இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத்பொன்சேகா தோல்வி அடைந்தார். அவருக்கு 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 ஓட்டுக்களே (40.15 சதவீதம்) கிடைத்தன.
தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய முதலே ராஜபக்சே முன்னிலையில் இருந்தார். அப்போது சரத்பொன்சேகா கொழும்பில் உள்ள தன் அலுவலக வீட்டில் இருந்தார். அந்த அலுவலகத்தை ராணுவம் சுற்றி வளைத்தது.
இதையடுத்து அலுவலகத்தில் இருந்து வெளியேறிய சரத்பொன்சேகா கொழும்பில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார். ராணுவத்தில் பணியாற்றி ராஜினாமா செய்த சுமார் 400 வீரர்களும் அவருடன் ஓட்டலில் இருந்தனர். இதனால் சரத்பொன்சேகா ராணுவப் புரட்சியில் ஈடுபடக்கூடும் என்ற தகவல் பரவியது.
இதையடுத்து அந்த நட்சத்திர ஓட்டலை சிங்கள ராணுவம் முற்றுகையிட்டது. இதனால் பயந்துபோன சரத்பொன்சேகா, தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறினார். அதோடு இந்தியாவிடமும் உதவி கேட்டார். இந்த நிலையில் அவரை தேர்தலில் களம் இறக்கி விட்ட தலைவர்கள் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அவருடன் இருந்தனர்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த சரத் பொன்சேகா, தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளது. மக்களை அரசு ஏமாற்றிவிட்டது. விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன் என்றார்.
இதற்கிடையே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை வேட்டையாடும் நடவடிக்கையை சிங்கள ராணுவம் தொடங்கியது. முதல் கட்டமாக 10 முன்னாள் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதை அறிந்ததும் தன்னையும் கைது செய்து விடுவார்கள் என்று பொன்சேகா பயந்தார்.
ஆனால் சரத்பொன் சேகாவை கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை. சரத் பொன்சேகாவை யாரும் கட்டுப்படுத்தி ஓட்டலில் வைக்கவில்லை என்று இலங்கை சார்பில் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காராவும் சரத் பொன்சேகாவை கைது செய்யும் எண்ணம் இல்லை என்றார்.
இதற்கிடையே பொன்சேகாவுக்கு ஆதரவாக ஓட்டலில் இருந்த முன்னாள் ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை விசாரணைக்கு தனி இடத்தில் கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது. சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்படுவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கொழும்பில் எதிர்க்கட்சியினரிடம் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் தலைமறைவாகி விட்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குகள் தொடரப்படும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆதரவாளர்கள் வேட்டையாடப்பட்டதை அறிந்ததும், வெளிநாட்டுக்கு புறப்பட சரத்பொன்சேகா முயற்சி செய்தார். ஆனால் அவரால் விமான நிலையத்துக்கு செல்ல இயலவில்லை. இதையடுத்து அவர் நட்சத்திர ஓட்டலை காலி செய்து விட்டு தனது வீட்டுக்குப்புறப்பட்டுச் சென்றார்.
கொழும்பில் உள்ள அவரது வீட்டையும் சிங்கள ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. இதன் மூலம் சரத்பொன் சேகா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் சிங்கள ராணுவ அதிகாரிகள் இது பற்றி எந்த கருத்தும் வெளியிடவில்லை.
ராணுவத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அச்சம் அடைந்துள்ள சரத்பொன்சேகா வெளிநாட்டுக்கு சென்று விடவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.இது தொடர்பாக பிபிசிக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
இலங்கையில் சட்டம்- ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. நான் விமான நிலையத்துக்கு செல்லப் புறப்பட்டேன். ஆனால் ராணுவத்தினர் தடுத்துவிட்டனர். நான் இலங்கையைவிட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்று கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இப்போதைக்கு நான் வெளிநாடு செல்ல விரும்புகிறேன். நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுள்ளது. எந்த நாட்டுக்கு போகப்போகிறேன் என் பதை இப்போதே சொல்ல இயலாது.
நான் இலங்கை மக்களை மறக்கமாட்டேன். மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததால்தான் தோற்றேன்.
இவ்வாறு சரத்பொன் சேகா கூறினார்.

No comments:
Post a Comment