Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, August 9, 2010

பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி போச்சு, டவல் வந்தது

உ.பி. Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ரூப்சந்த்பூர் கிராமத்தை சேர்ந்த கீதாதேவி (38). வயிற்று வலிக்காக ஜான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு கடந்த ஜூலை 7ம் தேதி ஆபரேஷன் மூலம் கட்டி அகற்றப்பட்டது. ஆனாலும், வயிற்று வலி குறையவே இல்லை. மீண்டும் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்ற கீதாதேவிக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, வயிற்றில் கட்டிக்கு பதிலாக மர்ம பொருள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், கீதா தேவிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்தனர். வயிற்றை அறுத்து பார்த்தபோது, ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட சிறிய டவல் (துண்டு) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை உடனடியாக அகற்றினர். கட்டியை அகற்றிவிட்டு, கவனக் குறைவாக டவலை உள்ளே வைத்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 4, 2010

பாடப்புத்தக சுமையால் கூன் போடலாம்

அதிகளவு எடை கொண்ட புத்தக மூட்டை சுமக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுமென ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட புத்தக பைகளை சுமந்து செல்வது தொடர்பாக, மங்களூரில் உள்ள சில பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மாணவர்கள் அதிக பளுவை சுமப்பதால், கழுத்து வலி, கை, கால் வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் உடலில் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்துமென அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


இது குறித்து ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுவாக, மாணவர்கள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவர்கள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர். இதன் காரணமாக, ஆரோக்கியமாக உள்ள 10 முதல் 30 சதவீத மாணவர்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. மும்பை, டில்லி, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான பிள்ளைகள் பளுவான புத்தக மூட்டையை சுமப்பதன் மூலம் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகின்றனர். புத்தகப்பை மட்டுல்லாது, விளையாட்டு பொருட்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றையும் பள்ளிக்கு சுமந்து வர வேண்டியுள்ளது. இதனால், அவர்களுக்கு சுமை அதிகரிப்பதுடன், கை, கால்களில் எலும்பு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டில்லியை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் சமீர் கூறியதாவது: பள்ளி பிள்ளைகள் அதிக எடை சுமப்பதால், அவர்களுக்கு உடல் உபாதைகள் மட்டுமல்லாது, மனம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதனால், அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. கை, கால் வலி, முதுகு வலி, தலை வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும், பிள்ளைகள் அதிக எடை சுமப்பதால், அவர்களின் எலும்பு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால், முதுகு கூன் விழுவது உள்ளிட்ட உடல் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு சமீர் கூறினார்.


இந்த பிரச்னை குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: கல்வி கற்பிக்கும் முறையும் தற்போது நவீனமயமாகி வருகிறது. நகரங்களில் உள்ள பெரிய பள்ளிகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மாணவர்களின் புத்தக சுமையை பெருமளவு குறைக்க வாய்ப்பு உள்ளது. பாட புத்தகங்களின் எண்ணிக்கையை குறைத்து, "சிடி', யு.எஸ்.பி., பிளாஷ் டிரைவ்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இதற்கு வாய்ப்பில்லாத பள்ளிகளில், லாக்கர் சிஸ்டத்தை அமல்படுத்தலாம். அதாவது, மாணவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை பள்ளியிலேயே தங்களுக்கான லாக்கர்களில் வைத்து விட்டு செல்லாம். மேலும், அன்றைய கால அட்டவணைக்கு ஏற்ற பாடப்புத்தகங்களை மட்டும் எடுத்து வரலாம். இதனால், மாணவர்களின் புத்தகச்சுமை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. மேலும், பாடத்திட்டத்தில் அளவை குறைப்பதன் மூலம் புத்தகச் சுமையை ஓரளவுக்கு குறைக்க முடியும். இது குறித்து, பல்வேறு தரப்பினரும் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, January 20, 2010

பணம் சம்பாதிக்க செயற்கை பிரசவத்தை உருவாக்கும் டாக்டர்கள்: உலக சுகாதார நிறுவனம் கண்டனம்

உலகம் முழுவதிலும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் ஆசிய நாடுகளில் செயற்கை பிரசவம் (சிசேரியன்) அதிகரித்திருப்பது தெரியவந்தது.

2007-2008-ம் ஆண்டுகளில் மட்டும் சிசேரியன் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் சிசேரியன் எண்ணிக்கை 65 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதற்கு உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மெட்டின் கில்ம ஜோக்லு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஆசியாவைச் சேர்ந்த இந்தியா- சீனா போன்ற நாடுகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பெரும்பாலான தனியார் டாக்டர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்து விடுகிறார்கள். சிசேரியனை விட சுகப்பிரசவம்தான் நல்லது.

சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கிடைக்கிறது என்பதால், அதை ஆதரிக்கிறார்கள். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிசேரியன் ஆபரேசன் செய்யும் தாய்- குழந்தைக்கு நிறைய பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. சில தாய்மார்களுக்கு கருப்பையை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. டாக்டர்கள் பலர் பண ஆசையில் தங்களது மனசாட்சியை அடகு வைத்து விடுகிறார்கள். மனிதாபிமானம் மிகுந்த டாக்டர்கள் யாரும் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்யமாட்டார்கள்.

சில பெண்களுக்குதான் பிரசவ நேரம் காலதாமதமானால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். ஆப்போது சிசேரியன் செய்வதை தவிர வேறு வழியில்லை.

சுகப்பிரசவம் ஆகக்கூடிய நிலையில் உள்ள பெண்களுக்கும் சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பதுதான் வேதனைப்படக்கூடிய, கண்டிக்கத்தக்க ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, November 18, 2009

பெண்களுக்கான “வயாகரா” மாத்திரை தயாரிப்பு


ஆண்களின் “செக்ஸ்” உணர்ச்சியை தூண்டுவதற்கு “வயாகரா” என்ற மாத்திரை தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையில் உள்ளது. தற்போது பெண்களுக்கும் இது போன்ற மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.

“செக்ஸ்” உணர்ச்சி குறைவாக உள்ள பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாத்திரைக்கு “பிலிபேன்செரின்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை 3 கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டது. செக்ஸ் உணர்வு குறைந்த பெண்களின் சுரப்பிகளை தூண்டி விட்டு மூளையின் செயல்பாட்டை அதிகரித்து அதன் மூலம் செக்ஸ் உணர்ச்சி தூண்டப்பட்டது.

பிலிப்பேன் செரின் மாத்திரை அதிவேக சக்தி கொண்டது அல்ல. மிதமாக “செக்ஸ்” உணர்வை தூண்டக்கூடியது. செக்ஸ் பிரச்சினை உள்ள பெண்களுக்கும், நோய் வாய்ப்பட்டு கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்த பெண்களுக்கும் இது பயன்படும்.
இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. தற்போது வெளிநாடுகளில் இந்த மாத்திரையை பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உடல் குளிர்ந்து விட்டாலும் மாரடைப்பில் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்: மருத்துவ ஆய்வில் தகவல்


பொதுவாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் உடல் குளிர்ந்து விடும். அதன்பிறகு அவர்களின் இதயதுடிப்பு அடங்கி உயிரிழந்து விடுவார்கள். தற்போது அவ்வாறு ஏற்பட்டாலும் கூட பாதிக்கப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் என மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக “ரினோசில்” என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்றுவிட்ட இதயத்தை மீண்டும் இயக்க வைத்தனர். இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஸ்டாக்ஹோமை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரன் அவரது குழுவை சேர்ந்தவர்கள் மேற்கொண்டனர். ஐரோப்பாவில் உள்ள 14 ஆஸ்பத்திரிகளில் மார டைப்பால் பாதிக்கப்பட்டு அனுதிக்கப்பட்டிருந்த 200 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர் களில் 182 பேர் உயிர் பிழைத்தனர். 18 பேரை மட்டும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. உயிர் பிழைத்தவர்களில் 83 பேர் 66 வயது முதல் 71 வயது உடையவர்கள். ரினோசில் கருவி பாட்டரியால் இயங்கக் கூடியது.

Monday, November 9, 2009

ஆசிரியையின் பிரசவம் இணையதளத்தில் ஒளிபரப்பு


அமெரிக்கா மின்னோ போபிசை சேர்ந்தவர் லியான்சி (வயது23). பள்ளிக்கூட ஆசிரியையான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது இவருக்கு முதல் குழந்தை. அவருக்கு வருகிற 19-ந்தேதி அன்று குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கணித்து உள்ளனர்.

இந்த பிரசவத்தை அவர் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய விரும்பியுள்ளார். இதை இணையதளம் நிறுவனம் ஒன்று ஒளிபரப்ப உள்ளது.

பிரசவ வலி ஏற்பட்டதில் இருந்து குழந்தை பிறக்கும் வரை அனைத்து நிகழ்ச்சிகளும் ஒன்று விடாமல் இணையதளத்தில் நேரடியாக பார்க்கலாம்.

இதற்காக கேமரா குழுவினரும் ஏற்கனவே தயாராக உள்ளனர்.

ஆனால் இந்த காட்சியை எல்லோராலும் பார்த்துவிட முடியாது. அந்த இணையதளத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். அப்போதுதான் அந்த வீடியோ காட்சியின் தொடர்பு கிடைக்கும்.

Wednesday, January 14, 2009

'தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கிங்' குழந்தைகளுக்கு ஆபத்து


வாஷிங்டன்: "தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கிங்' மூலம், குட்டீஸ்களுக்கு தான் ஆபத்து உள்ளது' என்று அமெரிக்க நிபுணர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.சிகரெட் பிடிப்பவர் என்பவர் "பர்ஸ்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்' எனப்படுகிறார். அதாவது,நேரடியாக சிகரெட் பிடிப்பதன் மூலம் பாதிக்கப்படுகிறார். இவர் விடும் புகையை சுவாசிப்பவர் தான் "செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்' என்று அழைக்கப்படுகிறார். சிகரெட் பிடிப்பவருக்கு கேன்சர் வருவதை விட, இந்த இரண்டாம் கை மாறும் புகைப்பவருக்கு அதிக பாதிப்பு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி யாளர் ஜொனாதன் விங்காப் "தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கர்' என்ற புதிதாக பாதிக்கப்படு வோரை கண்டறிந்துள்ளார். ஒருவர் பிடிக்கும் சிகரெட், அடுத்தவர் சுவாசத்தில் சேர வாய்ப்புள்ளது. அதையும் தாண்டி வேறு இடங்களிலும் பரவுகிறது. அதாவது, சிகரெட் பிடிப்பவரின் தலைமுடி, அவர் சிகரெட் பிடிக்கும் இடத்தில் உள்ள சோபா செட், தரை விரிப்பு போன்றவற்றில் படிகிறது. இப்படி படியும் சிகரெட் துகள் ரசாயனம் , பெரியவர் களை விட, குழந்தைகளுக்கு தான் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி பாதிப்பை அனுபவிக்கும் குழந்தைகள் தான் "தேர்டு ஹாண்ட் ஸ்மோக்கர்'கள் என்று அமெரிக்க நிபுணர் பிரித்துள்ளார்.
சிகரெட் பிடிக்கும் போது பரவும் புகையால் தரை விரிப்பு, சோபா செட் போன்ற இடங் களில் படியும் ரசாயனங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. ரசாயன குண்டுகளில் பயன் படுத்தப்படும் சயனைடு, "புடேன்' என்ற திரவ எரி ரசாயனம், ஈயம், கார்பன் மோனாக்சைடு, போலோனியம் ஆகியவை உள்ளன. இந்த ரசாயன கலவைகளால் குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிபுணர் லிங்காப் கூறுகையில்,"இதுவரை "செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்' பற்றி தான் அறிந்திருந்தோம். இப்போது மூன்றாம் கை மாறும் சிகரெட் பாதிப்பு பற்றி கண்டுபிடித் துள்ளோம். இதை தடுக்க புதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

சிகரெட் பழக்கத்தை கைவிடுவதில் கடினம் ஏன்


வாஷிங்டன்:புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட உறுதி பூண்டவர்களில் பெரும்பாலா னோர், மீண்டும் அப்பழக்கத்துக்கு திரும்பி விடுகின்றனர். புகை பிடிப்பவர்களையும், புகை பிடிப்பது போன்ற படங்களையும் பார்க்கும் போது, அவர்களது மூளையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணமென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த டியூக் பல்கலை மருத்துவ மையத்தின் மனநிலை மற்றும் செயல்பாடுகள் அறிவியல் பிரிவு இணை பேராசிரியர் மெக்கிளர்னான் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு, அதற்கு அடிமையான பலரும் சபதம் எடுக்கின்றனர். ஆனால், அவர்களால், 24 மணி நேரத்துக்கு மேல், அப்பழக்கத்தை நிறுத்த முடிவதில்லை. மீண்டும் அப்பழக்கத்துக்கு திரும்பி விடுகின்றனர்.புகை பிடிப்பது போன்ற படங்களைப் பார்க்கும் போதும், புகை பிடிப்பவர்களை பார்க்கும் போதும், அவர்களிடம் இருந்து வெளிவரும் புகையை சுவாசிக்கும் போதும், அவர்களது மூளையில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் மீண்டும் தூண்டப்பட்டு, புகை பழக்கத்துக்கு திரும்பச் செய்து விடுகின்றன.
புகை பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக கைவிடுவதற்கு உறுதி எடுப்பவர்களில் 5 சதவீதத்தினரால் மட்டுமே முழுமையாக வெற்றியடைய முடிகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகை பழக்கத்தைக் கைவிடும் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும், மூளையின் செயல்பாடுகளை ஆராய்வதற்கும் அடுத்த கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.

Tuesday, January 13, 2009

இரண்டு மாத குழந்தை வயிற்றில் இரட்டை சிசு கண்டுபிடிப்பு

லக்னோ: பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தை அடிவயிற்றில், இரட்டை சிசுக்களை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்; உடனே அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக அகற்றிஉள்ளனர். உ.பி.,மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலை., மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் உள்ள டாக்டர்கள் இந்த அபூர்வத்தை கண்டுபிடித்தனர். வயிற்று பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்த இரண்டு மாத குழந்தை வயிற்றில் இரட்டை சிசு இருப்பது, ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது. முதிர்ந்த இந்த கருக்கள், அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் நாராயணன் கங்கோபாத்யா தலைமையில் டாக்டர்கள் குழு, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, குழந்தையின் வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களை அகற்றினர். அடிவயிற்றில், ஒரு சிறிய பையில் இந்த இரட்டை முதிர்கருக்கள் இருந்தன; இரண்டு சிசுக்களுக்கும் தலை, அதில் சில முடிகள் இருந்தன. அடிவயிற்றுப்பகுதி, விரல்கள் காணப்பட்டன; இரண்டும் ஆண் குழந்தைகள் என்று தெரியவந்தது. ஆனால், இரண்டுக்குள் இருதயம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்டு கருத்தரிக்கும் போது, அதில் ஒரு கரு மட்டும் வளர்ந்து குழந்தையாக பிறக்கும்; மற்ற இரு கருக்கள் தவறுதலாக அந்த குழந்தையின் உறுப்புகளில் சேர்ந்து விடுவது மருத்துவ உலகில் அரிதாக நடப்பது தான் என்று நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர்.
பல நாடுகளில் இதுவரை, 90 பேருக்கு இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கடந்த செப்டம்பர் மாதம் கோல் கட்டாவில் ஒரு மாத குழந்தை வயிற்றில் இருந்து ஒரு முதிர் சிசுவை டாக் டர்கள் அகற்றியுள்ளனர். இதற்கு முன், 1999ல், நாக்பூரில், 36 வயதான ஒரு ஆண் வயிற்றில் இருந்து கட்டி என்று நினைத்து, கருவை அகற்றியுள்ளனர். வாரணாசியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை, கடந்த நவம்பர் மாதம் பிறந்தது. அடிவயிற்றில் பாதிப்பு வந்ததும், அதை சோதித்தபோது தான் கருக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பித்த நீர்ப்பை போன்ற சிறிய பையில் இந்த இரட்டைக்கருக்கள் இருந் தது நிபுணர்களுக்கே வியப்பு. பிறந்து இரண்டே மாதம் ஆன குழந்தை வயிற்றில், இப்படி இரட்டை கருக்கள் இருந்தது இதுவே முதன் முறை என்று தெரிகிறது.

பரந்து விரிந்த மார்பழகு பெற ஆண்களுக்கு அறுவை சிகிச்சை


புதுடில்லி: சினிமாவில், கட்டுமஸ்தான உடற்கட்டுடன் வரும் இளம் ஹீரோக்கள் போல, தங்களின் மார்பை அழகுபடுத்திக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் மோகம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.பாலிவுட் ஹீரோக்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார், அமீர் கான் போன்றவர்கள், கடும் உடற்பயிற்சி மூலம், பரந்துவிரிந்த மார்பு கொண்டுள்ளனர். இவர்கள் திறந்த மார்புடன் திரையில் தோன்றும் போது, கவர்ச்சிகரமாக தோற்றம் அளிக்கின்றனர்.அவர்களைப் போல, தங்களின் மார்புகளை அழகுபடுத்திக் கொள்வதில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பெரு நகரங்களில் வசிக்கும் 20 வயதுகளில் இருப்பவர்கள் இதற்கான சிகிச்சைக்காக ஏராளமாக செலவிட தயாராக உள்ளனர்.இதற்காக, மருத்துவமனைகளில் பிரத்யேக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. "தற்போதைய நிலையை ஒப்பிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு வந்தவர்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே. பெரும்பாலான இளைஞர்கள், பரந்து விரிந்து, திடமான, முடிகளற்ற மார்பு வேண்டும் என்று விரும்புகின்றனர்' என்று கூறினார், இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் காஸ்மடிக் சர்ஜரி துறை மூத்த டாக்டர் அனுப் திர்.""தங்கள் உடற்கட்டை அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முன் பெண்கள் தான் இதுபோன்ற அழகு சிகிச் சைக்கு வந்து கொண்டிருந்தனர். தற்போது ஆண்களுக்கென்று தனிப்பிரிவே துவக்கிவிட்டோம்,'' என்றும் அவர் கூறினார்.

Tuesday, December 30, 2008

500 மில்லி 'அடித்தால்' புத்துணர்ச்சி


மைசூரு: அதிகமில்லை ஜென் டில்மேன்! ஒரு 500 மில்லி அடித்தால் போதும், உடம்பு "கிண்'ணென்று இருக்கும்; புத்துணர்ச்சிக்கு குறைவிருக்காது. உடலில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். "அட , இது இவ்ளோ நாள் தெரியாம போயிடுச்சே...' என்று என்னவோ சிந்தனையை ஓடவிடாதீங்க. நீங்க நினைப்பது போல, "அந்த' 500 மில்லி இல்லே, இது பசு "சர்ர்ர்'ரை பிடிச்சு சுத்திகரித்து சாப்பிடணும்.
மேலே படியுங்க: மைசூரு மகாராஜா ஆண்டபோது ஆரம்பிக்கப்பட்ட பழம்பெரும் அமைப்பு, மைசூரு பிஞ்சாரேபோல் சொசைட்டி. சாந்திலால் சோர்டியா என்பவர் இப்போது தலைவராக இருக்கிறார்.பசுவதை தடை உட்பட பல சமூகப்பணிகளை செய்து வரும் இந்த அமைப்பு, இப்போது புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த அமைப்பு தான், பசுவின் சிறுநீரை சேகரித்து, சூடாக்கி சுத்திகரித்து, அதன் மருத்துவ குணம் மாறாமல் பாட்டிலில் அடைத்து விற்பது தான் இதன் திட்டம். பசுவின் சிறுநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்று சில அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால், அரசு ஆதரவோ, உதவியோ இதற்கு இதுவரை கிடைக்கவில்லை.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் அகில பாரதிய பசு பாதுகாப்பு சங்கம் தான் இந்த திட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது. அங்குள்ள பசுக்களின் சிறுநீரை சேகரித்து, சுத்திகரித்து விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, மைசூரில் உள்ள அமைப்பு, இப்போது திட்டத்தை துவங்கி உள்ளது. இதுகுறித்து, சாந்திலால் கூறுகையில், "தினமும் 500 மில்லி லிட்டர் அளவுள்ள 15 பாட்டில்கள் விற்பனை ஆகிறது. பாட்டில் பசு சிறுநீர் விலை 50 ரூபாய்.
"சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படுவதுடன், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகளையும் தீர்க்கிறது பசு சிறுநீர். தினமும் ஒரு பாட்டில் குடித்து வந்தால், உடலுக்கு புத்துணர்ச்சியும், எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது' என்று தெரிவித்தார். ஆயுர்வேத டாக்டர் சந்திரசேகர் கூறுகையில், "பசு சிறுநீரை சுத்திகரித்து குடித்து வந்தால், சர்க்கரை நோய் அண்டாது; உடலில் உள்ள செல்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது உண்மை தான்' என்று தெரிவித்தார்.

சாக்லெட், பிஸ்கட் கலர் கலர் பாக்கெட் சிப்சாகட்டும்... பெரும்பாலும் கெடுதல் தான்
















ஐம்பது பைசாவில் இருந்து, நூறு ரூபாய் வரைக்கும், வாய்க்கு ருசியாகவும், வயிற்றுக்கு உபாதையாகவும் இருக்கும் ஏகப்பட்ட கலர் கலராய் மொறுமொறு பாக்கெட்கள் , சந்தையில் குவிந்து வருகின்றன. காய்கறி, பழங்கள் வாங்கும் அளவை விட, இந்த வகை பாக்கெட் உணவுகள் விற்பனை தான் கொடிகட்டிப் பறக்கிறது. "உடல் கும்மென்று இருக் கும்; மூளை சுறுசுறுப்பாகும்; களைப்பே இருக்காது; சத்துக்கள் உள்ளது' என்று எவ்வளவோ பம்மாத்து அறிவிப்புகளுடன் இந்த கலர் பாக்கெட்கள் விற்பனைக்கு வந்தாலும், உண்மையில், அவற்றில் சத்துக்கள் இருக்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியே. அதில் சத்துக்கள் இருக்கிறதா, அது உடம்புக்கு நல்லதில்லையே என்ற சிந்தனை, குட்டீஸ்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இந்த தலைமுறை பெற்றோர்களுக்கும் தெரியாமல் இருப்பது தான் வேதனை.
குட்டீசை கெடுப்பது...
குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தருவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். "டிபன் செய்து தர நேரமில்லை; அப்படியே செய்தாலும் சாப்பிடுவதில்லை. ஆனால், மொறுமொறு...ன்னு பாக்கெட் வாங்கித்தந்தால் ஒரு நிமிடத் தில் காலி செய்து விடுகிறது என் குழந்தை' என்று பெருமையாக சொல்லும் தாய்களும் இருக்கின்றனர். ஒரு வகையில் குழந்தைகளை தவறான உணவுப்பழக்கத்துக்கு ஆட்படுத்துவது பெற்றோரின் அலட்சியம் தான். குழந்தைப்பருவத்தில் இருந்தே காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிடும் பழக்கம் பல குழந்தைகளுக்கு ஏற்படுகிறது; இதற்கும் பெற்றோர் தான் காரணமாக இருக்கின்றனர்.
டீன்–ஏஜ் குஷி
"டீன் ஏஜ்' வயதினரை கேட்கவே வேண்டாம்; அதிலும் கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், எப்போ தும் கையில் கோலா, கலர் பாக்கெட் மொறுமொறுக்கள்; தரமானதா என்று கூட பார்க்காமல் வாங்கும் நூடுல்ஸ் போன்ற சமாச்சாரங்கள்.
கல்லூரியில் படிக்கும், வேலைக்கு போகும் இளம் வயதினருக்கு ஜீன்ஸ், அரை குறை சட்டை, மொபைல், ஐபாட், இன்டர்நெட் சேட்டிங் தான் குஷி என்று நினைக்கின்றனர். உணவுப்பழக்கத்திலும் இப்படி காசை கொட்டி, தவறான பழக் கத்துக்கு ஆளாகின்றனர்.
எந்த சத்தும் இல்லை
இப்போது சந்தையில் சர்வதேச பிரபல நிறுவனங் கள், இந்திய பிரபல நிறுவனங்களின் மொறு மொறு பாக்கெட்கள் குவிந்துள் ளன. அவற்றில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளன என்பதை போடுவதே இல்லை.
சிகரெட் பிடிக்கக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டும் மத்திய சுகாதார அமைச்சர் எடுக்கப்போகும் அடுத்த அஸ்திரம் , சத்தில்லா உணவு பாக்கெட்களுக்கு கிடுக்கிப்பிடி தான். எல்லா கலர் உணவு பாக்கெட்கள் மீதும் எவ்வளவு சத்துக்கள் உள்ளன என்பதை சதவீதமாக போட வேண்டும் என்று கட்டாய உத்தரவை அமல்படுத்த உள்ளார்.
என்ன சத்துக்கள்?
இனிப்பு சேர்க்கக்கூடாது; குறைந்த கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஸ்டார்ச், கலோரி இருக்க வேண்டும். இது தான் சத்தான உணவு வகை. ஆனால், இப்போது கலர்புல் பாக்கெட்கள் விற்பனையில், புற்றீசல் போல, உள்ளூர் பிராண்டுகள் வேறு பரவி விட்டன.
இவற்றில், அதிக கொழுப்பு, இனிப்பு, கொலஸ்ட்ரால் உள்ளன. இவற்றை ஒருவர் பத்து ஆண்டுகள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் நிச்சயம் என்கின்றனர் டாக்டர்கள்.
டிரான்ஸ்பேட்
கொழுப்பில் மோசமானது "டிரான்ஸ் பேட்' என்பது. இது தான் பல மொறுமொறுக்களில் உள்ளது. இதனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் ஆபத்து உள்ளது. இந்த மொறுமொறுக்களை சாப்பிட்டுவரும், இளம் வயதினர் , நடுத்தர வயதை அடையும் போது இந்த கோளாறுகள் தலைதூக்க ஆரம்பிக்கும். பெரும்பாலான பாக்கெட்களில், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கனிம, வைட்டமின் சத்துக்கள் பற்றி போடுவதே இல்லை.
கலோரி, கொழுப்பு
மொறுமொறுக்களில், கலோரியும் அதிகம்; கொழுப்பும் அதிகம். அதனால், இவை குறைவாக உள்ள பாக்கெட்களை வாங்க வேண்டும். கொழுப்பு மிகுந்த சிப்ஸ்கள், குக்கீஸ் போன்ற மொறுமொறுக்களில், அதிக பட்சம் கொழுப்பில் இருந்து 30 சதவீதம் மேல் கலோரி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருப்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு போதும்; இதய, சர்க்கரை பாதிப்பு உள்ளவராக இருந்தால், இந்த அளவை விட குறைவான கொழுப்பு போதுமானது.
உப்பு பெறாத...
உப்பு, சர்க்கரை இரண்டுமே சிறிய வயதில் இருந்தே குறைத்து கொண்டு வந்தால், அவர்களுக்கு சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு அண்டவே செய்யாது. ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனை விட குறைவான உப்பு போதும்.
உடலுக்கு சக்தி வேண்டும்; அதற்காக, கார்போஹைட்ரேட் தேவை. காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் ஆகியவற்றில் தான் இந்த சத்து உள்ளது. வைட்டமின், கனிம சத்துக்களை 100 சதவீதம் வரை சாப்பிட்டாலும், உட லுக்கு நல்லது தான்.ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1,600ல் இருந்து 2,000 கலோரி வரை தேவை.

வெயிட் குறையணுமா? - நெகட்டிவ் கலோரி புட்


அதிகம் சாப்பிடுவதை குறைக்க முடியலே; அதுபோல மொறுமொறுக்களையும் விட மனசில்லை. அப்படியானால், கலோரி அதிகமாகத்தானே செய்யும். அதை குறைக்க வழியென்ன என்று தவியாய் தவிக்கின்றனர் பலரும்.
உண்மையில் வெயிட் குறைய கண்டிப்பாக, கலோரி அளவை பார்த்துத்தான் எதையும் சாப்பிட வேண்டும்; முதல் கட்டமாக, மொறுமொறுக்களை கைவிட வேண்டும்; காய்கறி, பழங்களை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
நெகட்டிவ் கலோரி புட்
எந்த காய்கறி, பழம் உட்பட உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டாலும், கலோரி குறைவாக இல்லை. அப்படியானால், என்னதான் வழி? கவலைப்பட வேண்டாம்; நெகட்டிவ் கலோரி உணவு வகைகளை சாப்பிட ஆரம்பிக்கலாம்.
நீங்கள் சாப்பிடும் உணவு 50 கலோரி உள்ளது என்றால், அதை ஜீரணிக்க உடலில் 65 கலோரியை செலவழிக்க வேண்டும். இப்படிப் பட்ட சூழ்நிலையில், ஒரு பக்கம் வாய்க்கு ருசியாக சாப்பிட்ட மாதிரியும் ஆகிவிட்டது; உடலில் உள்ள கலோரியில் 15 கலோரி சத்தை குறைத்த மாதிரியும் ஆகிவிட்டதே!
அதிக வைட்டமின் கனிம சத்துக்கள்
நெகட்டிவ் கலோரி உணவு வகைகளால் ஒரு முக்கிய லாபம் இருக்கிறது. இந்த வகை உணவுகளில் அதிக வைட்டமின், கனிம சத்துக்கள் உள்ளன. அதனால், கலோரி குறைவதுடன், சத்துக்களும் உடலில் சேரும்.
உடலில் எதிர்ப்பு சக்தியும் வெகுவாக அதிகரிக்க வாய்ப்பு இந்த உணவு வகைகளால் ஏற்படுகிறது. நாளடைவில், இந்த உணவுகளை தவிர, சாட் புட் போன்றவற்றை சாப்பிடக்கூட மாட்டீர்கள்.
தோற்றப்பொலிவு உணவிலும் கூடவா?
கடையில் வெள்ளரிக்காய் உட்பட சில காய்கறிகள் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து அள்ளுபவர்களும் இருக்கின்றனர்; அந்தப் பக்கமே திரும்பாதவர்களும் இருக்கின்றனர். இரண்டாமவருக்கு ஒன்று, வெள்ளரிக்காய் பிடிக்காமல் இருக்கலாம்; இரண்டாவது, அது பற்றி தெரியாமல் இருக்கலாம்.சில காய்கறிகள், பழங்களை பார்த்தாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. தோற்றப் பொலிவை பார்த்து தான் இவர்கள் உணவை கூட தேர்ந்தெடுக்கின்றனர். இது பெரும் தவறு.
வெள்ளரிக்காய் முதல் சாய்ஸ்
வெள்ளரிக்காய் பற்றி பலருக்கு தெரியாது. உடலுக்கு ஏகப்பட்ட வைட்டமின், கனிம சத்துக்களை தருவதுடன், கலோரியை அதிகமாக இழக்கவும் செய்கிறது.வெள்ளரிக்காயை சும்மாவே சாப்பிடலாம்; காலை சிற்றுண்டியில் ஒரு பகுதியாக சாப்பிடலாம். உணவிலும் சேர்த்து சமைக்கலாம். பகல் உணவு மட்டுமல்ல, இரவு டின்னரிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

தக்காளியை அப்படியே!


தக்காளியை சாம்பாரில், ரசத்தில், பச்சடியில் சேர்ப்பீர்கள். ஆனால், அப்படியே சாப்பிட்டதுண்டா, எப்போதாவது சாப் பிட்டிருப்பீர்கள். சரி, பச்சடி போல, சாலட் போன்றவற்றிலும் பச்சையாக சேர்த்தால், அதனால், கலோரி குறையும் என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பச்சையாக தக்காளி சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் தவறான கருத்து பலரிடம் உள்ளது. அதெல்லாம் சரியல்ல. சாண்ட்விச்சாக கூட செய்து சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி சுவீட் ஆச்சே
ஸ்ட்ராபெர்ரி பழங்கள், இனிப்பானது என்பது தெரிந்தது தானே. ஆனால், அதுவும், கலோரி அதிகம் எரிக்கும் பழங்களில் முக்கியமானது. காலை சிற்றுண்டியில் சேர்த்துக் கொள்ளலாம். காலையிலேயே கலோரி எரிப்பதற்கு இது உதவும். பகல், மாலை வேளையிலும் இதை சாப்பிடலாம்.
ஆரஞ்சை உரித்து...
ஆரஞ்சு பழத்தை உரித்து சாப்பிடுங்க; அதில் உள்ள சத்துக்கள் கிடைப்பதுடன், அதிக கலோரி குறைகிறது. ஆரஞ்சு பழத்தில் 45 கலோரி உள்ளது; அதை ஜீரணிக்க உடலில் உள்ளவற்றில் 60 கலோரி இழக்கப்படுகிறது.
பகலும், இரவும் இதை தாராளமாக சாப்பிடலாம். எந்த பாதிப்பும் வரும் என்ற அனாவசிய சந்தேகம் தேவையில்லை.
சிப்சுக்கு பதில் கேரட் ஓகே!
நெல்லிக்காய், இஞ்சி போன்றவற்றை சிறிய பாக்கெட்களில் அடைத்து மிட்டாய் போல விற்பனை செய்யப்படுவதை பார்த்திருப்பீர் கள். பார்த்துக்கொண்டே இருங்க, ஒரு நாள் பச்சையாக கேரட்டை கூட பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்யப்போகின்றனர். ஆம், சிப்ஸ் போன்ற மொறுமொறுக்களை விட, கேரட்டில் உள்ள சத்துக்களுக்கு குறைவே இல்லை. அப்படியே கடித்தும் சாப்பிடலாம்; ஜூசாக்கியும் குடிக்கலாம்; உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் இதிலும் டாப்!
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க; உடல் ஆரோக்கியத்துக்கு குறைச்சலே இருக்காது என்று டாக்டர்கள் கூறுவதை பெரும்பாலோர் கேட்பதில்லை. விழா நாட்களில் மட்டும், ஆப்பிளை வாங்கி தட்டில் வைத்து விருந்தினர்களுக்கு தருவதோடு சரி; அதை சாப்பிடுவதில் மட்டும் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆப்பிளில் 60 முதல் 80 கலோரி வரை உள்ளது. ஆனால், அதை கடித்து சாப்பிடும் போது, அதை விட, மிக அதிக கலோரி எரிக்கப் படுகிறது. மற்ற மொறுமொறுக்களை குறைத்து ஆப்பிள் துண்டுகளை விழுங்குங்களேன்.
தர்பூசணி
தர்பூசணி சாப்பிடுவதால் பல சத்துக்கள் கிடைக்கின்றன; முக்கியமாக, உடலுக்கு எனர்ஜி கிடைக்கிறது. இதை அப்படியே சாப்பிடலாம்; ஜூசாகவும் குடிக்கலாம்.

அரவாணியை கரம் பிடித்தார் கூலித்தொழிலாளி


தூத்துக்குடி: திருச்செந்தூரில், கூலித் தொழிலாளி, அரவாணியை திருமணம் செய்து கொண்டார். "அரவாணிகளை குடும்பத்தினர், சமுதாயம் வெறுக்கக்கூடாது' என, அவர் வேண்டுகோள் விடுத்தார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த சட்டநாதன் மகன் ஆகாஷ்(27). 10 ஆண்டாக, திருச்செந்தூரில் கட்டட வேலை, சமையல் வேலை செய்கிறார்.
இவருக்கும், கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அரவாணி நாகராணிக்கும்(35) பழக்கம் ஏற்பட்டது. திருச்செந்தூரில், ஒரே வீட்டில் வசித்து வந்த இரு வரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று முன்தினம், ஆகாஷ் - நாக ராணி திருமணம் அரவாணிகள் முன்னிலையில் நடந்தது.
ஆகாஷ் கூறும்போது, "அரவாணிகளும் மனிதர்கள்தான். அவர்களை, குடும்பத்தினரும், சமுதாயமும் வெறுக்கக் கூடாது. அதற்கு முன் மாதிரியாக, முழுமனதோடு நான் நாக ராணியை திருமணம் செய்து கொண்டேன். கடினமாக உழைத்து அவரை கண் கலங் காமல் காப்பாற்றுவேன்' என்றார். தங்களுக்கு அரசு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கவேண்டுமென புதுமணத்தம்பதியர் தெரிவித்தனர்.


Monday, December 22, 2008

தூக்கத்தில் 'இ-மெயில்' தரும் வியாதி தெரியுமா?


லண்டன்: தூக்கத்தில் நடக்கிற வியாதி சிலருக்கு இருக்கும் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள்; தூக்கத்தில், "நெட்' பார்க்கும் வியாதி, "இ -மெயில்' அடிக்கும் வியாதி என்று கூட சிலருக்கு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒகியோ மாநிலத்தை சேர்ந்த 44 வயது பெண், இந்த வகையில் உலக சாதனை படைப்பார் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். தூக்கத்தில் நடக்கிற வியாதி போல, இவருக்கு தூக்கத்தில் "நெட்' பார்க்கும், "இ - மெயில்' அடிக்கும் வியாதி உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. "இந்த வகையில், தூக்கத்தில் "இ - மெயில்' அடிக்கும் உலகின் முதல் நோயாளியாக இவர் இருக்கலாம்; இன்னும் சிலர் எந்த நாட்டிலாவது கூட இருக்கலாம்' என்றும் அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த பெண், "தூக்கத்தில் இ - மெயில் அடித்தது தொடர்பாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "ஸ்லீப் மெடிசன்' என்ற மருத்துவ இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்த பெண், நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து, கம்ப்யூட்டரை "ஆன்' செய்துள்ளார்; இன்டர்நெட் பார்த்து, அதில் மூன்று பேருக்கு "மெயில்' செய்துள்ளார். மறுநாள் அந்த மெயிலுக்கு பதில்கள் வந்துள்ளது. ஆனால், அவருக்கோ அதிர்ச்சி. நான் இப்படிப்பட்ட மெயிலே அனுப்பவில்லை என்று அடித்துச்சொன்னார். மெயில் "செக்' செய்து பார்த்தபோது, நள்ளிரவில் மூன்று மெயில்கள் அனுப்பியது தெரியவந்தது.
மாதத்தில் ஓரிரு நாள் இப்படி இவருக்கு அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கே அது தெரியவில்லை. வீட்டில் உள்ளவர்களும் இதை கண்டுபிடிக்கவில்லை. மருத்துவ நிபுணர்கள் இவரை விசாரித்து, ஆராய்ச்சி செய்த போது பல விஷயங்கள் தெரியவந்தன. தூக்கத்தில் நடக்கிற வியாதி சிலருக்கு உள்ளது போலத்தான் இந்த "தூக்கத்தில் மெயில் பார்க்கிற' வியாதி. கம்ப்யூட்டரில் மூழ்கிக்கொண்டிருக்கும் பணியில் உள்ள அவருக்கு நண்பர்கள் எல்லாரும் மெயில் மூலம் தான் தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். இதனால், தூக்கத்திலும், அவருக்கு மெயில் நினைவு போவதில்லை.
இப்படிப்பட்ட நிலைமை, கம்ப்யூட் டரை அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினருக்கு இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதுதொடர்பாக இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்; அப் போது தான், கனவில் சில உண்மை விஷயங்கள் வந்து போவதும், அதற்கேற்ப ஒருவரின் நடவடிக்கை மாறுவது போல, இதிலும் சாத்தியம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் எண்ணுகின்றனர். இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தூக்கத்தில் எழுந்து கம்ப்யூட்டரில், மெயில் அனுப்பும் போது, அவர் ஆங்கிலத்தில் பதிவு செய்த வார்த்தைகள் புரிந்து கொள்ள முடிகிறதே ஒழிய, தெளிவாக இல்லை என்பதையும் நிபுணர்கள் உணர்ந்தனர்.

Wednesday, November 26, 2008

தலை மட்டும் பெரிதாகும் குழந்தை


பெங்களூரு: பிறந்து ஏழு மாதமே ஆன குழந்தையின் தலை நாளுக்கு நாள் பெரிதாவதால் மருத்துவத் துறையினருக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. "குணப்படுத்த முடியாது' என்று டாக்டர்கள் பலரும் கை விரித்து விட்டனர். பெங்களூரு சிவாஜி நகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இந்திரா நகர் தனியார் கம்பெனியில் ஆபீஸ் பாயாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி (22). இருவருக்கும் மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
விஜயலட்சுமி சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர். அவர்களுக்கு முதலில் ரித்திக் (2) என்ற மகன் பிறந்தான். அதையடுத்து ஏழு மாதம் முன் பெண் குழந்தை ஒன்று மருத்துவமனையில் பிறந்தது. பிறக்கும் போதே குழந்தையின் தலை பெரிதாக இருந்தது. "தலையில் நீர் வைத்துள்ளது, சிகிச்சை செய்தால் சரியாகும்' என்றும் டாக்டர்கள் கூறினர். பெண் குழந்தைக்கு ரூபா என்று பெயர் சூட்டினர். குழந்தையின் தலை மட்டும் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. அதனால் பெற்றோர் மிகுந்த மனவருத்தமடைந்தனர்.
பால், தண்ணீர் போல திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். திட உணவுகளை சாப்பிட முடியாது. தலைக்கு கீழே உள்ள பகுதிகள் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் அசைவற்று இருக்கிறது. பிறக்கும் போது 3.4 கிலோ எடை கொண்டதாக இருந்தது. தலை கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. தற்போது எட்டு கிலோ எடை கொண்டதாக உள்ளது. அதிர்ச்சியடைந்த ரூபாவின் பெற்றோர், பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்தனர்.
குழந்தை அருந்தும் பால், தண்ணீரில் 10 சதவீதம் மட்டுமே வயிற்றுக்குள் செல்கிறது. மீதம் உள்ள 90 சதவீதம், தலைக்குள் சென்று சேருவதால் தலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக தெரிவித்தனர். அதை ஆபரேஷன் மூலம் குணப்படுத்துவது மிகவும் கடினம். அப்படியும் ஆபரேஷன் செய்தால், உயிர் பிழைக்க 10 சதவீதம் மட்டுமே சாத்தியம் என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். குழந்தை ரூபாவின் கண்பார்வையும் நாளுக்கு நாள் தெரியாமல் போனது.
பெங்களூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கும், "குணப்படுத்த முடியாது' என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். ஆனாலும், மனம் தளறாத ரூபாவின் பெற்றோர், சென்னை பேபி மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி., ஆந்திராவில் உள்ள குப்பம் மருத்துவமனை, மும்பையிலுள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அனைத்து டாக்டர்களும், "குணப்படுத்த முடியாது' என்ற ஒரே பதிலையே கூறினர்.
தற்போது குழந்தையின் தலை, அதன் உருவத்தை விட பல மடங்கு பெரியதாக உள்ளது. குழந்தையை குணப்படுத்த ரூபாவின் பெற்றோர், ஏழ்மை நிலையிலும் லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டனர். தற்போது செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். ரூபாவுக்கு என்ன நோய் என்பது குறித்து அவரை பரிசோதித்த டாக்டர் ராய் கூறுகையில், ""இந்த குழந்தைக்கு வந்துள்ளது "பிரைன் மேன்டல்' என்று பெயர். அதை குணப்படுத்துவது கடினம். குழந்தையால் திட உணவு சாப்பிட முடியாது. திரவ உணவு மட்டுமே சாப்பிட முடியும். அதுவும் 90 சதவீதம் தலைக்குள் சென்று விடுகிறது. 10 சதவீதம் மட்டுமே வயிற்றுக்குள் செல்கிறது.
""ஏற்கனவே தமிழகத்திலும், அசாம் மாநிலத்திலும் இதுபோன்ற குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகளை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தியுள்ளனர். இந்த குழந்தைக்கு உள்ள பிரச்னை, மற்ற இரு குழந்தையை காட்டிலும் வித்தியாசமானது. இக்குழந்தை மருத்துவ உலகிற்கே சவாலாக விளங்குகிறது. எத்தனை நாள் உயிர் வாழுமோ, அதுவரை தலை பெரிதாகிக் கொண்டே செல்லும்,'' என்றார்.


Monday, November 17, 2008

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி கண்டுபிடிப்பு


நார்விச்: புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள் ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார்விச்சில் உள்ள ஜான் இன்னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது. "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும்.இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப் பட்டது.இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது. சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது.
புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக்காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


'டெஸ்ட் டியூப்' முறையில் 20 குழந்தைகள் பிறப்பு


ஈரோடு: ஈரோடு தனியார் மருத்துவமனையில், ஒரே நாளில், சோதனைக்குழாய் முறையில் கருவுற்ற 12 பெண்களுக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தது. அவர்களுக்கு மொத்தம் 20 குழந்தைகள் பிறந்தன. ஈரோடு பெருந்துறை சாலையில், சுதா மருத்துவமனை அமைந்துள்ளது. குழந்தையில்லா தம்பதியருக்கு, "டெஸ்ட் டியூப்' முறையில் கருவூட்டப்பட்டு, குழந்தை உண்டாக்கப்படுகிறது. மருத்துவமனையில் குழந்தைக்காக சிகிச்சை பெற வந்த 12 தம்பதியருக்கு, பிப்., 15ம் தேதி, "டெஸ்ட் டியூப்' முறையில் குழந்தை உண்டாக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர் தனபாக்கியம் சிகிச்சை அளித்தார். கரு தரித்த 12 தாய்மார்களும், 38 வாரங்களாக மருத்துவரின் கவனிப்பில் இருந்தனர். சிகிச்சைக்கு வந்த 12 தம்பதியரும் தங்களுக்கு கந்தசஷ்டி அன்று குழந்தை பிறக்க வேண்டும் என டாக்டரிடம் வேண்டினர். அதன்படி நேற்று முன்தினம் 12 பேருக்கும் சிசேரியன் மூலம் பிரசவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, 12 பெண்களுக்கும் அடுத்தடுத்து ஆபரேஷன் செய்ததில், 14 ஆண் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை எடையுடன் ஆரோக்கியமாக உள்ளன.
நான்கு பெண்களுக்கு தலா ஒரு குழந்தையும், எட்டு பெண்களுக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்தன. சுதா மருத்துவமனை டாக்டர் தனபாக்கியம் கூறியதாவது: தற்போது, குழந்தை பெற்றுள்ளவர்களில் சிலர், திருமணம் முடிந்து பத்து முதல் 25 ஆண்டுகளான பிறகும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். கர்ப்பிணிகள் அனைவரையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தோம். நல்ல முறையில் குழந்தை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Monday, October 13, 2008

அடுத்தவர் புகையை சுவாசித்தாலும் கேன்சர்!


இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் புகை பிடிப்பது அடுத்தவர் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாலே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.அடுத்தவர் ஊதும் புகை பற்றிய பொதுவான சந்தேகங் களுக்கு இங்கு விடைகள் இடம்பெறுகின்றன.


அடுத்தவர் வெளியிடும் புகை கெடுதலானதா?


ஆம். அடுத்தவர்கள் புகை பிடிக்கும் போது வெளியாகும் புகை, நம் உடலுக்கு தீங்கானது. நாம் புகைபிடிப்பதால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அந்த விளைவுகள் அடுத்தவர் புகையிலும் உண்டு.



புகையில் என்னென்ன நச்சுகள் உள்ளன?

சிகரெட் புகையில் 4 ஆயிரம் வகையான நச்சுத் தன்மை கொண்ட துகள்கள் உள்ளன. நிகோடின், பென்சீன், பென்சாபைரீன், கார்பன் மோனாக்சைடு, அம்மோனியா, ஹைட்ரஜன் சயனைடு இவற்றில் முக்கியமானவை. சிகரெட்டில் உள்ள 60 வகையான நச்சுகள் கேன்சர் உருவாவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. சுவாசக்குழலில் உள்ள மெல்லிய திசுக்களுக்கு அவை எரிச்சலூட்டுகின்றன. கேன்சர் ஏற்பட காரணமாகன கார்சினோஜன் சிகரெட் புகையில் உள்ளதால், நச்சுத்தன்மை மிக்க ஆஸ்பிடாஸ், ஆர்சனிக் ஆகியவற்றுடன் இப்புகை சமமானதாக ஒப்பிடப்படுகிறது.



அடுத்தவர் புகையை சுவாசிப்பதன் ஆபத்துகள் என்ன?
அடுத்தவர் புகையை 30 நிமிடம் சுவாசித்தாலே இதயத்தின் வழியாக செல்லும் ரத்த ஓட்டம் கூட குறையும் அபாயம் உள்ளது. தலைவலி, இருமல், கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் இதுபோன்று புகையை சுவாசிக்கும் போது அவர்களது நுரையீரல் செயல்பாடு குறைந்தது.


நீண்ட காலம் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
புகை பிடிக்காதவர் கூட, அடுத்தவர்கள் புகையை சுவாசிக்க நேரிடும் போது, 25 சதவீத மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பினைப்பெறுகிறார்கள். 50 -60 சதவீதம் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் வாய்ப்புள்ளது. வீட்டிலுள்ள குழந்தைகளின் மனவளர்ச்சி யிலும் புகை கேடு விளைவிக்கிறது. பொது இடங்களில் புகை பிடிக்கும் போது அது அடுத்தவரை பாதிக்கிறது. ஒரு குடும்பத்தில் இருவர் புகைபிடித்தால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு சுவாசம்
தொடர்பான பிரச்னை வர 72 சதவீத வாய்ப்புள்ளது.


வேறு எந்த நாடுகளில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை
செய்யப்பட்டுள்ளது?


உலகிலேயே முதன்முறையாக பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது ன்று தடை செய்த இடம் வாடிகன்தான். 1590ம் ஆண்டில் போப் ஏழாம் அர்பன் இத்தடையை விதித்தார். 1600 களில் ஆஸ்திரியா, 1876ல் நியூசிலாந்து, 1941ல் ஜெர்மனி பொது இடங்களில் புகைப்பதற்கு தடை விதித்தன. சமீபத்தில் நார்வே 2004, இத்தாலி, ஸ்வீடன் 2005, பிரிட்டன் 2006 மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பொது இடங்களில் புகைக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது.



தடை ஏன்? :


பொதுமக்களின் உடல் நலன் மற்றும் நாட்டின் சுகாதார செலவு கியவற்றை கருத்தில் கொண்டே பொது இடங்களில் புகைபிடிக்க தடை திக்கப்பட்டுள்ளது. பிறரது உடல் நலனை கெடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் புகை பிடிக்க திக்கப்பட்டுள்ள
தடையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.