Showing posts with label விஞ்ஞானம். Show all posts
Showing posts with label விஞ்ஞானம். Show all posts

Thursday, November 12, 2009

3 நாள் தங்க ரூ.21 கோடி முதல் விண்வெளி ஓட்டல் 2012ல் திறப்பு


பார்சிலோனா, : உலகின் முதல் விண்வெளி ஓட்டல் Ôகேலாக்டிக் சூட்Õ, 2012ல் திறக்கப்படுகிறது. ரூ.14,100 கோடியில் அமைக்கப்படும் அந்த ஓட்டலில் 3 நாள் தங்க கட்டணம் ரூ.20.7 கோடி. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட். இவர் கேலாக்டிக் சூட் என்ற பெயரில், விண்வெளியில் சொகுசு ஓட்டல் அமைப்பதில் ஈடுபட்டுள்ளார். 2012ல் அதை திறக்க திட்டமிட்டு உள்ளார். விண்வெளி ஓட்டல் அமைக்க ரூ.14,100 கோடி செலவிடப்படுகிறது. Ôகேலக்டிக் சூட்Õ திறக்கப்பட்டதும், அங்கு 3 நாட்கள் தங்க ரூ.20.7 கோடி கட்டணம் செலுத்த வேண்டும். முன்பதிவு செய்வோருக்கு, பயண தினத்துக்கு 8 வாரங்கள் முன்பிருந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.ஒவ்வொரு முறையும் 4 பேர் ஓட்டலுக்கு செல்லலாம். அவர்களுடன் 2 விண்வெளி வீரர்கள் வருவார்கள். பூமியில் இருந்து 450 கி.மீ. உயரத்தில் அமையும் ஓட்டல் என்பதால், பயணிகள் மிதக்க வேண்டியிருக்கும். எனவே, விண்வெளி வீரர்களுக்கான வெல்க்ரோ உடைகள் தரப்படும். அதை அணிந்து ஓட்டல் அறைகளின் சுவரைப் பிடித்து Ôஸ்பைடர்மேன்Õ போல விருந்தாளிகள் நகரலாம். ஓட்டலை ராக்கெட் மூலம் அடைய ஒன்றரை நாள் ஆகும். விண்வெளி ஓட்டல், மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில் சுற்றும். அதில் 80 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை சுற்றி வரலாம். அதன்படி 24 மணி நேரத்தில் சூரியன் தோன்றி மறைவதை 15 முறை பார்க்கலாம். விண்வெளி ஓட்டலில் தங்க 200 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். www.galactic suite.com என்ற இணையதளம் மூலம் 43 பேர் முன்பதிவு செய்து விட்டனர்.

Wednesday, November 4, 2009

ரூ.19 ஆயிரம் கோடி செலவில் சகாரா பாலைவன வெயில் மூலம் மின்சாரம் தயாரிக்கதிட்டம்



மியூனிக், நவ. 4-
ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் உலகிலேயே மிகப்பெரிய சகாரா பாலைவனம் உள்ளது. இங்கு கடுமையாக வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் மூலம் (சூரிய ஒளி மூலம்) மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாலைவனத்தில் கண்ணாடிகள் பதித்து அதன் மூலம் சூரிய வெளிச்சத்தை வெப்பமாக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த வெப்பத்தின் மூலம் தண்ணீரை கொதிக்க வைத்து நீராவியின் மூலம் டர்பன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்படும்.

இந்த மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள 12 மிகப்பெரிய கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கு “டெசர்ட் டெக்லாண்டஸ் டிரியஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.19 ஆயிரம் கோடி (400 கோடி டாலர்) செலவிடப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு கேபிள்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.

வருகிற ஜனவரி மாதம் பார்க்கலாம்: 108 ஆண்டுகளுக்கு பின் தெரியும் அதிசய கங்கண சூரிய கிரகணம்- கன்னியாகுமரியில் விசேஷ ஏற்பாடு


வருகிற 2010 ஜனவரி மாதம் 2 கிரகணங்கள் நிகழ உள்ளன. ஒன்று ஜனவரி முதல்நாளான புத்தாண்டு அன்று நிகழ உள்ள சந்திரகிரகணம், 2-வது ஜனவரி 15-ந்தேதி நிகழ உள்ள சூரியகிரகணம்.

இந்த சூரியகிரகணம் 108 ஆண்டுகளுக்கு பிறகு வரக்கூடிய ஒருகங்கண சூரிய கிரகணம் ஆகும். தமிழகத்தில் பல பகுதிகளில் இதை காணமுடியும்.

புவியை நிலவு நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது.இதனால் புவிக்கு அருகே வரும்போது 3,57,200 கிலோ மீட்டர் தூரத்திலும் புவியை விட்டு வெளியில் செல்கையில் 4,07,100 கிலோ மீட்டர் தொலைவிலும் சுற்றிலும் நிலவு இருக்கும். தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்ற அளவு சற்று சிறியதாக இருக்கும்.
எனவே புவியை விட்டு விலகி செல்கையில் ஒரு சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழு மையாக மறைக்க முடியாது. அதிகபட்ச கிரகணத்தின் போது சூரியனின் வெளி விளிம்பு ஒரு கங்கணம்போல வட்டமாக ஒளியுடன் தெரியும். இதுவே கங்கண சூரிய கிரகணம் எனப்படும்.

1901 ஆம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. 108 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜனவரி 15-ந் தேதி மீண்டும் சூரிய கிரகணம் தெரிய உள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலும் சந்திரனின் நிகழ்வின் மையப்பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு அதிகபட்ச சூரிய கிரகணத்தின்போது ஓரளவு வட்டமான வளைய வடிவில் சூரியன் தோன்றும், மேலும் கங்கண சூரிய கிரகணம் நிகழும்கால அளவு அதிகமாக இருக்கும்.

கன்னியாகுமரியில் கங்கண சூரிய கிரகணத்தை காண்பதற்கான விசேஷ ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கலை செல்வன், சுற்றுலா அதிகாரி அரிராதா கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், ஆர்.டி.ஓ.நடராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நிருபர் களிடம் கூறியதாவது:

108 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தெரியும் கங்கண சூரிய கிரகணம் கன்னியா குமரியில் காலை 11.04 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 3.05 மணிவரை கிரகணம்தெரியும். 1.14 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது , அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும். கண் பார்வை கூட இழக்கலாம்.

எனவே தகுந்த அறிவியல் முறைப்படி சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கன்னியாகுமரியில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு தமிழ்நாடு சயின்ஸ் அண்ட்டெக்னாலஜி உதவியுடன் கண் கண்ணாடிகள் மூலமாகவும், திரைகள் மூலமாகவும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம், கேரளதவிர இந்தியாவின் பிறபகுதிகளில் இது பகுதி அளவில் சூரிய கிரகணமாக தெரியும். அவர்கள் சூரியனின் ஒரு பாதியை சந்திரன் மறைப்பதுபோல் இருப்பதை காண்பார்கள். சென்னையில் கிரகணத்தின் போதுசுமார் 88.5 விழுக்காடு வரை சூரியன் மறைக்கப்படும்.

Friday, October 30, 2009

மிக உயரமான ராக்கெட் சோதனை ஓட்டம் வெற்றி


வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப் பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. நிலவுக்கு செல்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், உலகிலேயே மிக உயரமான ராக்கெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 327 அடி உயரம் உடையது. அதிர்வுகள், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கணிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் இதில் உள்ளன. இதற்கு "எரிஸ்-1 எக்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக இயங்கினால், "ஸ்பேஸ் டாக்சி சர்வீஸ்'ஆக செயல்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். 2,225 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டின் பரிசோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் புளோரிடா மாகாணத்தில் உள்ள, கென்னடி ஏவுதளத்தில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால், ராக்கெட் சோதனை 3 மணி நேரம் தாமதமானது. பின்னர், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை ஓட்டம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களில் பாராசூட் மூலம் அட்லாண்டிக் கடலில் இறக்கப்பட்டது. பின்னர், திட்டமிட்டபடி கப்பல் மூலம் மீட்கப்பட்டது.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாப் கபன்னா கூறுகையில், "இதை என்னால் நம்ப முடியவில்லை. இது என் வாழ்நாளில் மிகவும் அற்புதமான நேரம். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது, என் கண்களில் கண்ணீர் வடிந்தது' என்றார்.
எரிஸ் ராக்கெட் பரிசோதனை மேலாளர் பாப் எஸ் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்ததை விட, பரிசோதனை ஓட்டம் அதிகம் வெற்றிகரமாக முடிந்தது. இது மிகப்பெரிய வெற்றி' என்றார்.