Friday, October 16, 2009

இந்தோனேஷியாவில் அடைக்கலம் கேட்டு இலங்கை தமிழ் சிறுமி கெஞ்சல்


ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய படகில் சென்று கொண்டிருந்த 260 இலங்கை தமிழர்கள் இந்தோனேஷிய கடற்படை அதிகாரிகளால் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் பிருந்தா என்ற 9 வயது சிறுமியும் இருந்தாள். இவள் இந்தோனேஷிய அதிகாரிகளிடம் கெஞ்சி மன்றாடும் வீடியோ காட்சிகள் ஆஸ்திரேலிய டெலிவிஷனில் ஒளிபரப்பாகியது.

தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள், எங்கள் உயிர்களை பாதுகாக்க உதவுங்கள் நாங்கள் உங்கள் குழந்தைகள் எங்களை பற்றி சிந்தியுங்கள்.

எங்களது உயிர்களுக்கு பாதுகாப்பளித்து அடைக்கலம் தாருங்கள். எங்களை ஏதாவது ஒரு நாட்டுக்கு அனுப்பி விடுங்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பா விட்டாலும் பரவாயில்லை நாங்கள் இனி இலங்கையில் வாழ முடியாது.

இவ்வாறு அந்த சிறுமி கெஞ்சினாள். எங்களுக்கு தயவு காட்டுங்கள் என அந்த சிறுமி அதிகாரிகளிடம் மன்றாடிய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் தமிழர்கள் வாழ்வது மிகவும் ஆபத்தாக மாறி விட்டது எனக் கூறி இவர்கள் அனைவரும் ஆஸ்தி ரேலியாவுக்கு புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: http://www.maalaimalar.com

No comments: