
கொல்கத்தா, அக்.12-
ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டீவ்வாக். டெஸ்டில் 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். 32 சதம் அடித்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை தற்போது யுவராஜ்சிங்தான் சிறந்த பேட்ஸ்மேன். அவர் அதிரடியாக ஆடிய ஆட்டத்தை வைத்து இதை சொல்லலாம். தில்சான் சிறப்பாக ஆடி வருகிறார். 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சாளர்களில் மலிங்கா சிறந்த பவுலர்.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிச்சேல்ஜான்சன் ஆகியோர் திறமை வாய்ந்தவர்கள். ரோஸ் டெய்லரும் அந்த பட்டியலில் இணைகிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி குறித்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பையில் தொடக்க சுற்றில் வெளியேறியது. ஆசஷ் தொடரை இழந்தது ஆகியவையால் ஆஸ்திரேலிய அணி குறித்து ஏளனம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்குகிறது. இங்கிலாந்து தொடரை வென்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது ஆகியவை உதாரணங்களாகும்.
சிறந்த வீரர்கள் ஓய்வு பெற்றதால் ஆஸ்திரேலிய அணி சில மாதங்கள் தத்தளித்தது. தற்போது இளம் வீரர்கள் வாட்சன், பெய்ன் சிறப்பாக விளையாடி அணியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment