
சென்னை: தோல், பர்னிச்சர், பொம்மை, மொபைல் போன்களைத்தொடர்ந்து இந்திய தேசிய கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட சீன தயாரிப்பு காலணிகள் இந்தியாவில் குவியத்துவங்கி உள்ளன. தேச பக்தி உள்ளவர்களை இது பெரும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கியுள்ளது. சீனப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை மலிவு என்ற ஒரே காரணத்தால், சீன பொருட்கள் விற்பனை சக்கைபோடு போடுகிறது.
சீனாவின் எல்லையில் உள்ள சிக்கிம் மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் சீனா தயாரிப்புக்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களில், காலணிகளும் உண்டு. இந்த காலணிகளில் சில, இந்திய தேசிய கொடியின் வண்ணங்களை கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், சிக்கிம் மாநிலத்தில் இருந்து குடும்பத்துடன் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்த சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சிலர், இந்திய தேசியக் கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட காலணிகளை அணிந்திருந்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த ரயிலில் அவர்கள் பயணித்தபோது, சென்னை, அனகாபுத்தூர் நகராட்சி தலைவியின் கணவரான குமார் என்பவரும் பயணித்தார். அவர், இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் அமைந்திருந்த காலணிகளை சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அணிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அது குறித்து அவர்களிடம் கேட்டார். அதற்கு, "சீனாவில் இருந்து இந்த காலணிகள் கொண்டு வரப்பட்டு சிக்கிம் மாநிலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன' என்றனர்.
"நமது நாட்டின் தேசிய கொடியில் உள்ள வண்ணங்களை கொண்ட காலணிகளை அணியக் கூடாது. அது நாட்டிற்கு அவமரியாதை செய்வது போலாகும். எனவே, நீங்கள் அந்த செருப்புக்களை பயன்படுத்தாதீர்கள். தூக்கி எறிந்துவிடுங்கள்' என்றார். ஆனால், அதற்கு அவர்கள் உடன்படவில்லை. அந்த காலணிகளை கழற்றி, பைகளில் வைத்துக் கொண்டனர். தேசத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பம்.
No comments:
Post a Comment