Monday, November 9, 2009

மகன் காதலித்ததால் தாய்- தங்கையை நிர்வாணமாக்கி ஊர்வலம்: காதலி சகோதரர்கள் ஆத்திரம்


என்ன ஒரு வெட்கக் கேடான விஷயம்! தவறு செய்வது ஒருவர்;தண்டிப்பது அப்பாவிகளையா? அவன் செய்த தவறுக்கு அவன் தாயும் தங்கையும் என்ன செய்ய முடியும்? கண்டிப்பாக காவல்துறையும்,சமூக அமைப்புகளும் இதில் தலையிட்டு, காதலித்தது குற்றமென்றால், அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கிவிட்டு, மற்ற இருவரது இழப்புக்கு உரிய நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உத்தரபிரதேச மாநிலம் கல்யாண்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் புஜ் விர்சிங் (24), இவர் அந்த ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார்.

இது பெண்ணின் சகோதரர்கள் தர்மேந்திரா, வீரேந்திராவுக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து புஜ்விர்சிங் வீட்டுக்கு திரண்டு வந்தனர். புஜ்விர்சிங் அப்போது அங்கு இல்லை.

அவருடைய தாயார் மற்றும் தங்கை மட்டும் இருந்தனர். தாயாரையும், தங்கையையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கினார்கள். பின்னர் அவர்களை அடித்து உதைத்து தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தெரியவந்தது. அவர்கள் தர்மேந்திரா, வீரேந்திரா இருவரையும் கைது செய்தனர். மேலும் பலரை தேடிவருகின்றனர்.

No comments: