Wednesday, November 25, 2009

நேபாளம் நாட்டில் 3 லட்சம் ஆடு-மாடுகளை பலியிட்டு ரத்த திருவிழா


ஆண்டாண்டு காலமாக பல நல்ல பழக்கங்கள் பலவற்றை விட்டுவிட்டு இதே போல் காடுமிரண்டிதனமான செயலை செய்வது தான் நம் குணமே, நேபாளமாவது மிருகங்களை தான் பலியிட்டது மேதகு இந்தியாவோ இதேபோல் ஈழ மக்களை கொள்ள ஆதரவு தந்து சாதனை படைத்திருகிறது. வாழ்க காந்திய கொள்கைகள். .
இந்தியாவை ஒட்டியுள்ள நேபாள நாட்டின் தென் பகுதியில் பாரா மாவட்டத்தில் பரையப்பூர் கிராமம் உள்ளது. இங்கு காதிமை என்ற இந்து கோவில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான எருமைமாடுகளையும், லட்சக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலி கொடுப்பார்கள். இது தான் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும். மிருகங்களின் ரத்த வெள்ளத்தில் தான் இக் கோவிலின் சிறப்பு பூஜை நடை பெறும்.

நேபாளத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள். இந்த திருவிழா நேற்று நடந்தது.
காதிமை என்பது இந்து மதத்தின் பெண் கடவுள். இந்த கோவில் திருவிழா 2 நாட்கள் நடைபெறும் இதில் பங்கேற்க இந்தியாவில் உள்ள எல்லைப்புற மாநிலங்கலான பீகார், உத்தரபிரதேசம் மேற்கு வங்காள உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் புறப்பட்டு சென்றனர்.

திருவிழா தொடங்கும் முன்பு காதிமை அம்மனின் புகழ் நீடுழி வாழ்க என பக்தர்கள் உரக்க கோஷமிட்டனர். பின்னர் இந்த கோவிலின் தலைமை பூசாரி 2 எலிகள் 2 புறாக்கள் மற்றும் ஆடு பன்றியை பலியிட்டார். பிறகு கோவிலிலுக்கு அருகேயுள்ள வயலுக்கு விலங்குகளை வெட்டி பலியிடும் 250 பேர் ஊர்வலமாக சென்றனர். இங்கு அவர்கள் தங்கள் பலியை தொடந்தனர்.

பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக காணிக்கையாக வழங்கிய ஆடு மாடுகளை வரிசையாக வெட்டி சாய்ந்தனர். இவற்றில் 20 ஆயிரம் எருமை மாடுகள் மற்றும் 3லட்சம் ஆடுகள் கோழிகள் அடங்கும். மிருகங்களை வெட்டி பலி கொடுத்ததால் இந்த இடம் முழுவதும் ரத்த குளமாக காட்சி அளித்தது. இதையடுத்து விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.

இதற்கிடையே மிருகவதை கூடாது என மிருகங்கள் பாதுகாப்பு உரிமை அமைப்பினர் பிரசாரம் செய்தனர். இருந்தும் அதை யாரும் கண்டு கொள்ள வில்லை. பூஜையின் போது மிருங்களை பலியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் நேபாள அரசு கண்டுக்கொள்ளவில்லை. ஆண்டாண்டு காலமாக இந்துக்கள் மிருகங்களை பலிகொடுத்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

இது போன்று பலி கொடுப்பதால் தங்களின் குறைகளை காதிமை அம்மன் தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே மக்களின் உணர்வை மதிக்கிறோம் என்று கூறி இந்த பலியை தடைசெய்ய மறுத்து விட்டது. மேலும் இத்திருவிழா நடத்த நேபாள அரசு ரூ.45 லட்சம் ஒதுக்கியுள்ளது.

No comments: