
கான்பூர் டெஸ்டில் தொடக்க வீரர் காம்பீர் அபாரமாக விளையாடி சதம் (167) அடித்தார். தொடர்ந்து அவர் அடித்த 4-வது சதம் ஆகும். நியூசிலாந்துக்கு எதிராக மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நேப்பியர் டெஸ்டில் 137 ரன்னும், வெலிங்டன் டெஸ்டில் 167 ரன்னும், அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் அகமதாபாத்தில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 114 ரன்னும் எடுத்தார். தொடர்ந்து 4 சதம் அடித்த 3-வது இந்திய வீரர் காம்பீர் ஆவார். இதற்கு முன்பு கவாஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து உள்ளனர். உலக அளவில் 13-வது வீரர் ஆவார்.
கவாஸ்கர் 1976-77 ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 108 ரன் எடுத்தார். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 113, 127 மற்றும் 118 ரன்களை முறையே எடுத்தார். ராகுல்டிராவிட் 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 115, 148, 217 ரன்களையும், அதை தொடர்ந்து வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 100 ரன்னையும் எடுத்தார்.
No comments:
Post a Comment