Showing posts with label அதிசயம். Show all posts
Showing posts with label அதிசயம். Show all posts

Thursday, August 12, 2010

சாமியார்களுக்கு மெயில் அனுப்பி லட்சக்கணக்கில் சுருட்டல்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஇ&மெயில் அனுப்பி 100க்கும் மேற்பட்ட சாமியார்களிடம் நூதன மோசடி செய்த பலே ஆசாமியை சென்னை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். போலி சாமியார் பணம் வாங்கி ஏமாற்றியதால், பழிக்கு பழியாக மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இ&மெயில் மூலம் போலியான தகவல்களை கொடுத்து சாமியார்களிடம் ஒரு கும்பல் பல லட்சம் மோசடி செய்து வருவதாக, கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் பாதிக்கப்பட்ட சாமியார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் செய்தனர்.

அதன்படி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் முதற்கட்டமாக போலியான இ&மெயில் வரும் முகவரியை கண்டு பிடித்தனர். அவைகள் ஆந்திர மாநிலம் ஏளூரில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை யினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பிரகாஷ் (37) என்பவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
வாக்குமூலத்தில் பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:

எனது சொந்த ஊர் மதுரை. இன்ஜினியரிங் படித்துள்ளேன். எனது தந்தை ராஜகோபால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அதே நிறுவனத்தில் ஓசூர் கிளையில் எனக்கு வேலை கிடைத்தது. எங்களது குடும்பத்தில் பல பிரச்னைகள் இருந்தன. ஓய்வின்போது தந்தைக்கு நிறுவனம் வழங்கிய தொகையின் ஒரு பகுதியை முதலீடாக வைத்து, மதுரையில் ஜவுளிக்கடை நடத்தினோம். அதுவும் நஷ்டத்தில் முடிந்தது. இதனால், எங்களது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், சாமியார் ஒருவர் எங்களை அணுகினார். உங்கள் குடும்பத்தில் பல பிரச்னைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். ஒரு பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். பூஜை செய்ய ^2 லட்சம் செலவாகும் என்றார். தந்தை மீதம் வைத்திருந்த ^2 லட்சத்தை கொடுத்தோம்.

பணத்தை பெற்றுக் கொண்ட சாமியார் அதன் பிறகு வரவே இல்லை. தலைமறைவானார். நாங்கள் வறுமையில் வாடினோம். சில மாதங்களிலேயே தந்தை இறந்து விட்டார். அடுத்த சில மாதங்களில் தாயாரும் இறந்தார். பின்னர், சென்னை மேற்கு தாம்பரத்தில் குடியேறினேன். எங்களை ஏமாற்றிய போலி சாமியார்களை பழி வாங்க வேண்டும் என்று என் மனம் துடித்தது. எங்கெல்லாம் சாமியார்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் அவர்கள் பெயரில் மடம் இருக்கிறது என்று தேடிப்பார்த்து அவர்களுக்கு இ&மெயில் அனுப்புவேன். அதில், நான் மிகப்பெரிய பணக்காரன். ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று இ&மெயிலில் குறிப்பிடுவேன்.

பதிலுக்கு மெயில் அனுப்பினால், உங்களுக்கு தேவையான கார் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு சேவை களை செய்கிறேன். அதற்கு குறைந்த கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவேன். இதன்படி பல சாமியார்கள் என்னிடம் பணம் கட்டி ஏமாந்துள்ளார்கள். இப்படி அவர்கள் ஏமாறும்போது நான் சந்தோஷப்படுவேன்.
இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட சாமியார்களிடம் சுமார் ^8 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துள்ளேன்.
இவ்வாறு பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

நித்யானந்தா ஆசிரமத்திலும் மோசடி

பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமம், ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமம், கடப்பாவில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமம், விவேகானந்தா ஆசிரமம், மயிலாப்பூரில் உள்ள ரமண கேந்திரா ட்ரஸ்ட் ஆகிய ஆசிரமங் களை பிரகாஷ் ஏமாற்றி யுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேவை செய்பவர்களிடம் கருணை

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சேவை செய்யும் சாமியார்களை பிரகாஷ் ஏமாற்றுவதில்லை. அப்படியே ஏமாற்றினாலும், அவர்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவான். இப்படி பல சாமியார்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளான். கிடைக்கும் மோசடி பணத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்துள்ளான். ஏழை மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் கட்டியுள்ளான். ஆந்திரா சென்ற பிரகாஷ், அங்கு விபத்தில் இறந்த ஒருவரின் மனைவியை திருமணம் செய்துள்ளார். அப்போதே அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளன.

இறந்த மாணவனுக்கு ஃபீஸ்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஆறு மாதங்களுக்கு முன் இறந்துபோன மாணவனுக்கு ஃபீஸ் கட்டுமாறு தந்தைக்கு 2 முறை பள்ளி எஸ்எம்எஸ் அனுப்பியது. வெறுத்து போன தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ளது லா மார்டினர் பள்ளி. அதில் 6ம் வகுப்பு படித்த மாணவன் ரோவன். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவனை பள்ளி தலைமை ஆசிரியர் சுனிர்மால் சக்ரவர்த்தி, பிரம்பால் அடித்தார்.

வகுப்பறையில் குறும்பு செய்ததாக காரணம் கூறினார். சம்பவம் நடந்த 4 நாட்களில் அவமானம் தாங்காமல்  ரோவன் தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்களா அல்லது மாணவனின் வயதுக்கேற்ற நடத்தை பற்றி அக்கறையில்லையா என விவாதங்கள் நடந்தன. அப்போது பேட்டி அளித்த தலைமை ஆசிரியர், மாணவர்களை பிரம்பால் அடிக்கக்கூடாது என சட்டம் இருப்பது தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில், மகனை இழந்து 6 மாதங்களாக சோகத்தில் தவிக்கும் ரோவனின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து சமீபத்தில் எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்கள் மகனின் கல்விக் கட்டணமாக ஸி6,225 ஓரிரு நாளில் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது.
கொதித்துப் போன தந்தை அஜய் ராவ்லா, பள்ளிக்கு நேரில் சென்று நிர்வாகத்தின் லட்சணம் பற்றி புகார் செய்தார்.

இனி அதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதி தரப்பட்டது. மீண்டும் ஓரிரு நாட்கள் முன் எஸ்எம்எஸ் வந்தது. அதில் ரோவன் கல்வி கட்டணமாக ஸி9,000 பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது. நொந்து போன அஜய் ராவ்லா, கொல்கத்தா போலீசில் புகார் செய்தார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிடமும் பள்ளியின் அலட்சிய போக்கு பற்றி புகார் அளித்தார். அவற்றின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

Wednesday, August 11, 2010

கரடியை முட்டியே கொன்றது தாய் பசு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateகடம்பூர் மலைப்பகுதியில் கன்றுக்குட்டியை தாக்கிய கரடியை தாய் பசு முட்டி கொன்றது. ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் கரளையம் லைன்தொட்டி கிராமம் உள்ளது. நேற்றுமுன்தினம் காட்டில் இருந்து ஆண் கரடி ஒன்று திடீரென கரளையம் கிராமத்தில் புகுந்தது. அங்கு பட்டியில் அடைக்கப்பட்ட 3 ஆடுகளை கடித்து கொன்றது. சில ஆடுகள் காயம் அடைந்தன. மணி என்பவரின் வீடு முன்பு நிறுத்தியிருந்த பைக் இருக்கையை சேதப்படுத்திவிட்டு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்தது. கன்றுகுட்டி அலறியதால் ஆவேசமடைந்த தாய் பசுவும், மற்ற மாடுகளும் சேர்ந்து கரடியை துரத்திச் சென்று, கொம்புகளால் முட்டித் தள்ளிக் கொன்றன.  தகவலறிந்து வனத்துறையினர் வந்து கரடியின் உடலை கைப்பற்றி ஆசனூரில் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், அங்கேயே கரடியின் சடலத்தை எரித்தனர்.

மெக்காவில் உலகின் பெரிய கடிகாரம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமுஸ்லிம் இனத்தவர்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பிரமாண்டமான மசூதியில் உலகின் பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. புனித மாதமான ரம்ஜான் மாதத்தின் முதல் வாரத்தில் இது முறைப்படி இயக்கி வைக்கப்படும். நான்கு பக்கமும் கடிகாரம் இயங்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 601 மீட்டர் உயரம் உள்ள கடிகார டவரில் பொருத்தப்பட்டுள்ள இந்த கடிகாரத்தின் உயரம் மட்டும் 251 மீட்டர் ஆகும். இஸ்லாமிய பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபஸ், ரயில் நிற்பதற்குள் படியில் இருந்து குதிக்கும் பயணி போலிருக்கிறது. பழக்கதோஷத்தில் விமானம் நிற்பதற்குள் லக்கேஜை எடுக்க முயன்று, ஊழியரின் தலையில் இடித்தார். ‘சாரி’ சொல்லாமல் தன்னையே திட்டியதால் வெறுத்த ஊழியர், விமானத்தை மட்டுமின்றி வேலையிலிருந்தே இறங்கிச் சென்று விட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார்.

கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி. தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார்.

விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர். தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின.

வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.
விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார்.

பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார். விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது.

ரஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்

ரஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும்    முயற்சியில் ஈடுபட்ட புதின்;    விமானியாக செயல்பட்டார்பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தால் ரஷிய காடுகளில் தீப்பிடித்து எரிகிறது. இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மாஸ்கோ நகரம் முழுவதும் பரவியுள்ளது. இது அங்கு வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.
 
காட்டுத் தீயை அணைக் கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை.
 
எனவே, விமானம் மூலம் வானில் பறந்த படியே தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
 
மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.
 
இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. இது ரஷிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானத்தில் விமானியாக இருந்துள்ளார். அது தான் தற்போது இவருக்கு கை கொடுத்துள்ளது.
 
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ரஷியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அப்பகுதிகளுக்கு சென்ற பிரதமர் புதின் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
 
வருகிற 2012-ம் ஆண்டு ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அவர் தயாராகிறார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் சென்று கொள்ளையர்களிடம் இருந்து கணவரை மீட்ட வீரப்பெண்

சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் சென்று    கொள்ளையர்களிடம் இருந்து    கணவரை மீட்ட வீரப்பெண்உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அஜித்சிங். கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 6-ந்தேதி ஆக்ரா சென்று விட்டு திரும்பியபோது சம்பல் பள்ளத்தாக்கில் செயல்படும் பீமா தலைமையிலான கொள்ளை கும்பல் அவரை கடத்தி சென்றது. பின்னர் அவர்கள் அஜீத்சிங்கை முக்கியா என்ற கொள்ளை கும்பலிடம் கொடுத்து விட்டனர்.
 
அவர்கள் அஜீத்சிங்கை சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் கொண்டு சென்றனர்.
 
பின்னர் அவருடைய மனைவி சாவித்திரிக்கு போன் செய்து உங்கள் கணவரை விடுவிக்க வேண்டு மானால் குறிப்பிட்ட பணம் வேண்டும். இல்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.
 
சாவித்திரி கொள்ளையர் களிடம் எங்கள் வீட்டில் பெரும் கஷ்டத்தில் இருக்கிறோம். இவ்வளவு பணம் தர முடியாது என்று கூறினார். அதை அவர்கள் ஏற்க வில்லை.
 
கணவரை எப்படியாவது மீட்க வேண்டும் என்று சாவித்திரி துடித்தார். போலீசுக்கு சொன்னால் கணவர் உயிருக்கு ஆபத்து என்று கருதிய சாவித்திரி தனி ஆளாக கொள்ளையனிடம் சென்று கணவரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
 
இதற்காக வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு அவர் கொள்ளையர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார். அவர் வைத்திருந்த நகை, பணத்தின் மதிப்பு கொள்ளையர்கள் கேட்ட தொகையை விட மிக குறைவு, லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே அதன் மதிப்பு இருந்தது.
 
இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தனி ஆளாக காட்டுக்குள் சென்றார். கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்காக செல்போன் மட்டும் வைத்திருந்தார்.
 
8 மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்று கொள்ளையர்கள் இருந்த இடத்தை அடைந்தார்.
 
தான் கொண்டு சென்ற பணம்-நகைகளை கொள்ளையர்களிடம் கொடுத்து விட்டு கணவரை விடுவிக்குமாறு கேட்டார். எங்கள் வீட்டில் இவ்வளவு தான் பணம் இருக்கிறது. நீங்கள் கேட்ட அளவு பணம் தர வேறு வழியே இல்லை என்று குடும்ப கஷ்டத்தையும் கூறினார்.
 
அவர் கூறியது கொள்ளையர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பெண் இவ்வளவு தூரம் காட்டுக்குள் கஷ்டப்பட்டு வந்து இருக்கிறாரே? என்று பரிதாபப்பட்டனர்.
 
எனவே கொள்ளையர்கள் சாவித்திரி கொடுத்த பணம்-நகை அனைத்தையும் அவரிடமே திருப்பி கொடுத்தனர். கணவரையும் விடுவித்தனர். அது மட்டும் அல்ல செலவுக்காக ரூ.5100-ஐ சாவித்திரியிடம் கொடுத்தனர்.
 
பின்னர் கொள்ளையர்கள் அனைவரும் சாவித்திரி காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டு கொண்டனர்.
 
சாவித்திரி கணவரை பத்திரமாக மீட்டு கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

Tuesday, August 10, 2010

இறந்த ஆண் - பெண்ணுக்கு திருமணம் : கர்நாடகாவில் இப்படியும் ஒரு வினோதம்

இறந்து போன ஆணுக்கும், பெண்ணுக்கும், அவர்களது உறவினர்கள் திருமணம் செய்து வைத்த வினோதமான சம்பவம் மங்களூரில் நடந்தது.

கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் யாதவ். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். ஏழு ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் நடந்த சண்டையில் இறந்து விட்டார். இறக்கும் போது அவருக்கு 31 வயது. திருமணம் ஆகாதவர். இதே போல், பரமேஸ்வர பூஜாரி என்பவரின் மகள் வரலட்சுமி. உடல்நல குறைவு காரணமாக, 1986ல் இறந்து விட்டார். அப்போது அவருக்கு 11 வயது. இவர்கள் இருவரும் திருமணம் ஆகாமலேயே இறந்ததால், அவர்களின் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படுமென்றும், வேறு யாருக்கும் திருமணம் ஆகாதென்றும் சிலர் கூறினர். இதனால், அவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்தனர். ஜோதிடர்கள், மந்திரவாதிகள், பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது அவர்கள், "இறந்து போனவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால், பிரச்னை தீர்ந்து விடும்' என்றனர். இந்த இரண்டு சம்பவங்களுமே, வெவ்வேறு இடங்களில் நடந்தவை. யாதவ் குடும்பத்தினரை பற்றி வரலட்சுமி குடும்பத்தினருக்கு தெரியாது. அதே போல், வரலட்சுமி குடும்பத்தினருக்கு யாதவ் குடும்பத்தினரை தெரியாது. வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தகுதியான இறந்து போன மாப்பிள்ளை யாராவது உள்ளாரா என, அவரின் குடும்பத்தினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். யாதவின் குடும்பத்தினரும் இதே போல் விசாரித்து வந்தனர்.



அப்போது தான், இருவர் குடும்பத்தாரும் ஒரே மாதிரியான நிகழ்வுக்காக காத்திருப்பது தெரிய வந்தது. இறந்து போன யாதவுக்கும், வரலட்சுமிக்கும் திருமணம் செய்து வைப்பதென, முடிவு செய்தனர். பொருத்தம் பார்ப்பது, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் வழக்கம் போலவே நடந்தன. மங்களூரு புறநகர் பகுதியான பொலாலி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டு தனித்தனி இருக்கைகள் அலங்கரிக்கப்பட்டு, மேடை மீது வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில் மாப்பிள்ளைக்கான புதிய உடைகள், தலைப்பாகை, மாலை ஆகியவை வைக்கப்பட்டன. மற்றொரு இருக்கையில் மணப் பெண்ணுக்கான புடவை, தாலி, மாலைகள் ஆகியவை வைக்கப்பட்டன. மந்திரங்கள் முழங்க, திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. மணமக்கள் வீட்டார் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "யாதவுக்கும், வரலட்சுமிக்கும் சிறப்பாக திருமணம் நடந்து விட்டது. அவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வலம் வருவர். இனி மேல், எங்கள் குடும்பத்துக்கு உள்ள திருமண தடைகளும் நீங்கும்' என்றனர். "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்ற பழமொழி உண்மை தானோ.

Monday, August 9, 2010

ரயில் நிலையத்தை கலக்கும் பெண் போர்ட்டர்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஉ.பி. மாநிலம் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையம் இரவு, பகல் எந்த நேரமும் பரபரப்புடன் இருக்கும். டெல்லி, மும்பை  ரயில்பாதையில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும். இதனால், இங்கு போர்ட்டராக இருப்பவர்களுக்கு நல்ல வருமானம். சுமை தூக்கும் தொழில் என்பதால் ஆண்கள்தான் பெரும்பாலும் அந்த வேலையில் இருப்பார்கள். ஆனால், ஆக்ராவில் பெண் ஒருவரும் போர்ட்டராக இருக்கிறார். அவரது பெயர் முத்ரா தேவி(35).

குடும்ப வறுமை காரணமாக இந்த வேலைக்கு வந்ததாக முத்ராதேவி கூறுகிறார். ஆக்ரா ரயில் நிலையத்துக்கு அதிகாலையும், இரவு நேரத்திலும் அதிக ரயில்கள் வந்து செல்லும் இதனால், இரண்டு ஷிப்டுகளில் முத்ராதேவி வேலை பார்க்கிறார். பெண் என்பதால், எந்த பிரச்னையும் இல்லை என்று கூறும் முத்ரா தேவி, சிவப்பு நிற சுடிதார் அணிந்து லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு லாவகமாக செல்கிறார். பெண் என்பதால் பயணிகள் யாரும் அவரை ஒதுக்குவதில்லை. ஆண் போர்ட்டர்களும் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். கணவரும், 3 குழந்தைகளும் ஒத்துழைப்பதால், வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, போர்ட்ராகவும் வேலை செய்ய முடிவதாக முத்ரா தேவி சொல்கிறார்.

அமெரிக்காவில் விநோதம் அப்பாவுக்கு ஓட்டு போடாதீர் மகள் உருக்கமான வேண்டுகோள்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஅமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு நடக்கும் தேர்தலில் ‘தந்தைக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று மகள் பிரசாரம் செய்வது பரப ரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் ஆக்லகாமா பகுதியின் 3 நகரங்களில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் பதவிக்கு (நம்மூர் நாட்டாமை போல) தேர்தல்  நடைபெறுகிறது. அதில்  ஜான் மன்தூத் நிற்கிறார். மும்முனை போட்டி நிலவும் தேர்தலில், ‘எனது அப்பாவுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என  ஜானின் மகள் ஜேன் பிரசாரம் அனல் பறக்கிறது.
நல்ல குடும்பஸ்தராக உள்ளவருக்கே நீதி சொல்லும் பதவியை அளிப்பது மக்களின் வழக்கம். எனவே, ‘எனக்கு 3 மகள்கள், நிறைய பேரன்,  பேத்திகள்’ என்று ஜான் விளம்பரம் செய்து வருகிறார். ஆனால், ‘இதுபோன்ற எந்த சொந்தத்துடனும் ஜானுக்கு தொடர்பே இல்லை. அவர் நம் பகத்தன்மை இல்லாதவர். அவரால் சரியாக நீதி வழங்க முடியாது’ என்று மகள் ஜேன், தனது கணவர் ஆண்ட்ரூவுடன் இணைந்து பத்திரிகை களில் விளம்பரம் தருகிறார். இதற்காக ஒரு இணைய தளத்தையே இந்த தம்பதி தொடங்கியுள்ளது. இதுபற்றி ஜான் மன்தூத் கூறுகையில்,  ‘‘1981ல் மனைவியை விவாகரத்து செய்தேன். அப்போது சிறுமியாக இருந்த ஜேன், அந்த பிரிவால் இப்போது என்னை வெறுக்கிறாள். அது வும் காரணமாக இருக்கலாம்’’ என்றார்.

Friday, August 6, 2010

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த தொட்டில் குழந்தை மாணவி

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்த    தொட்டில் குழந்தை மாணவி
பெண் குழந்தையை சுமையாக நினைத்து சிசுவிலேயே கொலை செய்து வீதிகளில் வீசும் மாபாதக செயல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடந்து வந்தன.
 
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார்.
 
இந்ததிட்டத்தின் மூலம் பெண் குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் அரசு தொட்டிலில் விட்டு விடலாம். அப்படிப்பட்ட குழந்தைதான் அக்ஷயா.
 
10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை பெற்றோரின் வறுமை, ஏழ்மையின் காரணமாக வளர்க்க முடியாமல் அனாதையாக விடப்பட்டவர் அன்று தொட்டிலில் அழுது புலம்பிய அக்ஷயா இன்று வளர்ந்து ஆளாகி 18 வயது நிரம்பிய இளம் பெண்ணாக காட்சியளிக்கிறார்.
 
1992-ம் ஆண்டு தொட்டிலில் வீசப்பட்ட அக்ஷயா அரசின் அரவணைப்பில் சிறிது காலம் இருந்தார். பின்னர் தாம்பரம் “சாஸ்” குழந்தைகள் கிராமம் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவள் உள்பட 14 குழந்தைகள் 1994-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது.
 
தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இருந்து தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட முதல் குழந்தைகளாகும் இவைகளே ஆகும்.
 
சிறுவயதிலே தாயின்பாசம், அரவணைப்பு இல்லாத தொட்டில் குழந்தைகளுக்கு “சாஸ்” தொண்டு நிறுவனம் அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது. அம்மாவை போல பரிவு காட்ட வளர்ப்பு தாய் நிய மிக்கப்பட்டு அவரது பாசத்திலும் அன்பிலும் அக்ஷயா வளர்ந்தாள். அவரது வளர்ப்பு தாயின் பெயர் ரஜினி.
 
அவர் தான் இதுவரை அவளிடம் பாசம்காட்டி வந்தார். சிவசங்கர வித்யாலயா பள்ளியில் படித்து வந்த அக்ஷயா பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்கு தயாரானார்.
 
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர விணப்பித்தார். அவளுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாதம்மாள் ஷீலா என்ஜினீயரிங் கல்லூரியில் கலந்தாய்வில் இடம் கிடைத்தது.
 
என்ஜினீயரிங் கல்லூரியில் தொட்டில் குழந்தை மாணவி சேர்ந்து படிப்பது இதுவே முதல் முறையாகும். அந்தபெருமை அக்ஷயாவுக்கு கிடைத்துள்ளது.
 
இது குறித்து மாணவி அக்ஷயா கூறியதாவது:-
 
எனது பெற்றோர்யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு உலகம் “சாஸ்” குழந்தைகள் கிராமம்தான். அங்குதான் வளர்ந்து ஆளானேன். 9 வயதில் மற்ற குழந்தைகளுடன் ஜெயலலிதா அம்மாவை பார்த்தஞாபகம் உள்ளது. எனது அம்மா, அப்பாவை பற்றி நினைப்பதே இல்லை. எனக்கு வளர்த்த ரஜினி தான் எனக்கு அம்மா. நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். என்ஜினீயரிங் படித்து முடிந்து எல்லோரும் வருகிற மாதிரி நல்ல இடத்திற்கு வருவேன்.
 
இவ்வாறு அக்ஷயா கூறினார்.
 
தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நம்பி வரதராஜன் கூறுகையில், இந்திரகுமாரி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த போது அக்ஷயாவுடன் மற்ற குழந்தை களையும் ஒப்படைத்தார்.
 
இப்போது அக்ஷயா பெரிய பெண் ஆகிவிட்டாள். இது பெண்களுக்கு பெருமையாக இருக்கிறது. இங்கு 14 வீடுகளில் 148 குழந்தைகள் படித்து வருகிறார்கள் என்றார்.

Friday, February 5, 2010

போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியது: மோட்டார் சைக்கிளில் சென்ற ஜி.கே.வாசன்


போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியது: மோட்டார் சைக்கிளில் சென்ற ஜி.கே.வாசன்
திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மகள் திருமணம் திருச்சி கலைஞர் அறிவலாயத்தில் இன்று காலை நடந்தது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பிறகு கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்ற ஜிகே.வாசன் அங்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

திருவானைக்காவல் காவேரி பாலம், கல்லணை சாலை வழியாக திருச்சி- சென்னை பைபாஸ் ரோட்டில் பால்பண்ணை ரவுண்டானா அருகில் ஜி.கே.வாசன் கார் வந்த போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தன.

இந்த போக்குவரத்து நெருக்கடியில் ஜி.கே.வாசன் காரும் சிக்கிக்கொண்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்த பிறகு காரில் சென்றால் விமானத்தை பிடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. உடனே மத்திய மந்திரி ஜி.கே. வாசன் காரில் இருந்து இறங்கினார்.திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜராஜசோழனின் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறினார். உடனே அந்த மோட்டார் சைக்கிள் திருச்சி விமான நிலையம் நோக்கி பறந்தது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் மோட்டார் சைக்கிளில் செல்வதை கட்சியினர் பார்த்ததும் அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களும் மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்தனர். போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பாக சென்றனர்.

டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று ஜி.கே.வாசனை குறித்த நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு தான் காங்கிரஸ் நிர்வாகிகள் நிம்மதி பெமூச்சு விட்டனர்.

குட்டி யானை இறந்த இடத்துக்கு தாய் யானை தொடர்ந்து வந்து கண்ணீர் விடும் உருக்கம்; வனப்பகுதிக்குள் யாரும்போக வேண்டாம் என எச்சரிக்கை


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப் பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் மேற்கு பகுதியில் யானைகள் குட்டிகளுடன் வந்து தண்ணீர் குடித்து கொண்டு செல்கிறது. கடந்த 3-ந்தேதி இப்படி தண்ணீர் குடிக்க நிறைமாத பெண் யானை ஒன்று வந்தது. அந்த கர்ப்பிணி யானை தண்ணீர் குடித்து விட்டு கரையேறும்போது திடீரென்று அந்த யானை குட்டி ஆண் யானையை ஈன்றது.

உடனே தாய் பாசத்துடன் குட்டிக்கு அந்த பெண் யானை பால் கொடுக்க தட்டி எழுப்பியது. ஆனால் பிறந்த சில வினாடிகளில் அந்த குட்டி யானை தாய் கண் முன்னே இறந்து விட்டது.

இதைக்கண்டு அந்த தாய் யானை தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதது. அந்த யானையை சுற்றி மேலும் 3 யானைகளும் வந்து சோகத்துடன் நின்றது. அதன் பிறகு காட்டுக்குள் சென்றது.

பிறகு வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினர் அங்கு வந்து பார்வையிட்டனர். குட்டி யானை உடல் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைத்து விட்டு சென்றனர்.

நேற்று காலையிலும் மாலையிலும் குட்டி யானையை பறிகொடுத்த அதே இடத்திற்கு தாய் யானை வந்தது. குட்டி யானை புதைக்கப்பட்ட இடத்தில் தாய் யானை மண்டியிட்டு துதிக்கையால் மண்ணை கிளறி கண்ணீர் விட்டு அழுதது. தனது உடலிலும் மண்ணை இறைத்து வீசி பிளிறியது. இந்த சத்தம் வனப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.

அந்த யானை மேலும் தொடர்ந்து வரக்கூடும் என்பதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக ஆடு... மாடு மேய்ப்பவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். குட்டியை பிரிந்த தாய் யானை மதம் பிடித்து சுற்றக்கூடும். ஆதலால் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Monday, February 1, 2010

வயாகராவை விட பன்றி இறைச்சி “செக்ஸ்” ஆர்வத்தை அதிகம் தூண்டும்; அர்ஜென்டினா பெண் அதிபர் தகவல்


அர்ஜென்டினா அதிபர் மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் நடந்தது. இதில், அந்நாட்டு பெண் அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது செக்ஸ் ஆர்வத்தை தூண்டுவதற்காக வயாகரா மாத்திரை பயன் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பன்றி இறைச்சி அதை விட மிகச்சிறந்தது. இது சாதாரண விஷயமல்ல.

வறுக்கப்பட்ட பன்றிக்கறியில் தான் வயாகராவை விட “செக்ஸ்” உணர்வை தூண்டும் சக்தி உள்ளது. அதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன்.

தென் அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் வார இறுதியில் விருந்து நடைபெறும். இதில் நான் எனது கணவரும், முன்னாள் அதிபருமான நெஸ்டன் கிர்ச்னாவும் கலந்து கொண்டு வறுத்த பன்றி இறைச்சியை ருசித்து மகிழ்வோம்.

இதன் மூலம் வாரம் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். எனவே இதை பரிசோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

டென்மார்க், ஜப்பான் போன்ற நாடுகளில் பன்றி இறைச்சியை தான் அதிக அளவில் மக்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அர்ஜென்டினாவில் மாட்டு இறைச்சி தான் அதிக அளவில் விரும்பி சாப்பிடப்படுகிறது.

எனவே அதிபர் கிறிஸ்டினா கூறியது போல, இங்கும் பன்றி இறைச்சியை சாப்பிட்டு மக்கள் இன்புற்று வாழ வேண்டும் எனபன்றி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

9 வயதில் குழந்தை பெற்ற சிறுமி


வட மேற்கு சீனாவில் தவறான உறவு காரணமாக 9 வயது சிறுமி ஒருத்தி கர்ப்பமானாள். பிரசவவலியால் துடித்த அவளை சங்சன்நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை 2.75 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

இதன் மூலம், சீனாவில் மிக குறைந்த வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற பெருமையை இவள் பெற்று இருக்கிறாள். அவளது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

சீனாவில் 14 வயதுக்கு குறைவான பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்வது கற்பழிப்பு குற்றமாக கருதப்படும். எனவே, இந்த சிறுமியை கற்பழித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
1 1

Thursday, January 28, 2010

சத்யம் ராமலிங்க ராஜுவை ஏழையாக அறிவித்தது கோர்ட்


நியூயார்க் : சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவை, பரம ஏழையாக அறிவித்ததோடு, அவர் கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்து, அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குறித்து, அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கடந் தாண்டு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மற்றும் இவரது சகோதரர் மீது அமெரிக்க கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றில், தாங்கள் பரம ஏழை என்று ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் பரம ஏழை என்பதால், அமெரிக்காவில் எங்களுக்காக வாதாட வக்கீல் நியமிக்கவோ, கோர்ட் கட்டணம் செலுத்தவோ அல்லது கோர்ட் விதிக்கும் பிற நிதி உத்தரவுகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நியூயார்க் கோர்ட் நீதிபதி பார்பரா ஜோன்ஸ், தன் உத்தரவில் கூறியதாவது: ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர், தாங்கள் பரம ஏழைகள் என்பதற்கு போதுமான அளவு விளக்கமளித்துள்ளனர். அவர்களால் அமெரிக்க சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை. எனவே, அவர்களுக்கு கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பார்பரா ஜோன்ஸ் கூறினார்.

ஹைதியில் பூகம்பம்: 15 நாட்களுக்கு பிறகு இளம்பெண் மீட்பு


அமெரிக்கா அருகே கரீபியன் கடலில் உள்ள குட்டி நாடான ஹைதியில் கடந்த 12-ந்தேதி கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. சுமார் 2 லட்சம் பேர் பலியாகினர்.

மீட்பு பணியில் வெளிநாட்டு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 130 பேரை அவர்கள் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்ட 15 நாட்களுக்கு பிறகு போர்ட் ஆவ் பிரின்ஸ்நகரில் இடிந்து கிடந்த வீட்டுக்குள் இருந்து ஒரு இளம்பெண் மீட்கப்பட்டு இருக்கிறாள்.

அவளது பெயர் டார்லின், அவளை பிரெஞ்சு நாட்டை சேர்ந்த குழுவினர் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்ததால் அவளது காலில் படுகாயம் ஏற்பட்டு இருந்தது. அவள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.

இடிந்து கிடந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகவும் அதை தொடர்ந்து அவள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீய சக்திகளிடம் இருந்து விடுபட தினமும் ஒரு ஆட்டை பலி கொடுக்கும் சர்தாரி: பாகிஸ்தான் அதிபரின் மூட நம்பிக்கை


பாகிஸ்தானில் முஷரப்பை அதிரடியாக விரட்டிவிட்டு அதிபர் பதவிக்கு வந்தவர் ஆசிப் அலி சர்தாரி. பெனாசிரின் கணவரான இவர் ஊழல் செய்வதில் உலகப்புகழ் பெற்றவர். எந்த வேலையாக இருந்தாலும் அதில் 10 சதவீதம் கமிஷன் எடுத்துக்கொள்வார். இதனால் அவரை மிஸ்டர் டென் பெர்சண்ட் என்ற ழைக்கிறார்கள்.

பெனாசிர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குருட்டு அதிர்ஷ்டத்தில் 2007-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்து விட்ட சர்தாரி தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள சில மூட நம்பிக்கைகளை கடை பிடிக்கிறார். தீய சக்திகள் தன் ஆட்சியைப் பறித்து விடும் என்று அவர் பயப்படுகிறார்.

மூட நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த உருவாக திகழும் அவர் ஒட்டகப் பால் மட்டுமே குடிக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தனக்கு எதிராக யாராவது தீய சக்திகளை தூண்டி விட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தினமும் பரிகாரம் செய்கிறார்.

அவர் தினமும் ஒரு கறுப்பு ஆடு பலியிடுவதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியாகும் டான் நியூஸ் பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. தீய சக்திகள் எந்த ரூபத்திலும் தன்னை நெருங்கா மல் இருக்க அவர் ஆடு பலியிடுகிறார். இதற்காக அவரது உதவியாளர் பாய்கான் கிராமம், கிராமமாக போய் கறுப்பு ஆடுகளை தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறார். அவருக்கு ஆடு பிடிப்பதுதான் முக்கிய வேலையாக கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் ஆடு பலி கொடுக்கப்படும் முன்பு சர்தாரி முன்பு கொண்டு போய் நிறுத்தப்படும். அந்த ஆட்டை சர்தாரி தடவிக் கொடுப்பார். பிறகு அந்த ஆடு தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பலி கொடுக்கப்படும்.

சர்தாரியின் இந்த மூட நம்பிக்கை மிருக நல ஆர் வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை சர்தாரிக்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. சர்தாரியின் செய்தித் தொடர் பாளர் பர்கதுல்லா ஆடு பலி கொடுக்கப்படுவதை ஒத்துக்கொண்டார்.
சர்தாரி இந்த பழக்கத்தை நீண்ட நாட்களாக கடை பிடித்து வருவதாகவும், இதில் மூட நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

Tuesday, January 26, 2010

பயணத்தின் போது கட்டுக் கட்டாக பணத்தை கொண்டு செல்லலாமா? ஐதராபாத் நபர் சந்தித்த துயரமும், சோதனையும்


புதுடில்லி : வழக்கு ஒன்றில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பால், பயணத்தின் போது பெரிய அளவிலான பணம், தங்கம், நகைகள் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களை கொண்டு செல்வோர், பல விதமான இன்னல்கள் மற்றும் துயரங்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னையில் சொத்து வாங்க திட்டமிட்டார். இதற்காக, தன் வங்கிக் கணக்கில் இருந்து 65 லட்சம் பணத்தை எடுத்தார். அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். ஐதராபாத் விமான நிலையத்தில், அவரை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவர் தன்னிடம் 65 லட்ச ரூபாய் பணம் இருப்பதாகவும், நிலம் வாங்குவதற்காக சென்னைக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். அதை, ஐதராபாத் விமான நிலைய அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். அவரை சென்னை செல்ல அனுமதித்தனர். ஆனால், சென்னை வந்த அவருக்கு, துயரம் காத்திருந்தது. அவர் கொண்டு வந்த 65 லட்ச ரூபாய் பணம் தொடர்பாக, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், போலீஸ் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர். அவரை வெளியே செல்லவிடாமல் விமான நிலையத்திலேயே பிடித்து வைத்தனர். விசாரணையின் போது, தன் கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததற்கான சான்றிதழையும், அந்தப் பணம் தன்னால், சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்பட்டது என்பதையும், தன் வருமானத்திற்கு உரிய கணக்குகள் இருப்பதாகவும், வருமான வரித்துறையினரிடம் அவர் தெரிவித்தார்.
இருந்தாலும், சட்ட விரோதமாக அவர் பணத்தை கொண்டு வருவதாக சந்தேகப்பட்ட வருமான வரித்துறையினர், அவரிடம் இருந்து 65 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து கொண்டு, அதற்கு ரசீது அளித்தனர். இந்தப் பிரச்னை காரணமாக அந்த நபர், விமான நிலையத்தில் 15 மணி நேரத்திற்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டார். பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவரத்தை பத்திரிகைகளுக்கும் செய்தியாக வருமான வரித்துறையினர் கொடுத்தனர். இது தொடர்பாக இரண்டு மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், அவர் எந்த விதமான முறைகேடுகளும் செய்யவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித்துறையினர் அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். இரண்டு மாதம் பணத்தை வைத்திருந்ததற்கு எந்த விதமான வட்டியையும் தரவில்லை.
இதனால் எரிச்சல் அடைந்த அவர், ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கோரியதோடு, இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலைகள் பயணிகளுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க விதிமுறைகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்றும், கோரிக்கை விடுத்தார். ஆனால், பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடம் சென்னை என்பதால், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, ஆந்திர ஐகோர்ட் அதை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கூறியதாவது: ஐதராபாத் மற்றும் சென்னை விமான நிலையங்களில் வருமான வரித்துறையின் உளவுப் பிரிவினர் நடத்திய விசாரணை மற்றும் நடவடிக்கைகளில், எந்த விதமான தவறும் இல்லை. அவர்கள் தங்களின் கடமையைத்தான் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமான பணத்தை, அந்த நபர் கொண்டு சென்றதால், சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடந்துள்ளது. வங்கியில் இருந்து பெற்ற சான்றிதழை, அவர் சமர்ப்பித்தாலும், அதை சரிபார்க்க வேண்டிய கடமை வருமான வரித்துறைக்கு உள்ளது. அதனால், பயணியை விமான நிலையத்தில் பிடித்து வைத்ததிலும், அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்ததிலும் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் தங்களின் பணியை சரிவர செய்துள்ளனர். இவ்வாறு சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீலோ, "சட்டப்பூர்வமாக வங்கியில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பணத்தை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ய முடியாது. மேலும், பணத்தை கொண்டு சென்ற மனுதாரர், அதை சட்டப்பூர்வமான முறையில் சம்பாதித்துள்ளார். "பெரிய அளவிலான பணத்தை கொண்டு செல்லக்கூடாது என, எந்த சட்ட விதியும் இல்லை. மேலும், 15 மணி நேரத்திற்கு மேலாக, மனுதாரரை விமான நிலையத்தில் பிடித்து வைத்துள்ளனர். இது நியாயமல்ல' என்றார்.
தீர்ப்பு: இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: ஒருவர் குறிப்பிட்ட அளவுதான் பணத்தை கொண்டு செல்ல வேண்டும் என, எந்த விதமான சட்ட விதியும் இல்லை என்பது உண்மையே. இருந்தாலும், அவர் எந்த நோக்கத்திற்காக பணத்தை எடுத்துச் செல்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை, வருமான வரித்துறையினருக்கோ அல்லது மற்ற சட்ட அமலாக்க நிறுவனத்தினருக்கோ உண்டு. ஒருவர் சட்டப்பூர்வமாக சம்பாதித்த பணம், வங்கியில் இருந்து எடுக்கப்பட்டாலும், அதை சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. குற்ற நடவடிக்கைகளுக்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கவோ பயன்படுத்தலாம். அதை யாரும் மறுக்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட நபர், 65 லட்ச ரூபாய் பணத்தை சொத்து வாங்குவதற்காக கொண்டு சென்றுள்ளார். இருந்தாலும், இந்த ரூபாய்க்கு சொத்து வாங்கும் போது, முத்திரைத் தாள் கட்டணம், பதிவுக் கட்டணம், மூலதன ஆதாய வரி போன்றவற்றை செலுத்தாத வகையில், சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது.
சொத்தை விற்பவருக்கு கணிசமான தொகையை கருப்புப் பணமாகவும் இவர் கொடுக்கலாம். அதனால், பெரிய அளவிலான பணத்தை ஒருவர் கொண்டு செல்லும் போது, அது சட்டப்பூர்வமான பணமா, அது நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை, உளவுத் துறை அதிகாரிகளுக்கு உள்ளது. குற்றங்களையும், தவறுகளையும் தடுக்க அவர்கள் இதைச் செய்ய வேண்டியது அவசியம். பணத்தை பறிமுதல் செய்து வைத்து, அதன்பின் விசாரணை நடத்துவதன் மூலம், அந்தப் பணம் நல்ல நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் உறுதி செய்ய முடியும். ஆகையால், இதுபோன்ற விவகாரங்களில் பணத்தை கொண்டு செல்பவருக்கு ஏற்படும் சிரமங்களையும், சவுகர்யக் குறைவையும் பெரிதாக கருதக் கூடாது. அது தவிர்க்க முடியாத ஒன்றே. அந்த பணத்தை கொண்டு செல்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்கின்றனர் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இருந்தாலும், விசாரணை முழுமையாக முடியாத நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பத்திரிகைகளுக்கு வருமான வரித்துறையினர் தகவல் கொடுத்தது சரியல்ல. அது தவறான நடைமுறை. இதுபோன்ற தவறுகள், எதிர்காலத்தில் நடக்காமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற விவகாரங்களில், பயணிகளுக்கு அதிக அளவில் சிரமம் கொடுக்காமல், அவர்களை இம்சைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தக்க வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிடும்படி, வருமான வரித்துறையினரை சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இதையடுத்து, வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு மத்திய நேர்முக வரிகள் வாரியம், 2009 நவம்பர் 18ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* ஒருவர் பெரிய அளவிலான பணமோ அல்லது நகையோ கொண்டு செல்வதாக தெரியவந்தால், அதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தலாம். அந்த சோதனையையும் விமானம் புறப்படுவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும். விமானம் புறப்படுவதற்குள் முடிக்க முடியவில்லை எனில், குறிப்பிட்ட தகவலை, சம்பந்தப்பட்ட பயணி செல்லும் இடத்தில் உள்ள விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவித்து விட வேண்டும். பயணி சென்றடையும் இடத்தில் உள்ள அதிகாரிகள், அவரிடம் தேவையான விசாரணையை நடத்திக் கொள்வர்.
* விசாரணையின் போது போதிய விவரங்கள் கிடைத்தால், அவர் கொண்டு செல்வது கருப்புப் பணம் அல்லது தவறான நோக்கத்திற்கானது என தெரியவந்தால், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம்.
* அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட பயணியின் வாக்குமூலத்தை, அவருக்கு தெரிந்த மொழியில் பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தில் அவர் கையெழுத்திடும்முன், அதில் எழுதியுள்ள விவரங்களை அவரிடம் வாசித்துக் காண்பிக்க வேண்டும்.
*அவர் சொல்லியதற்கு மாறான தகவல்கள், வாக்குமூல அறிக்கையில் இடம் பெற்றிருந்தால், அதைத் திருத்திக் கொள்ளவும், திருத்திய அறிக்கையில் அவர் கையெழுத்திடவும் வாய்ப்பு அளிக்க வேண்டும். "நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறில்லை' என்ற உறுதி மொழியை, சம்பந்தப்பட்ட பயணி தெரிவித்த பின்னரே, அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.
* விசாரணையையும், அதைத் தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்க வேண்டும். பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்டது நகைகள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் எனில், அவற்றை மதிப்பிட, தகுதியான நபரை அழைத்து உடனடியாக மதிப்பிட்டு, அதன் மதிப்பை குறிப்பிட வேண்டும்.
* விசாரணை நடத்தும் போது, சம்பந்தப்பட்ட பயணிக்கு குடி தண்ணீர், உணவு, டீ மற்றும் நொறுக்குத் தீனிகள் வழங்க வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவ உதவியும் அளிக்கலாம்.
* விசாரணை நடவடிக்கைகள் முடிந்த பின்னர், குறிப்பிட்ட அந்தப் பயணியை, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு, அரசு வாகனத்தில் அனுப்ப வேண்டும்.
* விமான நிலையத்தில் நடைபெறும் விசாரணைகள் அனைத்தும் ரகசியமாக நடக்க வேண்டும். மீடியாக்களுக்கு செய்திகள் வெளியாவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாலும், ஐதராபாத் பயணிக்கு நேர்ந்த கொடுமைக்கு, வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டதாலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இருந்தாலும், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவால், பயணங்களின் போது, பெரிய அளவிலான பணம், நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொண்டு செல்வோர், கடும் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருவர் நல்ல நோக்கத்திற்காக பெரிய அளவிலான பணத்தை கொண்டு சென்றாலும், விமான நிலையத்தில் மட்டுமின்றி, அதன்பின்னரும் விசாரணை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் வரி ஏய்ப்புக்காகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகவோ, பெரிய அளவிலான பணத்தை அல்லது நகைகளை கொண்டு சென்றால், அவரை அதிகாரிகள் பிடித்து விசாரிக்க முடியும். தவறு செய்திருந்தால் தண்டிக்க முடியும். வரி ஏய்ப்பு குற்றத்திற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

Monday, January 25, 2010

ஹைதி பூகம்ப இடிபாடுகளில் சிக்கி 10 நாட்களாக சிறுநீர் குடித்து உயிர் பிழைத்தவர் மீட்பு


ஹைதி நாட்டில் கடந்த வாரம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதில் சர்வதேச நாடுகளின் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் போர்ட்- அவ்-பிரின்ஸ் நகரில் இடிபாடுகளை அகற்றுவதில் இஸ்ரேலிய நாட்டு குழுவினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இடிபாடுகளில் ஒரு வாலிபர் சிக்கி உயிருக்கு போராடுவது தெரிய வந்தது. அவரது பெயர் புசோ.

பூகம்பத்தில் வீடு இடிந்ததும் அவரது தாய் தப்பி விட்டார். புசோ மட்டும் படுக்கை அறையில் இருந்தார். இடிபாடுகளில் சிக்கி கொண்டார். நேற்று மீட்பு குழுவினர் அவரை நெருங்கிவிட்டனர். புசோ அபயகுரல் எழுப்பினார். 10 நாட்களுக்கு பின் அவரை மீட்டனர். அவர் 10 நாட்களாக தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார். அவரது உடல் நிலை சோர்வாக இருந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது தாய் கூறும்போது, புசோ இறந்துவிட்டார் என்று நினைத்தோம். ஆனால் உயிர் பிழைத்தது அதிசயமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. அவரது உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லை. நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். முழு அளவில் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக சொன்னார்.

இதே போல் 84 வயது பெண் ஒருவரும் உயிரோடு மீட்கப்பட்டார்.

சர்வதேச மீட்பு குழுவினர் இதுவரை 125 பேரை உயிருடன் மீட்டு உள்ளதாக ஐரோப்பா கமிஷன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.