Monday, November 9, 2009

“80 வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்


ஐம்பதிலும் ஆசை வரும், ஆசையுடன் பாசம் வரும்” என்பார்கள் அது உண்மைதான். அதுவும் 80 வயதில்தான் செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்ற தகவலை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எட்வர்ட் வியூமான் இதுபற்றிய ஆய்வு நடத்தினார். 57 முதல் 85 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரிடமும் எந்த வயதில் “செக்ஸ்” ஆசை அதிக அளவில் இருந்தது என்று கருத்து கேட்கப்பட்டது.

1,550 ஆண்களிடமும், 1,755 பெண்களிடமும் வீடு வீடாக சென்று சர்வே செய்யப்பட்டது. இவர்களில் 68 சதவீதம் ஆண்களும், 42 சதவீதம் பெண்களும் தாங்கள் தற்போதும் “செக்ஸ்” சில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

இவர்களில் 80 முதல் 85 வயது வரை உள்ளவர்கள் தான் அதிக அளவில் “செக்ஸ்” சில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, “செக்ஸ்” உறவு வைத்து கொள்ளாதவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளுடன் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் கணவன்- மனைவி உறவும் நெருக்கமாக இல்லாததும் தெரிய வந்தது.

“செக்ஸ்” உறவு வைத்து கொள்பவர்களில் 60 வயதினரைவிட 80 வயதினர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்றும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

No comments: