
புனே, : ரூ.10.50 லட்சத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புனே, காசர்வாடி பகுதியில் உள்ள யூனியன் பேங் ஆப் இந்தியா கிளை உள்ளது. வங்கி கட்டிடத்தின் தரை தளத்தில் ஏ.டி.எம் இயந்திரம் அறை உள்ளது. இந்நிலையில் கடந்த திங்களன்று இரவு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒருசில புதுப்பித்தல் பணிகள் நடந்தன. மர வேலைகள் நடைபெற்றதால் தச்சு தொழிலாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றினர். இப்பணிகளை வங்கியின் துப்புரவு தொழிலாளரான தாமு என்பவர் மேற்பார்வையிட்டு வந்தார்.இந்நிலையில், காலை 7.30 மணிக்கு முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்த தாமு, ஏ.டி.எம் அறையில் இயந்திரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே வங்கியின் கிளை மேலாளர் சந்திரசேகர் குல்கர்னிக்கு தகவல் கொடுத்தார்.அவர் போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்த அன்று இரவு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ‘குரூப் 4‘ என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர் நிரஞ்சன் அதாகலேவிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவ நடந்த அன்று நிரஞ்சன் பணியில் இல்லை என தெரியந்தது. இயந்திரத்துக்குள் கடந்த சனிக்கிழமை .12 லட்சம் வைக்கப்பட்டது, வாடிக்கையாளர்கள் எடுத்தது போக மீதி ரூ.10.50 லட்சம் எந்திரத்துக்குள் இருந்திருக்க வேண்டும் என்று மேலாளர் தெரிவித்துள்ளார். அதிகாலை 2.30 மணிக்கு பிறகுதான் திருட்டு நடந்திருக்க வேண்டும், காரணம் 2.23 மணிக்கு கடைசியாக ஒருவர் பணம் எடுத்தது விசாரணையில் தெரிந்தது. Ô300 கிலோ எடை கொண்ட ஏ.டி.எம் எந்திரத்தை ஒருவரோ அல்லது இரண்டு பேரோ திருடியிருக்க முடியாது. இதை ஒரு பெரிய கும்பல் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Source : http://www.dinakaran.com
No comments:
Post a Comment