Thursday, November 12, 2009

விவாகரத்து கேட்டு மனு: நடிகை காயத்ரி ரகுராம் வழக்கு 23-ந் தேதிக்கு தள்ளி வைப்பு; கணவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு


பிரபல சினிமா டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். இவர் சார்லி சாப்ளின், விசில் போன்ற படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ள தீபக் சந்திர சேகருக்கும், 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காயத்ரி கணவருடனேயே அமெரிக்காவில் தங்கினார்.

இவர்கள் குடும்ப வாழ்க்கையில் தற்போது திடீரென்று பிளவு ஏற்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், கணவரை பிரிந்து சென்னை வந்து விட்டார். குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்தார். கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு முதன்மை குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கணவர் தீபக்சந்திரசேகர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையையும் வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

No comments: