Thursday, October 29, 2009

அமெரிக்க பள்ளியில் மாணவியை கற்பழித்து படம் பிடித்த மாணவர்கள்


அமெரிக்காவில் கலி போர்னியா அருகே உள்ளது ரிச்மாண்ட் நகரம். இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது பள்ளி அருகே நின்ற 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவளை மடக்கி மறைவான இடத்துக்கு இழுத்து சென்றனர்.

அங்கு அவர்கள் வலுக்கட்டாயமாக மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். கற்பழிப்பு நடந்தபோது மற்ற மாணவர்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுடன் கேலிச்சிரிப்புடன் நடனமாடினார்கள். கற்பழிப்பை வீடியோ படமும் எடுத்தனர்.

இத்தனைக்கும் அந்த வழியாக பலர் நடந்து சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. 2 1/2 மணி நேரம் கற்பழிப்பு நீடித்தது.

அப்போது அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அந்த இடத்துக்கு வந்தபோது எல்லாம் முடிந்து இருந்தது. மாணவி அரை குறை மயக்கத்தில் மேஜையில் விழுந்து கிடந்தாள். மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்தேகத்தின் பேரில் 5 மாணவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த ரிச் மாண்ட் நகரில் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரமாக இது உள்ளது.

கற்பழிப்பு நடந்தது பற்றி இந்த பள்ளி முன்னாள் மாணவி ஜென்னி ஸ்டின் பெர்க் கூறும்போது, அந்த பள்ளியில் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே நான் முன்கூட்டியே மாற்றலாகி வேறு பள்ளிக்கு வந்து விட்டேன் என்றார்.

No comments: