Thursday, October 29, 2009

தனி மாநிலம் கோரி சந்திரசேகரராவ் உண்ணாவிரதம்: 30 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பு

உங்களுக்கு CM பதவி வேண்டும் அதுதான் உண்மை. உங்களுக்கு ஆந்திர மாநிலம் CM போஸ்ட் தந்தால் தெலுங்கானா தனி மாநிலம் போராட்டம் நடக்குமா?.

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி போராடி வருகிறது. இக்கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்து வெளியேறினார். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு எத்தனையோ போராட்டம் நடத்தி விட்டோம். எந்த பலனும் இல்லை. இதனால் அடுத்த மாதம் 3-வது வாரத்தில் ஒரு நாள் 30 ஆயிரம் தற் கொலைப்படை தொண்டர்களுடன் அமர்ந்து நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன், எங்கள் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: