Wednesday, October 28, 2009

பால் விலை கடும் வீழ்ச்சியால் பசுக்களை கொல்லும் விவசாயிகள்


வாஷிங்டன், : அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் பால் தேவை குறைந்து, அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. எனவே, நஷ்டம் தாங்காமல் லட்சக்கணக்கான பசுக்களை விவசாயிகள் கொன்று வருகின்றனர். அமெரிக்காவில் தொடங்கிய நிதி நெருக்கடியின் பாதிப்பு, அங்கு இன்னும் நீடிக்கிறது. எனவே, வருமானம் குறைந்ததால் பால், பால் பொருட்கள் வாங்குவதை மக்கள் குறைத்துக் கொண்டனர். அதனால், தேவை குறைந்து, பால் சப்ளை அளவுக்கு அதிகமானது. எனவே, பால், பால் பொருட்கள் விலை படுவீழ்ச்சி அடைந்தது.இதனால், கடும் நஷ்டம் அடைந்த பண்ணை விவசாயிகள், தங்கள் பசுக்களை விற்கத் தொடங்கினர். பால் வர்த்தகம் சரியாக இல்லாத நேரத்தில் பசுக்களை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது. எனவே, பசுக்களை வளர்க்கவும், பாலை பயன்படுத்த முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர். இதையடுத்து, பசுக்களை இறைச்சிக்கு கொல்வதற்கு விற்கத் தொடங்கினர். இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க தேசிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2.25 லட்சம் பசுக்கள் இறைச்சிக்காக விற்கப்பட்டு கொல்லப்பட்டன. மேலும் அடுத்த சில மாதங்களுக்கு வாரம் 55,000 பசுக்கள் வீதம் கொல்லப்படும் என்று தெரிய வந்துள்ளதாக விவசாய நிபுணர்கள் கூறினர். பசுக்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைவதால் பால் சப்ளை குறைந்து விலை உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments: