Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Thursday, January 28, 2010

தீய சக்திகளிடம் இருந்து விடுபட தினமும் ஒரு ஆட்டை பலி கொடுக்கும் சர்தாரி: பாகிஸ்தான் அதிபரின் மூட நம்பிக்கை


பாகிஸ்தானில் முஷரப்பை அதிரடியாக விரட்டிவிட்டு அதிபர் பதவிக்கு வந்தவர் ஆசிப் அலி சர்தாரி. பெனாசிரின் கணவரான இவர் ஊழல் செய்வதில் உலகப்புகழ் பெற்றவர். எந்த வேலையாக இருந்தாலும் அதில் 10 சதவீதம் கமிஷன் எடுத்துக்கொள்வார். இதனால் அவரை மிஸ்டர் டென் பெர்சண்ட் என்ற ழைக்கிறார்கள்.

பெனாசிர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குருட்டு அதிர்ஷ்டத்தில் 2007-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்து விட்ட சர்தாரி தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள சில மூட நம்பிக்கைகளை கடை பிடிக்கிறார். தீய சக்திகள் தன் ஆட்சியைப் பறித்து விடும் என்று அவர் பயப்படுகிறார்.

மூட நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த உருவாக திகழும் அவர் ஒட்டகப் பால் மட்டுமே குடிக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தனக்கு எதிராக யாராவது தீய சக்திகளை தூண்டி விட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தினமும் பரிகாரம் செய்கிறார்.

அவர் தினமும் ஒரு கறுப்பு ஆடு பலியிடுவதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியாகும் டான் நியூஸ் பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. தீய சக்திகள் எந்த ரூபத்திலும் தன்னை நெருங்கா மல் இருக்க அவர் ஆடு பலியிடுகிறார். இதற்காக அவரது உதவியாளர் பாய்கான் கிராமம், கிராமமாக போய் கறுப்பு ஆடுகளை தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறார். அவருக்கு ஆடு பிடிப்பதுதான் முக்கிய வேலையாக கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் ஆடு பலி கொடுக்கப்படும் முன்பு சர்தாரி முன்பு கொண்டு போய் நிறுத்தப்படும். அந்த ஆட்டை சர்தாரி தடவிக் கொடுப்பார். பிறகு அந்த ஆடு தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பலி கொடுக்கப்படும்.

சர்தாரியின் இந்த மூட நம்பிக்கை மிருக நல ஆர் வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை சர்தாரிக்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. சர்தாரியின் செய்தித் தொடர் பாளர் பர்கதுல்லா ஆடு பலி கொடுக்கப்படுவதை ஒத்துக்கொண்டார்.
சர்தாரி இந்த பழக்கத்தை நீண்ட நாட்களாக கடை பிடித்து வருவதாகவும், இதில் மூட நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

Friday, October 30, 2009

கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த பாக்., பயங்கரவாதிகள்



கடலில் நீந்தி பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பி விட்டார்கள் என்பதை நம்ப முடியவில்லை. உண்மையா? பொய்யா?

காந்திநகர்: குஜராத் மாநில கடல் எல்லை அருகே கடல் பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்ற போது கடலில் குதித்து தப்பினர். இந்தியாவில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது., அமெரிக்க உளவு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 26 / 11 மும்பை தாக்குதல் நாள் நெருங்கி வரும் வேளை என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நேரத்தில் இந்திய கடல்பகுதியில் பாதுகாப்பில் இருந்த பாதுகாப்பு படையினர் குஜராத் கட்ச் மாவட்டம் அருகே சர் கிரீக் கடல் பகுதியில் ஒரு மர்ம படகு வந்ததை கண்டனர். இதில் இருப்பவர்கள் யார் என கண்டறிய அந்த படகு நோக்கி விரைந்தனர். இந்நேரத்தில் பாதுகாப்பு படையினர் வருவதை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து நீச்சலடித்து தப்பி விட்டனர். அவர்களை பிடிக்க முடியவில்லை. படகு மட்டும் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப்படகு பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது கடல் மார்க்கமாகத்தான் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இதே போல் தற்போது வந்தவர்கள் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருக்கலாம் என பாதுகாப்பு படை வட்டாரம் தெரிவிக்கிறது.
காஷ்மீர் எல்லையில் 2 பேர் சுட்டு கொலை : இதற்கிடையில் காஷ்மீரில் பந்திப்பூரா பகுதியில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து நவீனரக செல்போன் ஆயுதங்கள் இருந்தது. கெரன் பகுதியில் நுழைய முயன்ற 2 பயங்கராவதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவ அடையாள அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Source: http://www.dinakaran.com

Thursday, October 29, 2009

வேலையின்மை, வறுமை மட்டுமல்ல தண்ணீராலும் வளரும் தீவிரவாதம்


ஜம்மு, : வேலையில்லா திண்டாட்டம், பசி, வறுமை ஆகியவற்றால் இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு தள்ளப்படுவதெல்லாம் பழைய நடைமுறை. தண்ணீர் கிடைக்காமல் தீவிரவாதியாவது புதியது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் Ôபஞ்சாபி தலிபான்Õ தீவிரவாதம் அதிகரித்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜிகாதி அமைப்புகள், இளைஞர்களை பஞ்சாப் தலிபானில் சேர்க்கின்றன. அவர்களிடம் இந்தியாவுக்கு எதிராக ஜிகாதி அமைப்புகள் போடும் தூபம் என்ன தெரியுமா? தண்ணீர். பஞ்சாப் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாபுக்குள் ரவி, சட்லஜ், பீஸ் என மூன்று நதிகள் பாய்கின்றன. தென்மேற்கு பருவமழை பல வடமாநிலங்களில் பொய்த்துப் போனதால் அந்த நதிகளில் நீர் இல்லை. ஆனால், நிலைமையை மறைத்து, பாகிஸ்தானுக்குள் வரும் நதி நீரை இந்தியா தடுத்து, வறட்சி ஏற்படுத்தி விட்டதாக பாக். பஞ்சாபில் ஜிகாதி அமைப்புகள் விஷ(ம) பிரசாரம் செய்கின்றன. இந்த அமைப்புகளுக்கு லஷ்கர் &ஈ& தொய்பா, அல்&கய்தா, தலிபான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளது. Ôநதிகளில் அணைகளை கட்டி நீரைத் தடுத்து, பாகிஸ்தானில் வறட்சி ஏற்படுத்தும் இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்துங்கள்Õ என்று பாக். பஞ்சாப் இளைஞர்களை இந்த அமைப்புகள் தூண்டி விடுவது தெரிய வந்துள்ளது. அவர்களது பொய் பிரசாரத்தை உண்மை என நம்பி, பஞ்சாப் தலிபான் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்து அப்பாவி இளைஞர்கள் ஆயுத பயிற்சி பெற்று வருகின்றனர். வெடிமருந்துகள், ஆயுதங்களுடன் இந்தியாவில் விரைவில் தாக்குதல் நடத்தவும் தயாராகி வருவதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடந்த பயங்கர தாக்குதல் போல மீண்டும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் நாசவேலை நடைபெறும் வாய்ப்புள்ளதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர். பஞ்சாப் தலிபான் தீவிரவாதிகள், தாக்குதலுக்கு தயாராகி வரும் தகவலை அடுத்தே அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Friday, September 26, 2008

துணை ஜனாதிபதி வேட்பாளரை பார்த்து, அசடு வழிந்த சர்தாரி


நியூயார்க் : அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலினை சந்தித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவரை பார்த்து, அவரது அழகில் மயங்கி அசடு வழிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேநேரத்தில், அதே சாரா பாலினை சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங்கின் மிடுக்கான செயல்பாடுகளை கண்டு, பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டினர். பெரிய பொருளாதார நிபுணரை சந்திக்கிறோம் என, நினைத்து சாரா பாலின் பதட்டம் அடைந்ததையும் அவர்கள் கண்டனர். பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் என்பதையும், உலகின் முதல் தர பொருளாதார நிபுணர் என்பதையும், மன்மோகன்சிங் தன் செயல்பாடுகள் மூலம்
வெளிப்படுத்தினார்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.,சபையின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தானின் புதிய அதிபர் ஆசிப் அலி சர்தாரி
ஆகியோரும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றுள்ள தலைவர்கள், பன்னாட்டு தலைவர்களுடன் மட்டுமின்றி, அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். அந்த அடிப்படையில், குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண முன்னாள் அழகு ராணியுமான சாரா பாலினையும் சந்தித்து வருகின்றனர். சாரா பாலின் அழகி, அதிகம் அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் விதவிதமாய் டிரஸ் அணிந்து ஆளும் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறவர் என்று பெயர் பெற்றவர். கடந்த புதனன்று சாரா பாலினை, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சந்தித்துப் பேசினார். அப்போது, "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஒட்டு மொத்த அமெரிக்காவும் உங்கள் மீது ஏன் பைத்தியமாக இருக்கிறது என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது' என்று சர்தாரி கூறினார். அப்போது அங்கிருந்த உதவியாளர் ஒருவர், போட்டோ எடுப்பதற்காக இருவரையும் கைகுலுக்கும்படி கேட்ட போது, "நான் மீண்டும் போஸ் கொடுக்க வேண்டுமா?' என புன்சிரிப்புடன் கேட்டார். உடனே சர்தாரி, "உதவியாளர் வலியுறுத்தினால், நான் உங்களை தழுவிக் கொள்வேன்' என, அசடு வழியும் வகையில் பேசினார். அவரின் இந்தப் பேச்சை கேட்ட சாரா பாலின், எதுவும் கூறாமல், புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.


அதிபர் சர்தாரியின் சந்திப்புக்குப் முன்னதாக, பிரதமர் மன்மோகன்சிங்கை சாரா பாலின் சந்தித்தார். அப்போது, மன்மோகனின் முகம் இறுக்கமாக காணப்பட்டது. அதேநேரத்தில், அரசியலில் மற்றும் சர்வதேச விவகாரங்களில் சிறிதும் அனுபவம் இல்லாத நாம், மிகப்பெரிய பொருளாதார நிபுணரை, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை சந்திக்கிறோம் என்பதால், சாரா பாலினும் ஒரு தர்ம சங்கடமான நிலைமைக்கு ஆளானார். சர்தாரியைப் போல அசடு வழியாமல், பிரதமர் மன்மோகன்சிங் அவரை லேசாக கையைப் பிடித்து குலுக்கியது, சாராவை மட்டுமின்றி, அங்கிருந்த நிருபர்களையும் வியப்படைய வைத்தது. சர்தாரியை சந்திக்கும் போது, சாதாரணமாக இருந்த சாரா பாலின், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கும் போது, சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். பிராந்திய பிரச்னைகள், எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல பிரச்னைகள் குறித்து, சாரா பாலினுக்கு பிரதமர் மன்மோகன்சிங்
விளக்கினார்.