Wednesday, October 28, 2009

ஆஸ்திரேலியாவில் கற்பழிப்பு வழக்கில் 16 கால்பந்து வீரர்கள் கைது


ஆஸ்திரேலியாவில் புறநகர் கால்பந்து அணியை சேர்ந்த 16 வீரர்கள் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டது. கடந்த 10-ந்தேதி மெல்போர்ன் அருகேயுள்ள சுற்றுலா தலமான பிலிப்தீவில் வைத்து 2 இளம்பெண்களை இவர்கள் கற்பழித்தனர்.

எனவே இவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இவர்கள் கற்பழிக்கப்பட்டது உண்மை என தெரியவந்தது.

இதை தொடர்ந்து இவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பண்டுரா பிரள்ஹில் பகுதியில் பதுங்கி இருந்த இவர்கள் நேற்று போலீசாரிடம் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட கால்பந்து வீரர்கள் 17 முதல் 20 வயது வரை உள்ளவர்கள். பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்

No comments: