Monday, November 2, 2009

சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி: மந்திரவாதி கைது



புவனேஸ்வரம், நவ. 2-

ஒரிசா மாநிலம் கட்டாக் அருகேயுள்ள கத்பூரை சேர்ந்தவன் சைபுல்லா அலி (வயது 12). நேற்று முன்தினம் இவன் அங்குள்ள தனது பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு பிரத்யும்னா நாயக் என்கிற காளியா (42) என்பவன் வந்தான். தனது வசிய சக்தியால் சிறுவன் சைபுல்லா அலியை மயக்கி கடத்தி சென்றான்.

இதற்கிடையே, ககத்பூரில் உள்ள ஒரு கட்டிடத்தின் முன்பு வெட்ட வெளியில் அவனை படுக்க வைத்திருந்தான். இந்த நிலையில் சைபுல்லா அலிக்கு மயக்கம் தெளிந்தது.

சைபுல்லா அலி கண்விழித்து பார்த்தபோது அவன் அருகே காளியா அமர்ந்து கண் மூடிய நிலையில் மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தான். ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த அலி அங்கிருந்து நைசாக தப்பினான்.

நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித் தான். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று காளியாவை கைது செய்தனர்.

அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை யில் அவன் ஒரு மந்திரவாதி என தெரிய வந்தது.

சிறுவன் சைபுல்லா அலியை நரபலி கொடுத்து அதன் மூலம் கடவுளிடம் இருந்து அதிக சக்திகளை பெற திட்டமிட்டு இருந்ததாக கூறினான்.

இதுபோன்று பல குழந்தைகளை கடத்தி நரபலி கொடுத் திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே, அவனிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments: