
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் சமீபத்தில் நடந்தது. விழாவில், கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசும்போது, "செம்மொழி மாநாடு நடத்த, கோவையை ஏன் தேர்வு செய்தனர் தெரியுமா?' என்று, பார்வையாளர்களிடம் கேட்டார். அங்கிருந்த ஆசிரியர்கள், "விருந்தோம்பல், பண்பு, பாரம்பரியம், கலாசாரம்' என ஒவ்வொருவரும், தங்களுக்கு தெரிந்த பதில்களை கூறினர். இதைக் கேட்ட வாணவராயர், "இந்த பண்புகள் நம்மிடம் உள்ளது; ஆனால், தமிழ் உணர்வு குறைந்து கொண்டே வருகிறது. குறைவாக இருப்பதை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக தான், கோவையில் செம்மொழி மாநாடு நடக்கிறது' என்றார். "செம்மொழி மாநாட்டுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!' என வியந்தனர் பார்வையாளர்கள்.
No comments:
Post a Comment