
ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்த “கோவா” படம் நாளை (29-ந்தேதி) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தியாகராய நகரைச் சேர்ந்த கமலேஷ் கோத்தாரி என்பவர் சவுந்தர்யாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் “கோவா” படம் தயாரிக்க தன்னிடம் ரூ. 2 கோடி கடன் வாங்கியதாகவும்,அதற்கான ராயல்டி தொகை ரூ. 30 லட்சத்தையும் சேர்த்து படத்தை ரிலீஸ் செய்யும் முன் தந்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை தரவில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பணத்தை திருப்பித் தராமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கூறி இருந்தார்.
இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராமசுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சவுந்தர்யா தரப்பில் வக்கீல் ஹரிசங்கர் ஆஜராகி, கடன் தொகையை திருப்பித் தர தயாராக இருக்கிறோம். படத்துக்கு தடைவிதிக்க வேண்டாம். சிறிது கால அவகாசம் தரவேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று மாலை நடக்கிறது.
No comments:
Post a Comment