
மைசூரு: அதிகமில்லை ஜென் டில்மேன்! ஒரு 500 மில்லி அடித்தால் போதும், உடம்பு "கிண்'ணென்று இருக்கும்; புத்துணர்ச்சிக்கு குறைவிருக்காது. உடலில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். "அட , இது இவ்ளோ நாள் தெரியாம போயிடுச்சே...' என்று என்னவோ சிந்தனையை ஓடவிடாதீங்க. நீங்க நினைப்பது போல, "அந்த' 500 மில்லி இல்லே, இது பசு "சர்ர்ர்'ரை பிடிச்சு சுத்திகரித்து சாப்பிடணும்.
மேலே படியுங்க: மைசூரு மகாராஜா ஆண்டபோது ஆரம்பிக்கப்பட்ட பழம்பெரும் அமைப்பு, மைசூரு பிஞ்சாரேபோல் சொசைட்டி. சாந்திலால் சோர்டியா என்பவர் இப்போது தலைவராக இருக்கிறார்.பசுவதை தடை உட்பட பல சமூகப்பணிகளை செய்து வரும் இந்த அமைப்பு, இப்போது புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த அமைப்பு தான், பசுவின் சிறுநீரை சேகரித்து, சூடாக்கி சுத்திகரித்து, அதன் மருத்துவ குணம் மாறாமல் பாட்டிலில் அடைத்து விற்பது தான் இதன் திட்டம். பசுவின் சிறுநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்று சில அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால், அரசு ஆதரவோ, உதவியோ இதற்கு இதுவரை கிடைக்கவில்லை.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் அகில பாரதிய பசு பாதுகாப்பு சங்கம் தான் இந்த திட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது. அங்குள்ள பசுக்களின் சிறுநீரை சேகரித்து, சுத்திகரித்து விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, மைசூரில் உள்ள அமைப்பு, இப்போது திட்டத்தை துவங்கி உள்ளது. இதுகுறித்து, சாந்திலால் கூறுகையில், "தினமும் 500 மில்லி லிட்டர் அளவுள்ள 15 பாட்டில்கள் விற்பனை ஆகிறது. பாட்டில் பசு சிறுநீர் விலை 50 ரூபாய்.
"சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படுவதுடன், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகளையும் தீர்க்கிறது பசு சிறுநீர். தினமும் ஒரு பாட்டில் குடித்து வந்தால், உடலுக்கு புத்துணர்ச்சியும், எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது' என்று தெரிவித்தார். ஆயுர்வேத டாக்டர் சந்திரசேகர் கூறுகையில், "பசு சிறுநீரை சுத்திகரித்து குடித்து வந்தால், சர்க்கரை நோய் அண்டாது; உடலில் உள்ள செல்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது உண்மை தான்' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment