Monday, October 19, 2009

டி.வி. நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வம்: தியேட்டரில் சினிமா பார்க்கும் ரசனை குறைந்தது



தியேட்டர்களில் சினிமா பார்க்கும் ரசனை ரசிகர்களிடம் குறைகிறது. பண்டிகை காலங்களில் டி.வி. நிகழ்ச்சிகளில் முடங்கும் போக்கு அதிகரிக்கிறது.

தீபாவளிக்கு ஆதவன், பேராண்மை, ஜகன் மோகினி வெளிவந்தன. இப்படங்களை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த பல வருடங்களை ஒப்பிடும்போது பாதி அளவே கூட்டம் வந்திருந்தன. சனி, ஞாயிறு இரு தினங்களும் முன்பதிவு செய்யாமல் கவுண்டர்களிலேயே டிக்கெட்டுகள் கிடைத்தன.

பெரும்பாலனோர் தீபாவளியையொட்டி ஒளிபரப்பான டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்கவே ஆர்வம் காட்டினர். ஹிட் படங்கள், பட்டிமன்றம் நிகழ்ச்சிகள், நட்சத்திர பேட்டிகள் என டி.வி. சேனல்கள் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தன. தியேட்டர்களுக்கு போவதை விட இதுவே அவர்களுக்கு உயர்வாக தெரிந்தது.

பெரிய நடிகர்கள் படங்கள் அதிகம் வராதது கூட்டம் குறைவுக்கு காரணம் என்கின்றனர். முந்தைய தீபாவளிகளில் முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும். ரசிகர்கள் போட்டி போட்டு தியேட்டர்களில் கட்- அவுட் வைத்து விழாக்கோலம் நடத்துவார்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம் போன்ற பிரபல நடிகர்கள் படங்கள் வராதது கூட்டத்தினர் வரத்தை குறைத்தது.

ரூ. 100, ரூ. 85 என்ற டிக்கெட் கட்டணங்கள், ரூ. 150 வரை வசூலிக்கப்படும். இரு சக்கர வாகன கட்டணங்கள் போன்றவைகளும் ரசிகர்கள் வரத்தை தடுத்தன. இதைவிட டெலிவிஷன்களில் நிறைய நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்ற ஆர்வமும் வீடுகளில் அவர்களை உட்கார வைத்தது.

இதுபற்றி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தியேட்டர்களில் கூட் டம் குறைந்திருப்பது நிஜம்தான். ஒரு காலத்தில் தீபாவளி என்றால் திரையரங்குகளில் கூட்டம் ஜே..... ஜே.... என்று இருக்கும். அது ஒரு பொற்காலம்.

முன்பெல்லாம் பெரிய நடிகர்கள் படங்கள் பண்டிகை காலங்களில் நிறைய வரும். இப்போது போட்டி வேண்டாம் என்று குறைத்துக் கொண்டனர். இதுவும் ஆரோக்கியமானதுதான். ஒரே நேரத்தில் படங்கள் வந்தால் லாபம் குறையும். தனித்தனியாக ரிலீசானால் அதிக தொகை ஈட்டலாம்.சேட்டிலைட் டி.வி.க்களின் வீச்சும் கூட்டத்தை குறைத்துள்ளது. ஒரே படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதும் கூட்டம் குறைவுக்கு காரணம். நிறைய தியேட்டர்களில் வெளியிடுவதால் 5 வாரத்தில் வசூலாகும் தொகையை ஓரிரு வாரத்தில் ஈட்டி விட முடியும். இது ஒரு வகையில் நல்ல விஷயமாக இருந்தாலும் இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கும் நிலைமை உள்ளது.

1 comment:

Subankan said...

ஆகா, இங்கே நிலமை தலைகீழ். இதைப் படித்துப்பாருங்கள்

ஆதவனும் அறுந்த செருப்புகளும்