
உலகின் வடபகுதியில் உள்ள அண்டார்டிகாவில் ஆர்டிக்கடல் பகுதி முழுவதும் ஐஸ் கட்டியாக உள்ளது. தற்போது உலகின் வெப்பநிலை மாற்றத்தால் கோடை காலத்தில் உருகும் பனிக்கட்டியின் அளவு அதிகமாகி கொண்டே வருகிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 20 வருடத்தில் அண்டார்டிகாவில் ஆர்டிக்கடலில் ஐஸ் கட்டிகளே இல்லாத நிலை உருவாகும். அதனால், சீல்வால்ரஸ் மற்றும் துருவ கரடி போன்ற உயிர்வாழ் இனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இந்த தகவலை கேம்பிரிட்ஜ் கடல் இயற்பியல் அறிஞர் பீட்டர் வாதம்ஸ் தெரிவித்துள்ளார். இவர் தனது குழுவினருடன் ஆர்டிக் கடல் பகுதியில் ஆய்வு நடத்தினார்.
அப்போது 1500 இடங்களில் கடலில் உள்ள ஐஸ் கட்டிகளில் துளையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் 280 மைல்களும் நடந்து சென்று ஆதாரங்களை திரட்டினர். அப்போது ஐஸ் கட்டியின் கடின தன்மை குறைவாக இருந்தது தெரியவந்தது.
மேலும், ரஷியாவின் வடக்கு பகுதியில் பூமியின் மேற்பரப்பில் நீல நிறத்துக்கு பதிலாக அதிக அளவில் வெள்ளை நிறம் தெரிகிறது. இந்த புகைப்படங்களை செயற்கை கோள்கள் எடுத்து அனுப்பியுள்ளன.
இதன் மூலம் பூமி அதிக அளவில் வெப்ப மயமாகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதன்மூலம் ஆர்டிக்கடல் பகுதியில் ஐஸ் கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சமீபத்தில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேராசிரியர் பீட்டர் வாதம்ஸ் எச்சரிக்கை விடுத்தார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment