Wednesday, October 14, 2009

இங்கிலாந்து விமான நிலையத்தில் பயணிகளை நிர்வாணமாக பரிசோதிக்கும் எக்ஸ்ரே கருவி



மான்செஸ்டர், அக். 14-

வெடிகுண்டுகள் போன்றவற்றை கண்டு பிடிக்க அதி நவீன கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலகில் தற்போது தீவிரவாதம் பெருகி விட்டது. வெடிகுண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பயணிகளை நிர்வாணமாக பரிசோதனை நடத்த எக்ஸ்ரே கருவி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருவி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்தில் பொருத்தப்பட உள்ளது.

இக்கருவி மூலம் பயணிகளின் உடைகளை அகற்றாமல் அப்படியே உடல் பகுதி முழுவதையும் நிர்வாணமாக ஸ்கேன் செய்ய முடியும். இதன் மூலம் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. அவர்களின் உடல் பாகங்களின் புகைப்படங்களை இதில் சேகரித்து வைக்க முடியாது.

இதன் மூலம் உடலில் மறைத்து வைத்து கடத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சுலபமாக கண்டு பிடிக்க முடியும்.

ஒருவர் செயற்கையாக பொருத்தியுள்ள மார்பகங்கள், கை, கால்கள் போன்ற வையும் தெளிவாக கண்டு பிடிக்க முடியும்.

No comments: