வாஷிங்டன் : இன்றைய நிலையில் பத்தில் ஒரு அமெரிக்கருக்கு வேலை இல்லை. அதை மாற்றும் பொருளாதார நடவடிக்கை தொடரும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரை நிகழ்த்திய அதிபர் ஒபாமா கூறியதாவது: இந்தியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவர்கள், தங்கள் உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்குகின்றனர். அவர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் தீவிரமாக முதலீடு செய்கின்றனர். பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கும். பொருளாதார சிக்கல்கள் முடிந்து விட்டன. கடினமான காலம் கடந்து விட்டது. அதன் பாதிப்புகள் தான் எஞ்சி உள்ளன. நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை கண்டறிய வேண்டும்.
பத்தில் ஒரு அமெரிக்கர் இன்னும் வேலை இல்லாமல் உள்ளார். பல வர்த்தகர்களும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சமுதாயம் ஆகியவை பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. பொருளாதார மந்த நிலை, அமெரிக்க குடும்பங்களை பெரிதும் பாதித்தன. இந்த பிரச்னைகளை தீர்க்க, 300 கோடி ரூபாய் அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இழந்த 70 லட்சம் வேலை வாய்ப்புகளை திரும்ப பெற்று விட முடியாது.
நீண்ட கால பொருளாதார வளர்ச்சியளிக்கும், புதிய அடித்தளம் அமைப்பதே, இதற்கான ஒரே வழி. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கான (அவுட் சோர்சிங்) வரிச் சலுகைகளை ரத்து செய்ய, இது தான் சரியான தருணம். அமெரிக்காவிற்குள், வேலை வாய்ப்புகளை தக்க வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, இந்த நடவடிக்கைகளை உள்ளடக்கிய வேலைவாய்ப்பு மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து, வெளிநாட்டிற்கு வழங்கப்படும் வேலைகளால், பெரியளவில் பயனடையும நாடு இந்தியா. எனவே, வரிச் சலுகை ரத்து போன்ற நடவடிக்கையால், அந்நாட்டிற்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு ஒபாமா கூறினார்.

No comments:
Post a Comment