அமெரிக்காவில் சமீபகாலமாக அன்னிய முதலீடு கணிசமாக குறைந்து வருவதாக அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார். அயல்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படாது என்ற அறிவிப்பால் உள்நாட்டு நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமான வெளிநாடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இதைப்பற்றியெல்லாம் அமெரிக்க அரசு கவலைப்படாது என்ற ஒபாமா, தொழில்நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரிச்சலுகை அளித்து அரசின் பணத்தை விரயம் செய்ய விரும்பவில்லை என்றார். டெக்சாஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒபாமா மேலும் பேசியது: தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதைவிட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச் சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள் கிடைக்கும். இதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும். இந்தத் திட்டம் நிச்சயம் அமெரிக்க மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமையும். அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப் பிரச்னையை எதிர்கொள்வதென்பது அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான பணிகள் இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இனிமேல் அயல்பணி ஒப்படைக்கப்படாது. இதில் அரசு உறுதியாக உள்ளது. இது தவிர, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நான் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினேன். நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை நான் நன்கு அறிவேன். இது தாற்காலிகமானதுதான். இதில் இருந்து விடுபட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் ஒபாமா.÷அட்லாண்டா மாகாணத்தில் இன்னும் சில மாதங்களில் மிகவும் முக்கியமான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும் என கருதப்படுகிறது. இதனால் ஒபாமா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில், இனி அயல்பணி ஒப்படைக்கப்படாது என்று கூறி வருகிறார்.
Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts
Wednesday, August 11, 2010
அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை
அமெரிக்காவில் சமீபகாலமாக அன்னிய முதலீடு கணிசமாக குறைந்து வருவதாக அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார். அயல்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படாது என்ற அறிவிப்பால் உள்நாட்டு நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமான வெளிநாடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இதைப்பற்றியெல்லாம் அமெரிக்க அரசு கவலைப்படாது என்ற ஒபாமா, தொழில்நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரிச்சலுகை அளித்து அரசின் பணத்தை விரயம் செய்ய விரும்பவில்லை என்றார். டெக்சாஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒபாமா மேலும் பேசியது: தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதைவிட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச் சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள் கிடைக்கும். இதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும். இந்தத் திட்டம் நிச்சயம் அமெரிக்க மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமையும். அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப் பிரச்னையை எதிர்கொள்வதென்பது அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான பணிகள் இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இனிமேல் அயல்பணி ஒப்படைக்கப்படாது. இதில் அரசு உறுதியாக உள்ளது. இது தவிர, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நான் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினேன். நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை நான் நன்கு அறிவேன். இது தாற்காலிகமானதுதான். இதில் இருந்து விடுபட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் ஒபாமா.÷அட்லாண்டா மாகாணத்தில் இன்னும் சில மாதங்களில் மிகவும் முக்கியமான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும் என கருதப்படுகிறது. இதனால் ஒபாமா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில், இனி அயல்பணி ஒப்படைக்கப்படாது என்று கூறி வருகிறார். சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்
பஸ், ரயில் நிற்பதற்குள் படியில் இருந்து குதிக்கும் பயணி போலிருக்கிறது. பழக்கதோஷத்தில் விமானம் நிற்பதற்குள் லக்கேஜை எடுக்க முயன்று, ஊழியரின் தலையில் இடித்தார். ‘சாரி’ சொல்லாமல் தன்னையே திட்டியதால் வெறுத்த ஊழியர், விமானத்தை மட்டுமின்றி வேலையிலிருந்தே இறங்கிச் சென்று விட்டார்.அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார்.
கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி. தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார்.
விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர். தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின.
வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.
விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார்.
பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார். விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது.
Monday, August 9, 2010
அமெரிக்காவில் விநோதம் அப்பாவுக்கு ஓட்டு போடாதீர் மகள் உருக்கமான வேண்டுகோள்
அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு நடக்கும் தேர்தலில் ‘தந்தைக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று மகள் பிரசாரம் செய்வது பரப ரப்பை ஏற்படுத்தி வருகிறது.அமெரிக்காவின் ஆக்லகாமா பகுதியின் 3 நகரங்களில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் பதவிக்கு (நம்மூர் நாட்டாமை போல) தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜான் மன்தூத் நிற்கிறார். மும்முனை போட்டி நிலவும் தேர்தலில், ‘எனது அப்பாவுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என ஜானின் மகள் ஜேன் பிரசாரம் அனல் பறக்கிறது.
நல்ல குடும்பஸ்தராக உள்ளவருக்கே நீதி சொல்லும் பதவியை அளிப்பது மக்களின் வழக்கம். எனவே, ‘எனக்கு 3 மகள்கள், நிறைய பேரன், பேத்திகள்’ என்று ஜான் விளம்பரம் செய்து வருகிறார். ஆனால், ‘இதுபோன்ற எந்த சொந்தத்துடனும் ஜானுக்கு தொடர்பே இல்லை. அவர் நம் பகத்தன்மை இல்லாதவர். அவரால் சரியாக நீதி வழங்க முடியாது’ என்று மகள் ஜேன், தனது கணவர் ஆண்ட்ரூவுடன் இணைந்து பத்திரிகை களில் விளம்பரம் தருகிறார். இதற்காக ஒரு இணைய தளத்தையே இந்த தம்பதி தொடங்கியுள்ளது. இதுபற்றி ஜான் மன்தூத் கூறுகையில், ‘‘1981ல் மனைவியை விவாகரத்து செய்தேன். அப்போது சிறுமியாக இருந்த ஜேன், அந்த பிரிவால் இப்போது என்னை வெறுக்கிறாள். அது வும் காரணமாக இருக்கலாம்’’ என்றார்.
Wednesday, August 4, 2010
கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்

கம்ப்யூட்டர் மற்றும் கால்சென்டர் பணிகளை இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்றார். அப்போது அங்கு 75 லட்சம் பேர் வேலை இழந்தனர். இதற்கு அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 6 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
இதற்கிடையே 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. பொருளாதார வளர்ச்சி குறைந்ததால் 80 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
இதனால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது. அதை தூக்கி நிறுத்தும் வகையில் ஒமாபா அரசு புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது. அதன்படி அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு வெளிநாடுகளுக்கு பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.
தற்போது இத்திட்டம் விரைவில் அதிரடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்தகவலை அட்லாண்டா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியா, சீனாவுக்கு வெளி பணிகள் வழங்கும் நிறுவனங்களுக்கு அச்சலுகை வழங்கப்பட மாட்டாது.
பொதுவாக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் கம்ப்யூட்டர் மற்றும் கால் சென்டர் பணிகளை வழங்குகின்றன. இந்த பணியில் இருநாட்டு ஊழியர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.
ஒபாமா அரசின் நடவடிக்கையால் இனி இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் கால்சென்டர் நிறு வனங்களும், அதில் பணி புரியும் ஊழியர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
Labels:
அமெரிக்கா,
தொழில்நுட்பம்
Friday, January 29, 2010
அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிவு; அவரது பேச்சை 4 3/4 கோடி மக்களே கேட்டனர்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முன்தினம் அந்நாட்டு பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சை அமெரிக்காவில் உள்ள டெலிவிஷன்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின. அப்போது, அவரது பேச்சை அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். எத்தனை சதவீதம் பேர் அவரது பேச்சை கேட்டனர். என்று நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், அவரது செல்வாக்கு சரிந்து இருப்பது தெரிய வந்தது.
ஏனெனில் அவரது சமீபத்திய பேச்சை 48 மில்லியன் (4 கோடியே 80 லட்சம்) பேர் மட்டுமே கேட்டுள்ளனர். புஷ் அதிபராக இருந்தபோது அவரது முதல் பேச்சை 40 மில்லியன் (4 கோடி) மக்களே கேட்டனர். அதே சமயம் ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரையை 62 மில்லியன் (6 கோடியே 20 லட்சம்) பேர் கேட்டனர்.
அதிபராக பதவி ஏற்றவுடன் 1993-ம் ஆண்டு முதன் முதலாக பில் கிளிண்டன் ஆற்றிய உரையை 66.9 மில்லியன் (6 கோடியே 69 லட்சம்) பேர் கேட்டனர். அதிபர் ஒபாமா பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேச்சை 52.3 மில்லியன் (5 கோடியே 23 லட்சம்) பேர் கேட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அமெரிக்க மக்களிடையே அதிபர் ஒபாமாவுக்கு உள்ள கோபமே காரணம் என தெரிகிறது. ஏனெனில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், அவற்றை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்காதது போன்றவையே காரணம் என கூறப்படுகிறது.
ஏனெனில் அவரது சமீபத்திய பேச்சை 48 மில்லியன் (4 கோடியே 80 லட்சம்) பேர் மட்டுமே கேட்டுள்ளனர். புஷ் அதிபராக இருந்தபோது அவரது முதல் பேச்சை 40 மில்லியன் (4 கோடி) மக்களே கேட்டனர். அதே சமயம் ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரையை 62 மில்லியன் (6 கோடியே 20 லட்சம்) பேர் கேட்டனர்.
அதிபராக பதவி ஏற்றவுடன் 1993-ம் ஆண்டு முதன் முதலாக பில் கிளிண்டன் ஆற்றிய உரையை 66.9 மில்லியன் (6 கோடியே 69 லட்சம்) பேர் கேட்டனர். அதிபர் ஒபாமா பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேச்சை 52.3 மில்லியன் (5 கோடியே 23 லட்சம்) பேர் கேட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அமெரிக்க மக்களிடையே அதிபர் ஒபாமாவுக்கு உள்ள கோபமே காரணம் என தெரிகிறது. ஏனெனில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், அவற்றை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்காதது போன்றவையே காரணம் என கூறப்படுகிறது.
Labels:
அமெரிக்கா
Thursday, January 28, 2010
பத்தில் ஒரு அமெரிக்கருக்கு வேலை இல்லை : ஒபாமா வெளிப்படை

வாஷிங்டன் : இன்றைய நிலையில் பத்தில் ஒரு அமெரிக்கருக்கு வேலை இல்லை. அதை மாற்றும் பொருளாதார நடவடிக்கை தொடரும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரை நிகழ்த்திய அதிபர் ஒபாமா கூறியதாவது: இந்தியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவர்கள், தங்கள் உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்குகின்றனர். அவர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் தீவிரமாக முதலீடு செய்கின்றனர். பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கும். பொருளாதார சிக்கல்கள் முடிந்து விட்டன. கடினமான காலம் கடந்து விட்டது. அதன் பாதிப்புகள் தான் எஞ்சி உள்ளன. நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை கண்டறிய வேண்டும்.
பத்தில் ஒரு அமெரிக்கர் இன்னும் வேலை இல்லாமல் உள்ளார். பல வர்த்தகர்களும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சமுதாயம் ஆகியவை பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. பொருளாதார மந்த நிலை, அமெரிக்க குடும்பங்களை பெரிதும் பாதித்தன. இந்த பிரச்னைகளை தீர்க்க, 300 கோடி ரூபாய் அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இழந்த 70 லட்சம் வேலை வாய்ப்புகளை திரும்ப பெற்று விட முடியாது.
நீண்ட கால பொருளாதார வளர்ச்சியளிக்கும், புதிய அடித்தளம் அமைப்பதே, இதற்கான ஒரே வழி. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கான (அவுட் சோர்சிங்) வரிச் சலுகைகளை ரத்து செய்ய, இது தான் சரியான தருணம். அமெரிக்காவிற்குள், வேலை வாய்ப்புகளை தக்க வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, இந்த நடவடிக்கைகளை உள்ளடக்கிய வேலைவாய்ப்பு மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து, வெளிநாட்டிற்கு வழங்கப்படும் வேலைகளால், பெரியளவில் பயனடையும நாடு இந்தியா. எனவே, வரிச் சலுகை ரத்து போன்ற நடவடிக்கையால், அந்நாட்டிற்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு ஒபாமா கூறினார்.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரை நிகழ்த்திய அதிபர் ஒபாமா கூறியதாவது: இந்தியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவர்கள், தங்கள் உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்குகின்றனர். அவர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் தீவிரமாக முதலீடு செய்கின்றனர். பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கும். பொருளாதார சிக்கல்கள் முடிந்து விட்டன. கடினமான காலம் கடந்து விட்டது. அதன் பாதிப்புகள் தான் எஞ்சி உள்ளன. நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை கண்டறிய வேண்டும்.
பத்தில் ஒரு அமெரிக்கர் இன்னும் வேலை இல்லாமல் உள்ளார். பல வர்த்தகர்களும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சமுதாயம் ஆகியவை பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. பொருளாதார மந்த நிலை, அமெரிக்க குடும்பங்களை பெரிதும் பாதித்தன. இந்த பிரச்னைகளை தீர்க்க, 300 கோடி ரூபாய் அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இழந்த 70 லட்சம் வேலை வாய்ப்புகளை திரும்ப பெற்று விட முடியாது.
நீண்ட கால பொருளாதார வளர்ச்சியளிக்கும், புதிய அடித்தளம் அமைப்பதே, இதற்கான ஒரே வழி. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கான (அவுட் சோர்சிங்) வரிச் சலுகைகளை ரத்து செய்ய, இது தான் சரியான தருணம். அமெரிக்காவிற்குள், வேலை வாய்ப்புகளை தக்க வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, இந்த நடவடிக்கைகளை உள்ளடக்கிய வேலைவாய்ப்பு மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து, வெளிநாட்டிற்கு வழங்கப்படும் வேலைகளால், பெரியளவில் பயனடையும நாடு இந்தியா. எனவே, வரிச் சலுகை ரத்து போன்ற நடவடிக்கையால், அந்நாட்டிற்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு ஒபாமா கூறினார்.
Labels:
அமெரிக்கா
சத்யம் ராமலிங்க ராஜுவை ஏழையாக அறிவித்தது கோர்ட்

நியூயார்க் : சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவை, பரம ஏழையாக அறிவித்ததோடு, அவர் கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்து, அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குறித்து, அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கடந் தாண்டு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மற்றும் இவரது சகோதரர் மீது அமெரிக்க கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றில், தாங்கள் பரம ஏழை என்று ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் பரம ஏழை என்பதால், அமெரிக்காவில் எங்களுக்காக வாதாட வக்கீல் நியமிக்கவோ, கோர்ட் கட்டணம் செலுத்தவோ அல்லது கோர்ட் விதிக்கும் பிற நிதி உத்தரவுகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நியூயார்க் கோர்ட் நீதிபதி பார்பரா ஜோன்ஸ், தன் உத்தரவில் கூறியதாவது: ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர், தாங்கள் பரம ஏழைகள் என்பதற்கு போதுமான அளவு விளக்கமளித்துள்ளனர். அவர்களால் அமெரிக்க சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை. எனவே, அவர்களுக்கு கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பார்பரா ஜோன்ஸ் கூறினார்.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குறித்து, அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கடந் தாண்டு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மற்றும் இவரது சகோதரர் மீது அமெரிக்க கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றில், தாங்கள் பரம ஏழை என்று ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் பரம ஏழை என்பதால், அமெரிக்காவில் எங்களுக்காக வாதாட வக்கீல் நியமிக்கவோ, கோர்ட் கட்டணம் செலுத்தவோ அல்லது கோர்ட் விதிக்கும் பிற நிதி உத்தரவுகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நியூயார்க் கோர்ட் நீதிபதி பார்பரா ஜோன்ஸ், தன் உத்தரவில் கூறியதாவது: ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர், தாங்கள் பரம ஏழைகள் என்பதற்கு போதுமான அளவு விளக்கமளித்துள்ளனர். அவர்களால் அமெரிக்க சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை. எனவே, அவர்களுக்கு கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பார்பரா ஜோன்ஸ் கூறினார்.
அமெரிக்காவில், மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்; இந்தியர்களின் கோரிக்கை ஏற்பு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென் மேற்கு ஹீஸ்டன் பகுதியில் ஹில்கிராப்ட் மாவட்டத்தில் தெற்குஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளனர்.
இவர்கள் இங்கு பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பலர் அலுவலக பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதியை “குட்டி இந்தியா” என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.
எனவே டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக விடுத்து வந்த இவர்களது கோரிக்கை மகாத்மா காந்தியின் 141-வது பிறந்த ஆண்டான தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டுவதாக ஹ¨ஸ்டன் நகர மேயர் ஆன்னிஸ்பார்கர் அறிவித்தார். அப்போது இந்திய கவுன்சில் ஜெனரல் சஞ்ஜீவ்அரோரா உடன் இருந்தார்.
மகாத்மா காந்தியின் பெயர் சூட்டுவதற்கு ஹில்கிராப்ட் பகுதியில் வாழும் 75 சதவீத மக்கள் கையெழுத்திட்டு ஆதரவு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து நகரசபை சட்டப்படி மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதாக இந்திய கலாச்சார மையத்தின் செய்தி தொடர்பாளர் மனிஷா மேதா தெரிவித்துள்ளார். தற்போது இந்த மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
Wednesday, January 20, 2010
அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கி சூடு வீட்டுக்குள் புகுந்து 8 பேர் சுட்டுக்கொலை; மர்ம மனிதன் “திடீர்” தாக்குதல்

அமெரிக்காவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் திடீரென வெறிப்பிடித்தது போல மக்களை நோக்கி சரமாரியாக சுட்டு கொல்வது வாடிக்கையான சம்பவமாக உள்ளது.
இன்று இதே போன்ற சம்பவம் ஒன்று அங்குள்ள வெர்ஜினியா நகரில் நடந்தது.
வெர்ஜினியா மாநிலம் ஒதுக்குபுறமாக உள்ள வீட்டுக்குள் ஒரு மர்ம மனிதன் நுழைந்தான். கையில் துப்பாக்கியுடன் சென்ற அவன் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 7 பேர் உயிர் இழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தான்.
துப்பாக்கி சூடு நடப்பது பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் ஹெலிகாப்டரில் அந்த வீட்டுக்கு சென்று சுற்றி வளைத்தனர்.
ஹெலிகாப்டரை நோக்கியும் மர்ம மனிதன் சுட்டான். இதில் 4 குண்டுகள் ஹெலிகாப்டரில் பாய்ந்தது. ஒரு குண்டு ஹெலிகாப்டர் பெட்ரோல் டேங்கில் பட்டது.
எனவே ஹெலிகாப்டரை அவசரமாக அருகில் உள்ள மைதானத்தில் தரை இறக்கினார்கள். பின்னர் அதில் இருந்து இறங்கிய போலீசார் வீட்டை சுற்றி வளைத்தனர். அதற்குள் சாலை வழியாகவும் போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.
இதனால் மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி விட்டான். போலீசார் அங்கும் புகுந்து தேடி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து கிடந்த ஒருவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இத்துடன் சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
மர்ம மனிதன் யார்? எதற்காக சுட்டான்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இறந்த 8 பேருமே இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள். மர்ம மனிதனும் அவர்களுக்கு அறிமுகமான வனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Monday, January 4, 2010
அமெரிக்கர்களை துரத்தும் பயங்கரவாத பகீர் : விமானநிலையத்தில் நுழைந்த மர்ம மனிதன் !

நியூயார்க்: அமெரிக்காவில் சர்வதேச விமானநிலையத்தில் மர்ம மனிதன் நுழைந்துள்ளதால் அவனை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் ஆங்காங்கே நிறுத்தி வைத்து கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள் முதல் அங்கு பாதுகாப்பு பலமுனை கட்டங்களாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக விமான நிலையங்கள் கடும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் பதிவு : இந்நிலையில் நியூயார்க் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள நியூஜெர்ஸி விமான நிலையம் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள செக்போஸ்ட்டில் இருந்து பாதுகாப்பையும் மீறி ஒரு பிரமுகர் விமான நிலையத்தில் நுழைந்துள்ளார். இது பாதுகாப்பு துறை வீடியோ மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். உடனடியாக பயணிகள் ஆங்காங்கோ நிறுத்தப்பட்டனர். விமான நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து அந்த மர்ம மனிதனை தேடும் பணி நடந்து வருகிறது. செக்பாய்ன்ட் வழியாக இந்த மர்ம மனிதன் பாதுகாப்பு படைவீரர்களின் கண்ணை மூடி பயணிகளோடு, பயணியாக நுழைந்து சென்றிருப்பதாக அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., தெரிவித்துள்ளது. மர்ம மனிதனை தேடும்பணி காரணமாக அங்கிருந்து விமானங்கள் எதுவும் கிளம்பவில்லை. பயணிகள் பலர் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
விமானத்தில் வந்த நைஜீரிய இளைஞன் : கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விமானத்தில் பயணித்த நைஜீரிய இளைஞர் ஒருவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் அல்குவைதாவுடன் தொடர்பு உடையவன் என்றும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில் இருந்த வீரர் சக வீரர்களை சுட்டு கொன்றார். ஈராக்கிற்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல மனம் இல்லாமல் இருந்த காரணத்தினால் அவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறப்பட்டது. ஆப்கனில் பணி செய்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆப்கனில் சி.ஐ.ஏ., அதிகாரிகள் சிலர் கொல்லப்ப்பட்டனர்.
தூதரகம் மூடல் : பாதுகாப்பு காரணமாக ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மூட முடிவு செய்துள்ளதுஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்குவைதாவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இங்கு காலி செய்வதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 2001 ம் ஆண்டில் செப்டம்பர் 11 தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இதில் இருந்து அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையம் உயர்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்து.
14 நாட்டு விமானத்தில் பயங்கரவாதிகள்: ? அமெரிக்கா வந்து செல்லும் 14 நாட்டு விமானங்கள் முக்கிய கவனத்தில் எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஆப்கன், அல்ஜீரியா, ஈராக், லெபனான், லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான், சவுதிஅரேபியா, சோமாலியா, ஏமன், ஆகிய 10 நாட்டு விமானங்கள் உன்னிப்பாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த விமானம் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படும். மேலும், கியூபா, ஈரான், சடான், சிரியா ஆகிய 4 நாடுகளும் இந்தப்பட்டியலில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது.
சமீபத்தில் விமான நிலையங்களில் பயணிகள் கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். இதனால் பல நாட்டு பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தற்போதைய நியூயார்க் விமான நிலையத்தில் மர்ம மனிதன் நுழைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Labels:
அமெரிக்கா,
குற்றம்,
தீவிரவாதம்
Monday, November 23, 2009
மைக்கேல் ஜாக்சன் கையுறை 1.75 கோடி ரூபாய்க்கு ஏலம்

நியூயார்க்: மறைந்த பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கையுறை, ஒரு கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.உலக புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், அதிகப்படியான போதை மருந்தை உட் கொண்டதால், கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். இவருக்கு அதிக மருந்தை கொடுத்த அவரது டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் நியூயார்க்கில் உள்ள ஜூலியன் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை 25 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகும், என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஹாங்காங்கை சேர்ந்த வர்த்தகர் பாஸ்மேன் மா என்பவர், மைக்கேல் ஜாக்சனின் வெள்ளை கையுறையை ஒரு கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.இதே போல ஜாக்சன் 89ம் ஆண்டு "பேட்' என்ற இசைச் சுற்றுலாவின் போது பயன்படுத்திய கருப்பு நிற மேலாடை, ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்ப்பார்க்கப்பட்ட தொகையை விட 20 மடங்கு அதிகமாகும்.
Wednesday, November 18, 2009
லஞ்ச வழக்கில் அமெரிக்கா எம்.பி.க்கு 13வருடம் ஜெயில்

அமெரிக்காவில் குடியரசு கட்சி எம்.பி.யாக இருப்பவர் வில்லியம் ஜெப்பர்சன். இவர் லுசியானா மாகாணத்தில் உள்ள நியூஒர்லன்ஸ் பகுதியை சேர்ந்தவர். லஞ்சம் மூலம் பணம் சம்பாதித்தல், கருப்புபணம் பதுக்கி வைத்தல் மற்றும் நேர்மையற்ற முறையில் ஆப்பிரிக்காவில் பல வழிகளில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தல் என இவர் மீது சுமார் 16குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவருக்கு 27வருடங்கள் ஜெயில் தண்டனை வழங்க வேண்டும் என அரசு வக்கீல் வாதிட்டார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட வில்லியமுக்கு 13வருடங்கள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அமெரிக்கா வரலாற்றில் லஞ்ச ஊழல் வழக்கில் ஒரு எம்.பி.க்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய தண்டனை இது வாகும்.
Tuesday, November 10, 2009
அமெரிக்காவில் மூக்குத்தி அணிந்த மாணவி பள்ளியில் இருந்து “சஸ்பெண்டு”

அமெரிக்காவில் உள்ள யுதா பகுதியில் உள்ள பவுன்டிபுல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அமர்தீப்சிங். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். இந்தியரான இவர் பெத்ல கேமில் லெகியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிகிறார்.
இவரது மகள் சுஷானா பாப்லா (12). இவள் பவுன் டிபுல்லில் உள்ள பப்ளிக் பள்ளியில் 7-வது வகுப்பு படித்து வருகிறாள். இவள் சீக்கிய மத மரபுப்படி மூக்கில் சிறிய அளவிலான மூக்குத்தி அணிந்திருந்தாள். இது ஒழுக்க கேடானது என்று கூறி அப்பள்ளி நிர்வாகம் மாணவி சுஷானாவை கடந்த மாதத்தில் இருந்து சஸ்பெண்டு செய்தது.
பள்ளியின் இச்செயலுக்கு சுஷானாவின் தந்தை அமர்தீப்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் கலாசார சின்னமாக மூக்கில் மூக்குத்தியை அணிகின்றனர். அதுபோலதான் எனது மகளும் மூக்குத்தி அணிந்து இருக்கிறார்.
மூக்குத்தி அணிவது அவளது உரிமை மற்றும் மத அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே அவளது கலாசார உரிமையில் தலையிட பள்ளி நிர்வாகத்துக்கு உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாணவி சுஷானா கூறும்போது, மூக்குத்தி அணிந்துள்ள நான் இந்தியாவில் உள்ள எனது நெருங்கிய உறவினர்களுடன் இருப்பது போன்று உணர்கிறேன். ஏனென்றால் எனது குடும்பத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றாள்.
இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Source: http://www.maalaimalar.com
Monday, November 9, 2009
செரீனா வில்லியம்ஸ் சினிமாவில் நடிக்கிறார்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். பல்வேறு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள அவர் தற்போது முதல் நிலை வீராங்கனையாக திகழ்கிறார்.
டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சினிமாவில் நடிக்க செரீனா வில்லியம்ஸ் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2005-ம் ஆண்டு நான் டெலிவிஷன் தொடரில் நடித்தேன். டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் பிரவேசம் ஆவேன். நடிப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். கேமிரா முன்பு நிற்பதை விரும்புகிறேன்.
ஆக்ஷன் நடிகை ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். உதைப்பது, வேகமாக ஓடுவதை விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சினிமாவில் நடிக்க செரீனா வில்லியம்ஸ் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2005-ம் ஆண்டு நான் டெலிவிஷன் தொடரில் நடித்தேன். டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் பிரவேசம் ஆவேன். நடிப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். கேமிரா முன்பு நிற்பதை விரும்புகிறேன்.
ஆக்ஷன் நடிகை ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். உதைப்பது, வேகமாக ஓடுவதை விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: http://www.maalaimalar.com
Labels:
அமெரிக்கா,
விளையாட்டு
மைக்கேல் ஜாக்சன் படம் ரூ.500 கோடி வசூல் சாதனை

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த அவர் தீவிர பயிற்சிகளை எடுத்து வந்தார். அந்த பயிற்சி காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டிருந்தது.
கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் மைக்கேல் ஜாக்சன் பயிற்சி காட்சிகளை வாங்கி புதிய இசைப்படமாக தயாரித்தது. அந்த படத் துக்கு திஸ் இஸ் இட் என்று பெயரிடப்பட்டது.
கடந்த மாதம் 28-ந்தேதி இந்த படம் உலகம் முழு வதும் வெளியிடப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்தப் படியாக ஜெர்மன், இங் கிலாந்து, ஜப்பான் நாடுகளில் இந்த படம் அதிக பிரதிகள் வெளியிடப்பட்டது.
ரூ. 500 கோடி
திஸ் இஸ் இட் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் 2 வாரத்தில் இந்த படம் ரூ. 500 கோடி வாரி குவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்த படியாக ஜப்பான் நாட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் மைக்கேல் ஜாக்சன் பயிற்சி காட்சிகளை வாங்கி புதிய இசைப்படமாக தயாரித்தது. அந்த படத் துக்கு திஸ் இஸ் இட் என்று பெயரிடப்பட்டது.
கடந்த மாதம் 28-ந்தேதி இந்த படம் உலகம் முழு வதும் வெளியிடப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்தப் படியாக ஜெர்மன், இங் கிலாந்து, ஜப்பான் நாடுகளில் இந்த படம் அதிக பிரதிகள் வெளியிடப்பட்டது.
ரூ. 500 கோடி
திஸ் இஸ் இட் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் 2 வாரத்தில் இந்த படம் ரூ. 500 கோடி வாரி குவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்த படியாக ஜப்பான் நாட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
Source: http://www.maalaimalar.com
Friday, October 30, 2009
மைக்கேல் ஜாக்சன் சினிமா ஒரே நாளில் ரூ.100 கோடி வசூல்

மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடைசியாக நடித்த சினிமா படம் “தி இஸ் இட்”. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.35 கோடியே 20 லட்சமும், இங்கிலாந்தில் ரூ.63 கோடியே 50 லட்சமும், பிரான்சில் ரூ.5 கோடியே 70 லட்சத்துக்கும் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
Source: http://www.maalaimalar.com
மிக உயரமான ராக்கெட் சோதனை ஓட்டம் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப் பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. நிலவுக்கு செல்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், உலகிலேயே மிக உயரமான ராக்கெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 327 அடி உயரம் உடையது. அதிர்வுகள், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கணிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சென்சார் கருவிகள் இதில் உள்ளன. இதற்கு "எரிஸ்-1 எக்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக இயங்கினால், "ஸ்பேஸ் டாக்சி சர்வீஸ்'ஆக செயல்படும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். 2,225 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டின் பரிசோதனை ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் புளோரிடா மாகாணத்தில் உள்ள, கென்னடி ஏவுதளத்தில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால், ராக்கெட் சோதனை 3 மணி நேரம் தாமதமானது. பின்னர், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை ஓட்டம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களில் பாராசூட் மூலம் அட்லாண்டிக் கடலில் இறக்கப்பட்டது. பின்னர், திட்டமிட்டபடி கப்பல் மூலம் மீட்கப்பட்டது.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாப் கபன்னா கூறுகையில், "இதை என்னால் நம்ப முடியவில்லை. இது என் வாழ்நாளில் மிகவும் அற்புதமான நேரம். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது, என் கண்களில் கண்ணீர் வடிந்தது' என்றார்.
எரிஸ் ராக்கெட் பரிசோதனை மேலாளர் பாப் எஸ் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்ததை விட, பரிசோதனை ஓட்டம் அதிகம் வெற்றிகரமாக முடிந்தது. இது மிகப்பெரிய வெற்றி' என்றார்.
Source: http://www.dinakaran.com
Thursday, October 29, 2009
அமெரிக்க பள்ளியில் மாணவியை கற்பழித்து படம் பிடித்த மாணவர்கள்

அமெரிக்காவில் கலி போர்னியா அருகே உள்ளது ரிச்மாண்ட் நகரம். இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது பள்ளி அருகே நின்ற 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவளை மடக்கி மறைவான இடத்துக்கு இழுத்து சென்றனர்.
அங்கு அவர்கள் வலுக்கட்டாயமாக மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். கற்பழிப்பு நடந்தபோது மற்ற மாணவர்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுடன் கேலிச்சிரிப்புடன் நடனமாடினார்கள். கற்பழிப்பை வீடியோ படமும் எடுத்தனர்.
இத்தனைக்கும் அந்த வழியாக பலர் நடந்து சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. 2 1/2 மணி நேரம் கற்பழிப்பு நீடித்தது.
அப்போது அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் அந்த இடத்துக்கு வந்தபோது எல்லாம் முடிந்து இருந்தது. மாணவி அரை குறை மயக்கத்தில் மேஜையில் விழுந்து கிடந்தாள். மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்தேகத்தின் பேரில் 5 மாணவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த ரிச் மாண்ட் நகரில் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரமாக இது உள்ளது.
கற்பழிப்பு நடந்தது பற்றி இந்த பள்ளி முன்னாள் மாணவி ஜென்னி ஸ்டின் பெர்க் கூறும்போது, அந்த பள்ளியில் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே நான் முன்கூட்டியே மாற்றலாகி வேறு பள்ளிக்கு வந்து விட்டேன் என்றார்.
அங்கு அவர்கள் வலுக்கட்டாயமாக மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். கற்பழிப்பு நடந்தபோது மற்ற மாணவர்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுடன் கேலிச்சிரிப்புடன் நடனமாடினார்கள். கற்பழிப்பை வீடியோ படமும் எடுத்தனர்.
இத்தனைக்கும் அந்த வழியாக பலர் நடந்து சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. 2 1/2 மணி நேரம் கற்பழிப்பு நீடித்தது.
அப்போது அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் அந்த இடத்துக்கு வந்தபோது எல்லாம் முடிந்து இருந்தது. மாணவி அரை குறை மயக்கத்தில் மேஜையில் விழுந்து கிடந்தாள். மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்தேகத்தின் பேரில் 5 மாணவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த ரிச் மாண்ட் நகரில் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரமாக இது உள்ளது.
கற்பழிப்பு நடந்தது பற்றி இந்த பள்ளி முன்னாள் மாணவி ஜென்னி ஸ்டின் பெர்க் கூறும்போது, அந்த பள்ளியில் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே நான் முன்கூட்டியே மாற்றலாகி வேறு பள்ளிக்கு வந்து விட்டேன் என்றார்.
Source: http://www.maalaimalar.com
Friday, October 23, 2009
40 அங்குல 'டிவி'க்கு அமெரிக்காவில் தடை

சாக்ரமேன்ட்டோ: அதிக மின்சாரத்தை விழுங்கி, உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்று கூறி, 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள பெரிய்ய்ய "டிவி'க் களுக்கு கலிபோர்னியா மாநிலம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. உலக வெப்பமயமாதலுக்கு மின்சார பயன்பாடு முக்கிய காரணமாகிறது. அதை குறைக்க வேண்டும் என்று, கலிபோர்னியாவை சேர்ந்த பல சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மின்சார பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்ட இந்த மாநில எரிசக்தி கமிஷன்,"பெரிய "டிவி'க் களால் அதிக மின்சாரம் செலவாகிறது. அதை தடை செய்யலாம்' என்று பரிந்துரை செய்தது.
கவர்னர் ஆர்னால்டு ஷூவர்ஸ்நெக்கர், பிரபல ஹாலிவுட் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். குடியரசு கட்சி சார்பில் கவர்னராக பொறுப்பேற்றவர். டெர்மினேட்டர் உட்பட பல படங்களில் நடித்தவர். எரிசக்தி கட்டுப்பாட்டுக்கு இவர் ஆதரவு தெரிவித்து வருகிறார். கமிஷன் பரிந்துரையை ஏற்று, விரைவில் ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானம் போட திட்டமிட்டுள்ளார். இது நிறைவேறினால், சட்டமாக அமலுக்கு வரும். அமலுக்கு வந்தால், 2013 முதல் 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள "டிவி'க்களை தயாரித்து விற்க முடியாது.
கமிஷனின் இந்த முடிவை "டிவி' தயாரிப் பாளர்கள் எதிர்த்துள்ளனர். "பெரிய "டிவி' என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது. அதை தடை செய்யக்கூடாது; மேலும், மற்ற "டிவி'க்களை விட, அதன் பயன்பாடு குறைவு தான். அதனால், மின்சார தேவையும் குறைவாகத்தான் இருக் கும். இப்படி இருக்கும் போது, இதை தடை செய் வது சரியான முடிவல்ல' என்று தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா முக்கிய மாநிலம். அந்த மாநிலத்தில் கொண்டு வரப்படும் சட்ட முடிவுகள், மற்ற மாநிலங்களை பின்பற்ற வைக்கும். அதனால், பெரிய "டிவி'க்கு வரும் தடையும் மற்ற மாநிலங்களில் சட்டமாக கொண்டு வரப்படும் என்பதால், "டிவி' தயாரிப்பாளர்கள் வரிந்து கட்டி எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
Source: http://www.dinamalar.com
Labels:
அமெரிக்கா
இலங்கையில் போர் குற்றம் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா வற்புறுத்தல்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த உச்சகட்ட போரின் போது வடக்கு பகுதியில் தமிழர்கள் மீது அடக்கு முறையும், போர்க்குற்றங்களும் நடந்ததாக உலக நாடுகள் புகார் கூறி வருகின்றன.
அப்போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் போர் நடந்த வட கிழக்கு பகுதியில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து உலக நாடுகளின் அமைப்புகள் விசாரணை நடத்த இலங்கை அனுமதிக்க வேண்டும் எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லான் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையின் வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது ராணுவத்தினர் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளின் நிறுவனங்கள் விசாரணை நடத்த அந்நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அங்கு நடந்த உண்மையான விவரங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இறுதி கட்ட போரின் போது இலங்கையில் அகில உலக மனித உரிமை சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அது உண்மை என்றால் மிகப் பெரிய குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு இலங்கை அரசு அனுமதிக்குமா???????????????? விசாரணை நடைபெறுமா?????????????? எல்லாவற்றிற்கும் எப்போது விடியல் ஒன்று மட்டும் உண்மை..... விடியல் வெகு தொலைவில் இல்லை என்று நம்புவோம்...
Source: http://www.maalaimalar.com
Subscribe to:
Posts (Atom)


