புதுடில்லி : "எங்களுக்கு வேலை நிலைக்குமா? நீக்கிடுவாங்களா? கையைப் பார்த்து சொல்லுங்க' என்று ஜோதிடர்களைப் பார்த்து கேட்போர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள கணிசமான பேர், ஜோதிடத்துக்கு அடிமைப்பட்டவர்கள் தான். ஆனால், மேலே சொல்லப் பட்டவர்கள் நம்மூர் வாசிகள் அல்ல; வெளிநாட்டவர்! வியப்பாக இருக்கிறதா, உண்மை தான்.
அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து மருத்துவ சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல, சுற்றுலா வரும் போது, ஜோதிடம் பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர். இது மட்டுமின்றி, "இ-மெயில்' மூலம் வெளிநாடுகளில் இருந்து கேட்கும் வெளிநாட்டவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜோதிடர்கள் பலரும் இப்போது, வீட்டு வாசலில் போர்டு போட்டு உட்காருவதை விரும்பவில்லை. எல்லாரும் வெப்சைட் ஆரம்பித்து, "இ-மெயிலில்' தான் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். வெப்சைட் பார்த்து, "இ-மெயிலில்' கேள்வியைக் கேட்டால், அதிலேயே பதில் அனுப்பி விடும் ஜோதிடர்கள், பல மாநிலங்களில் பெருகி விட்டனர். குறிப்பிட்ட பிரபல ஜோதிடர்களுக்கு ஒரு நாளைக்கு வெளிநாடுகளில் இருந்து 30 கேள்விகளாவது வருகின்றன.
"அஸ்ட்ராயோகி டாட் காம்' என்ற ஜோதிட வெப்சைட் வைத்துள்ள டில்லியைச் சேர்ந்த மீனா கபூர் கூறுகையில், "எனக்கு தினமும் 30 பேரிடம் இருந்து "இ-மெயில்' வருகிறது. இதற்குப் பதிலளிக்கவே நேரம் சரியாகி விடுகிறது. முன் போல, ஜோதிடம் சொல்ல தனியாக நேரம் ஒதுக்கி,வாடிக்கையாளர்களைப் பார்ப்பதில் சிரமம் இருக்கிறது' என்றார். வெப்சைட்டில் ஜோதிடத் தகவல்களைப் போட்டு, இன்டர்நெட் வழியில் டாலரில் பணம் வருவதால் இவரைப் போன்ற ஜோதிடர்களுக்கு, உள்ளூரில் ரூபாயில் பணம் வாங்குவது குறைவாகத் தெரிகிறது. அதனால், வெப்சைட் மூலம் வாடிக்கையாளர்களைச் சேர்க்கவே விரும்புகின்றனர். "இன்டர்நெட் மூலம், பெரும்பாலும் வேலை பற்றி தான் பலரும் கேட்கின்றனர். "நான் சாப்ட்வேர் வேலையில் இருக்கி றேன். நிதி நெருக்கடியில் என் வேலை நீடிக்குமா?' என்பது போன்ற கேள்விகள் தான் அதிகமாக உள்ளன. இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் இது போன்ற கேள்வியைத் தான் கேட்கின்றனர்' என்றும் கபூர் தெரிவித்தார். ஆன்-லைனில், இவரைப் போன்ற ஜோதிடருடன் பேச நிமிடத்துக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தான் இந்த அளவுக்கு அதிக பணம் கொடுத்து ஜோதிடம் பார்க்க முடிகிறது. அவர்கள் தான் அதிக பணம் தருகின்றனர் என்பதால், அவர்களைக் குறிவைத்தே ஆன்-லைனில் பிசினஸ் செய்ய ஜோதிடர்கள் தீவிரமாக உள்ளனர்.

No comments:
Post a Comment