Friday, October 16, 2009

வெள்ளத்தில் நனைந்த 120 கோடி ரூபாய் நோட்டுகள்

ஐதராபாத்: ஆந்திராவில் சமீபத்தில் பெய்த மழையால் ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்த 120 கோடி ரூபாய் நோட்டுக்கள் வெள்ளத்தில் நனைந்துவிட்டன. இதனால், இந்த இயந்திரங்களிலிருந்து உடனடியாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சமீபத்தில் பெய்த மழையால் ஏராளமான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள் ளம் சூழ்ந்தது. இதனால், மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் கோவில் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த மாவட்டத்தில் உள்ள ஆந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க், ஐதராபாத் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் 35 தானியங்கி பண பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்.,) வெள் ளத்தில் மூழ்கின.
இதனால், பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர் கள் அவதிப்பட்டனர். மழை வெள்ளம் வடிந்த நிலையிலும், இந்த ஏ.டி.எம்., சேவை இன்னும் சகஜநிலைக்கு வரவில்லை. ஏ.டி.எம்., இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள 120 கோடி ரூபாய் அனைத் தும் வெள்ள நீரில் நனைந்து ஒட்டிகொண் டுள்ளதால், இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்., இயந்திரங்களிலிருந்து இந்த பணத்தை எடுத்து, ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுக்களை பெற வேண்டியுள்ளதால், கர்னூல் மாவட்ட ஏ.டி. எம்.,கள் செயல்பட இன் னும் ஒரு மாதம் ஆகும், என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: http://www.dinamalar.com

No comments: