
குட்டீசை கெடுப்பது...
குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தருவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். "டிபன் செய்து தர நேரமில்லை; அப்படியே செய்தாலும் சாப்பிடுவதில்லை. ஆனால், மொறுமொறு...ன்னு பாக்கெட் வாங்கித்தந்தால் ஒரு நிமிடத் தில் காலி செய்து விடுகிறது என் குழந்தை' என்று பெருமையாக சொல்லும் தாய்களும் இருக்கின்றனர். ஒரு வகையில் குழந்தைகளை தவறான உணவுப்பழக்கத்துக்கு ஆட்படுத்துவது பெற்றோரின் அலட்சியம் தான். குழந்தைப்பருவத்தில் இருந்தே காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிடும் பழக்கம் பல குழந்தைகளுக்கு ஏற்படுகிறது; இதற்கும் பெற்றோர் தான் காரணமாக இருக்கின்றனர்.
டீன்–ஏஜ் குஷி
"டீன் ஏஜ்' வயதினரை கேட்கவே வேண்டாம்; அதிலும் கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், எப்போ தும் கையில் கோலா, கலர் பாக்கெட் மொறுமொறுக்கள்; தரமானதா என்று கூட பார்க்காமல் வாங்கும் நூடுல்ஸ் போன்ற சமாச்சாரங்கள்.
கல்லூரியில் படிக்கும், வேலைக்கு போகும் இளம் வயதினருக்கு ஜீன்ஸ், அரை குறை சட்டை, மொபைல், ஐபாட், இன்டர்நெட் சேட்டிங் தான் குஷி என்று நினைக்கின்றனர். உணவுப்பழக்கத்திலும் இப்படி காசை கொட்டி, தவறான பழக் கத்துக்கு ஆளாகின்றனர்.
எந்த சத்தும் இல்லை
இப்போது சந்தையில் சர்வதேச பிரபல நிறுவனங் கள், இந்திய பிரபல நிறுவனங்களின் மொறு மொறு பாக்கெட்கள் குவிந்துள் ளன. அவற்றில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளன என்பதை போடுவதே இல்லை.
சிகரெட் பிடிக்கக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டும் மத்திய சுகாதார அமைச்சர் எடுக்கப்போகும் அடுத்த அஸ்திரம் , சத்தில்லா உணவு பாக்கெட்களுக்கு கிடுக்கிப்பிடி தான். எல்லா கலர் உணவு பாக்கெட்கள் மீதும் எவ்வளவு சத்துக்கள் உள்ளன என்பதை சதவீதமாக போட வேண்டும் என்று கட்டாய உத்தரவை அமல்படுத்த உள்ளார்.
என்ன சத்துக்கள்?
இனிப்பு சேர்க்கக்கூடாது; குறைந்த கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஸ்டார்ச், கலோரி இருக்க வேண்டும். இது தான் சத்தான உணவு வகை. ஆனால், இப்போது கலர்புல் பாக்கெட்கள் விற்பனையில், புற்றீசல் போல, உள்ளூர் பிராண்டுகள் வேறு பரவி விட்டன.
இவற்றில், அதிக கொழுப்பு, இனிப்பு, கொலஸ்ட்ரால் உள்ளன. இவற்றை ஒருவர் பத்து ஆண்டுகள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் நிச்சயம் என்கின்றனர் டாக்டர்கள்.
டிரான்ஸ்பேட்
கொழுப்பில் மோசமானது "டிரான்ஸ் பேட்' என்பது. இது தான் பல மொறுமொறுக்களில் உள்ளது. இதனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் ஆபத்து உள்ளது. இந்த மொறுமொறுக்களை சாப்பிட்டுவரும், இளம் வயதினர் , நடுத்தர வயதை அடையும் போது இந்த கோளாறுகள் தலைதூக்க ஆரம்பிக்கும். பெரும்பாலான பாக்கெட்களில், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கனிம, வைட்டமின் சத்துக்கள் பற்றி போடுவதே இல்லை.
கலோரி, கொழுப்பு
மொறுமொறுக்களில், கலோரியும் அதிகம்; கொழுப்பும் அதிகம். அதனால், இவை குறைவாக உள்ள பாக்கெட்களை வாங்க வேண்டும். கொழுப்பு மிகுந்த சிப்ஸ்கள், குக்கீஸ் போன்ற மொறுமொறுக்களில், அதிக பட்சம் கொழுப்பில் இருந்து 30 சதவீதம் மேல் கலோரி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருப்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு போதும்; இதய, சர்க்கரை பாதிப்பு உள்ளவராக இருந்தால், இந்த அளவை விட குறைவான கொழுப்பு போதுமானது.
உப்பு பெறாத...
உப்பு, சர்க்கரை இரண்டுமே சிறிய வயதில் இருந்தே குறைத்து கொண்டு வந்தால், அவர்களுக்கு சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு அண்டவே செய்யாது. ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனை விட குறைவான உப்பு போதும்.
உடலுக்கு சக்தி வேண்டும்; அதற்காக, கார்போஹைட்ரேட் தேவை. காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் ஆகியவற்றில் தான் இந்த சத்து உள்ளது. வைட்டமின், கனிம சத்துக்களை 100 சதவீதம் வரை சாப்பிட்டாலும், உட லுக்கு நல்லது தான்.ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1,600ல் இருந்து 2,000 கலோரி வரை தேவை.
குட்டீசை கெடுப்பது...
குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தருவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். "டிபன் செய்து தர நேரமில்லை; அப்படியே செய்தாலும் சாப்பிடுவதில்லை. ஆனால், மொறுமொறு...ன்னு பாக்கெட் வாங்கித்தந்தால் ஒரு நிமிடத் தில் காலி செய்து விடுகிறது என் குழந்தை' என்று பெருமையாக சொல்லும் தாய்களும் இருக்கின்றனர். ஒரு வகையில் குழந்தைகளை தவறான உணவுப்பழக்கத்துக்கு ஆட்படுத்துவது பெற்றோரின் அலட்சியம் தான். குழந்தைப்பருவத்தில் இருந்தே காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிடும் பழக்கம் பல குழந்தைகளுக்கு ஏற்படுகிறது; இதற்கும் பெற்றோர் தான் காரணமாக இருக்கின்றனர்.
டீன்–ஏஜ் குஷி
"டீன் ஏஜ்' வயதினரை கேட்கவே வேண்டாம்; அதிலும் கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், எப்போ தும் கையில் கோலா, கலர் பாக்கெட் மொறுமொறுக்கள்; தரமானதா என்று கூட பார்க்காமல் வாங்கும் நூடுல்ஸ் போன்ற சமாச்சாரங்கள்.
கல்லூரியில் படிக்கும், வேலைக்கு போகும் இளம் வயதினருக்கு ஜீன்ஸ், அரை குறை சட்டை, மொபைல், ஐபாட், இன்டர்நெட் சேட்டிங் தான் குஷி என்று நினைக்கின்றனர். உணவுப்பழக்கத்திலும் இப்படி காசை கொட்டி, தவறான பழக் கத்துக்கு ஆளாகின்றனர்.
எந்த சத்தும் இல்லை
இப்போது சந்தையில் சர்வதேச பிரபல நிறுவனங் கள், இந்திய பிரபல நிறுவனங்களின் மொறு மொறு பாக்கெட்கள் குவிந்துள் ளன. அவற்றில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளன என்பதை போடுவதே இல்லை.
சிகரெட் பிடிக்கக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டும் மத்திய சுகாதார அமைச்சர் எடுக்கப்போகும் அடுத்த அஸ்திரம் , சத்தில்லா உணவு பாக்கெட்களுக்கு கிடுக்கிப்பிடி தான். எல்லா கலர் உணவு பாக்கெட்கள் மீதும் எவ்வளவு சத்துக்கள் உள்ளன என்பதை சதவீதமாக போட வேண்டும் என்று கட்டாய உத்தரவை அமல்படுத்த உள்ளார்.
என்ன சத்துக்கள்?
இனிப்பு சேர்க்கக்கூடாது; குறைந்த கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஸ்டார்ச், கலோரி இருக்க வேண்டும். இது தான் சத்தான உணவு வகை. ஆனால், இப்போது கலர்புல் பாக்கெட்கள் விற்பனையில், புற்றீசல் போல, உள்ளூர் பிராண்டுகள் வேறு பரவி விட்டன.இவற்றில், அதிக கொழுப்பு, இனிப்பு, கொலஸ்ட்ரால் உள்ளன. இவற்றை ஒருவர் பத்து ஆண்டுகள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் நிச்சயம் என்கின்றனர் டாக்டர்கள்.
டிரான்ஸ்பேட்
கொழுப்பில் மோசமானது "டிரான்ஸ் பேட்' என்பது. இது தான் பல மொறுமொறுக்களில் உள்ளது. இதனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் ஆபத்து உள்ளது. இந்த மொறுமொறுக்களை சாப்பிட்டுவரும், இளம் வயதினர் , நடுத்தர வயதை அடையும் போது இந்த கோளாறுகள் தலைதூக்க ஆரம்பிக்கும். பெரும்பாலான பாக்கெட்களில், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கனிம, வைட்டமின் சத்துக்கள் பற்றி போடுவதே இல்லை.
கலோரி, கொழுப்பு
மொறுமொறுக்களில், கலோரியும் அதிகம்; கொழுப்பும் அதிகம். அதனால், இவை குறைவாக உள்ள பாக்கெட்களை வாங்க வேண்டும். கொழுப்பு மிகுந்த சிப்ஸ்கள், குக்கீஸ் போன்ற மொறுமொறுக்களில், அதிக பட்சம் கொழுப்பில் இருந்து 30 சதவீதம் மேல் கலோரி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருப்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு போதும்; இதய, சர்க்கரை பாதிப்பு உள்ளவராக இருந்தால், இந்த அளவை விட குறைவான கொழுப்பு போதுமானது.
உப்பு பெறாத...
உப்பு, சர்க்கரை இரண்டுமே சிறிய வயதில் இருந்தே குறைத்து கொண்டு வந்தால், அவர்களுக்கு சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு அண்டவே செய்யாது. ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனை விட குறைவான உப்பு போதும்.
உடலுக்கு சக்தி வேண்டும்; அதற்காக, கார்போஹைட்ரேட் தேவை. காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் ஆகியவற்றில் தான் இந்த சத்து உள்ளது. வைட்டமின், கனிம சத்துக்களை 100 சதவீதம் வரை சாப்பிட்டாலும், உட லுக்கு நல்லது தான்.ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1,600ல் இருந்து 2,000 கலோரி வரை தேவை.
No comments:
Post a Comment