Thursday, October 22, 2009

அதிரடி ஆள்குறைப்பு: சத்யம் நிறுவனத்தில் 6400 பேர் வேலை நீக்கம்



ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்தில் அதிபர் ராமலிங்க ராஜூ நிறுவனங்களில் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.



அதன் பிறகு சத்யம் நிறுவனத்தை மத்திய அரசு அமைத்த குழு நிர்வாகம் செய்தது. பின்னர் மகேந்திரா நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டரை வாங்கி விட்டது.



இதையடுத்து இந்த நிறுவனம் ஊழியர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இங்கு வேலை பார்த்த 9 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் கட்டாய விடுமுறை அளித்து பணியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி இருந்தனர். அவர்களில் 1600 ஊழியர்களை திரும்ப அழைத்து கொண்டனர்.



இந்த நிலையில் மீதி உள்ள 6400 ஊழியர்களுக்கு நிர்வாகம் நேற்று இ.மெயில் ஒன்று அனுப்பி உள்ளது. அதில் உங்களை பணியில் தொடர வைக்க முடியாது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் உங்கள் கணக்குகளை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



எனவே 6400 ஊழியர்களும் திடீரென வேலையை இழந்துள்ளனர்.

No comments: