Monday, August 16, 2010

குழந்தைகளை கைவிடும் பெற்றோருக்கு தூக்கு ?

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமலேசியாவில், பச்சிளங் குழந்தைகளை தெருவில் அனாதையாக விடுவது மற்றும் குப்பைத் தொட்டிகளில் போடுவது அதிகரித்து வருகிறது. சிலர் சிசுக் கொலையிலும் ஈடுபடுகின்றனர். கடந்த மார்ச் மாதம் சாலையோரத்தில் ஒரு ஆண் குழந்தையின் உடலை அவ்வழியாக சென்றவர்கள் கண்டுபிடித்தனர். குழந்தையின் இடது கை தெருநாய் கடித்ததால் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக இந்த ஆண்டின் 7 மாதங்களில் 60 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இரு 79 ஆக இருந்தது. கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை 241 குழந்தைகள் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதுதொடர்பாக, மலேசிய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ÔÔஇந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக, அனாதை குழந்தைகள் நலத் திட்டம் உட்பட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், குழந்தைகள் புறக்கணிப்பு தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
ஆனால், இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கொலை மற்றும் கொலைமுயற்சி பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக தூக்கு தண்டனை வரை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதுÕÕ என மலேசிய பெண்கள் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஷரிஸத் அப்துல் ஜலில் தெரிவித்துள்ளார்.
பச்சிளங்குழந்தைகளை புறக்கணிப்பதில், திருமணம் செய்து கொள்ளாமல் சட்டவிரோதமாக தொடர்பு வைத்திருக்கும் தம்பதிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக ஜலில் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகா கோடீஸ்வர மாணவர்கள் ஹார்வர்டு முதலிடம் பிடித்தது

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமகா கோடீஸ்வரர்கள் படித்த அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பட்டியலில், ஹார்வர்டு பல்கலைக்கழகம் 62 பேருடன் முதலிடத்தை பிடித்துள்ளதாக போர்ப்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவர்கள் படித்து பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். அப்படி படித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களில் தற்போது மகா கோடீஸ்வரர்களை கொண்ட பல்கலை. எது என்று போர்ப்ஸ் இதழ் ஆய்வு செய்தது. அதன் விரவரம் வருமாறு:
ஹார்வர்டு பல்கலை.யில் பயின்ற முன்னாள் மாணவர்கள் நடப்பு 2010ல் 62 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது கடந்த ஆண்டு 54 ஆக இருந்தது. எனவே இந்த பட்டியலில் அதிக எண்ணிக்கையுடன் ஹார்வர்டு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து ஸ்டேன்ட்போர்டு பல்கலை. 28 பேருடன் 2ம் இடத்தையும், கொலம்பியா பல்கலை. 20 பேருடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.

தற்போதைய பிரபல கோடீஸ்வரர்களான சிடாடெல் நிறுவனர் கெனீத் கிரிபின், நியூயார்க் மேயர் மிச்செல் புளூம்பெர்க், எண்ணெய் மற்றும் வங்கி நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள ஜார்ஜ் கெய்சர், ஈபேய்ஸ்சின் மெக் ஒயிட்மேன், அப்பலோ மேனேஜ்மென்ட் லியோன் பிளாக், பிளாக்ஸ்டோனின் ஹாமில்டன் ஜேம்ஸ் ஆகியோர் ஹார்வர்டு பல்கலை. முன்னாள் மாணவர்களாகும்.

யாகூ இணை நிறுவனர் யான்க், கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரைன் மற்றும் லேரி பேஜ், சன் இணை நிறுவனர் வினோத் கோஸ்லா, கேப் நிறுவன தலைவர் ராபர்ட் பிஷெர், நைக் நிறுவனர் பிலிப் நைட், ஆகியோர் ஸ்டேன்ட்போர்டின் முன்னாள் மாணவர்களாகும்.

இந்த பட்டியலில் பென்சிலொவேனியா பல்கலை. 18 பேருடன் 4வது இடத்தையும், சிகாகோ பல்கலை., நார்த்வெஸ்டன் பல்கலை. ஆகியவையும் முன்னணி 10 இடத்தில் இடம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

Thursday, August 12, 2010

சாமியார்களுக்கு மெயில் அனுப்பி லட்சக்கணக்கில் சுருட்டல்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஇ&மெயில் அனுப்பி 100க்கும் மேற்பட்ட சாமியார்களிடம் நூதன மோசடி செய்த பலே ஆசாமியை சென்னை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். போலி சாமியார் பணம் வாங்கி ஏமாற்றியதால், பழிக்கு பழியாக மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இ&மெயில் மூலம் போலியான தகவல்களை கொடுத்து சாமியார்களிடம் ஒரு கும்பல் பல லட்சம் மோசடி செய்து வருவதாக, கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் பாதிக்கப்பட்ட சாமியார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் செய்தனர்.

அதன்படி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் முதற்கட்டமாக போலியான இ&மெயில் வரும் முகவரியை கண்டு பிடித்தனர். அவைகள் ஆந்திர மாநிலம் ஏளூரில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை யினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பிரகாஷ் (37) என்பவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
வாக்குமூலத்தில் பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:

எனது சொந்த ஊர் மதுரை. இன்ஜினியரிங் படித்துள்ளேன். எனது தந்தை ராஜகோபால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அதே நிறுவனத்தில் ஓசூர் கிளையில் எனக்கு வேலை கிடைத்தது. எங்களது குடும்பத்தில் பல பிரச்னைகள் இருந்தன. ஓய்வின்போது தந்தைக்கு நிறுவனம் வழங்கிய தொகையின் ஒரு பகுதியை முதலீடாக வைத்து, மதுரையில் ஜவுளிக்கடை நடத்தினோம். அதுவும் நஷ்டத்தில் முடிந்தது. இதனால், எங்களது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், சாமியார் ஒருவர் எங்களை அணுகினார். உங்கள் குடும்பத்தில் பல பிரச்னைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். ஒரு பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார். பூஜை செய்ய ^2 லட்சம் செலவாகும் என்றார். தந்தை மீதம் வைத்திருந்த ^2 லட்சத்தை கொடுத்தோம்.

பணத்தை பெற்றுக் கொண்ட சாமியார் அதன் பிறகு வரவே இல்லை. தலைமறைவானார். நாங்கள் வறுமையில் வாடினோம். சில மாதங்களிலேயே தந்தை இறந்து விட்டார். அடுத்த சில மாதங்களில் தாயாரும் இறந்தார். பின்னர், சென்னை மேற்கு தாம்பரத்தில் குடியேறினேன். எங்களை ஏமாற்றிய போலி சாமியார்களை பழி வாங்க வேண்டும் என்று என் மனம் துடித்தது. எங்கெல்லாம் சாமியார்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் அவர்கள் பெயரில் மடம் இருக்கிறது என்று தேடிப்பார்த்து அவர்களுக்கு இ&மெயில் அனுப்புவேன். அதில், நான் மிகப்பெரிய பணக்காரன். ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று இ&மெயிலில் குறிப்பிடுவேன்.

பதிலுக்கு மெயில் அனுப்பினால், உங்களுக்கு தேவையான கார் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு சேவை களை செய்கிறேன். அதற்கு குறைந்த கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவேன். இதன்படி பல சாமியார்கள் என்னிடம் பணம் கட்டி ஏமாந்துள்ளார்கள். இப்படி அவர்கள் ஏமாறும்போது நான் சந்தோஷப்படுவேன்.
இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட சாமியார்களிடம் சுமார் ^8 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துள்ளேன்.
இவ்வாறு பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

நித்யானந்தா ஆசிரமத்திலும் மோசடி

பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமம், ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமம், கடப்பாவில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமம், விவேகானந்தா ஆசிரமம், மயிலாப்பூரில் உள்ள ரமண கேந்திரா ட்ரஸ்ட் ஆகிய ஆசிரமங் களை பிரகாஷ் ஏமாற்றி யுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேவை செய்பவர்களிடம் கருணை

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சேவை செய்யும் சாமியார்களை பிரகாஷ் ஏமாற்றுவதில்லை. அப்படியே ஏமாற்றினாலும், அவர்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவான். இப்படி பல சாமியார்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளான். கிடைக்கும் மோசடி பணத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்துள்ளான். ஏழை மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் கட்டியுள்ளான். ஆந்திரா சென்ற பிரகாஷ், அங்கு விபத்தில் இறந்த ஒருவரின் மனைவியை திருமணம் செய்துள்ளார். அப்போதே அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளன.

இறந்த மாணவனுக்கு ஃபீஸ்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஆறு மாதங்களுக்கு முன் இறந்துபோன மாணவனுக்கு ஃபீஸ் கட்டுமாறு தந்தைக்கு 2 முறை பள்ளி எஸ்எம்எஸ் அனுப்பியது. வெறுத்து போன தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ளது லா மார்டினர் பள்ளி. அதில் 6ம் வகுப்பு படித்த மாணவன் ரோவன். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவனை பள்ளி தலைமை ஆசிரியர் சுனிர்மால் சக்ரவர்த்தி, பிரம்பால் அடித்தார்.

வகுப்பறையில் குறும்பு செய்ததாக காரணம் கூறினார். சம்பவம் நடந்த 4 நாட்களில் அவமானம் தாங்காமல்  ரோவன் தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்களா அல்லது மாணவனின் வயதுக்கேற்ற நடத்தை பற்றி அக்கறையில்லையா என விவாதங்கள் நடந்தன. அப்போது பேட்டி அளித்த தலைமை ஆசிரியர், மாணவர்களை பிரம்பால் அடிக்கக்கூடாது என சட்டம் இருப்பது தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில், மகனை இழந்து 6 மாதங்களாக சோகத்தில் தவிக்கும் ரோவனின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து சமீபத்தில் எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்கள் மகனின் கல்விக் கட்டணமாக ஸி6,225 ஓரிரு நாளில் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது.
கொதித்துப் போன தந்தை அஜய் ராவ்லா, பள்ளிக்கு நேரில் சென்று நிர்வாகத்தின் லட்சணம் பற்றி புகார் செய்தார்.

இனி அதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதி தரப்பட்டது. மீண்டும் ஓரிரு நாட்கள் முன் எஸ்எம்எஸ் வந்தது. அதில் ரோவன் கல்வி கட்டணமாக ஸி9,000 பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது. நொந்து போன அஜய் ராவ்லா, கொல்கத்தா போலீசில் புகார் செய்தார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிடமும் பள்ளியின் அலட்சிய போக்கு பற்றி புகார் அளித்தார். அவற்றின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

Wednesday, August 11, 2010

அமெரிக்காவில் அன்னிய முதலீடு குறைகிறது: ஒபாமா கவலை

அமெரிக்காவில் சமீபகாலமாக அன்னிய முதலீடு கணிசமாக குறைந்து வருவதாக அதிபர் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார். அயல்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படாது என்ற அறிவிப்பால் உள்நாட்டு நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமான வெளிநாடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இதைப்பற்றியெல்லாம் அமெரிக்க அரசு கவலைப்படாது என்ற ஒபாமா, தொழில்நிறுவனங்களுக்கு தொடர்ந்து வரிச்சலுகை அளித்து அரசின் பணத்தை விரயம் செய்ய விரும்பவில்லை என்றார். டெக்சாஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒபாமா மேலும் பேசியது: தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதைவிட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச் சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள் கிடைக்கும். இதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும். இந்தத் திட்டம் நிச்சயம் அமெரிக்க மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமையும். அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப் பிரச்னையை எதிர்கொள்வதென்பது அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான பணிகள் இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இனிமேல் அயல்பணி ஒப்படைக்கப்படாது. இதில் அரசு உறுதியாக உள்ளது. இது தவிர, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நான் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினேன். நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை நான் நன்கு அறிவேன். இது தாற்காலிகமானதுதான். இதில் இருந்து விடுபட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் ஒபாமா.÷அட்லாண்டா மாகாணத்தில் இன்னும் சில மாதங்களில் மிகவும் முக்கியமான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும் என கருதப்படுகிறது. இதனால் ஒபாமா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில், இனி அயல்பணி ஒப்படைக்கப்படாது என்று கூறி வருகிறார்.

இன்றொருவர் & நாளை வேறொருவர் இது தானே ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஇன்றொருவருடன் தங்கலாம்; நாளை வேறொருவருடன் குடித்தனம் நடத்தலாம். பிடித்தால் ஒன்றாக சில நாள் வாழலாம்; பிடிக்காவிட்டால், ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் பிரியலாம்; இது தான் ‘தாலிகட்டா வாழ்க்கை’யான ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்.’
& ‘தாலி கட்டா கணவன் & மனைவியாக வாழும் மேற்கத்திய பாணி வாழ்க்கை பற்றி இப்படி டெல்லி உயர் நீதிமன்றம் சரமாரியாக சாடியுள்ளது.  
‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ என்ற தாலி கட்டா வாழ்க்கை முறை, மேற்கத்திய இறக்குமதி. பிட்சா, பர்கர் போன்ற ‘கொழுப்பு’ உணவுகள் போல, இந்த கலாசாரகேடும் இந்தியாவில் ஊடுருவி விட்டது.

லண்டனை சேர்ந்த வக்கீல் அலோக் குமார்; டெல்லியில் தங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார். அவருடன் பழகிய ஒரு பெண், அவருடன் ‘தாலி கட்டா மனைவி’யாக வாழ்ந்து வந்தார். இருவரும் ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் ஒன்றாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
சமீபத்தில், அந்த பெண்ணின் பெற்றோர், ‘நீ காதலிக்கும் அந்த வக்கீலையே திருமணம் செய்து கொள்ளேன்’ என்று கூற, அந்த பெண்ணும், அவரை கேட்டாள். ஆனால், அந்த வக்கீலோ, ‘நாம் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வருகிறோம்; வேண்டுமானால், பிரிந்து விடுவோம்’ என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் கொண்ட அந்த பெண், போலீசில்  புகார் தந்தார். ‘‘என்னுடன் பழகி, ஒன்றாக வாழ்ந்து இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார்; அவர் மீது கிரிமினல் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் தந்தார்.

போலீசும் வழக்குப் பதிவு செய்து, வக்கீலை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. வக்கீலோ, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். ‘‘நாங்கள் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இந்த முறையில் வாழும் தம்பதிகள் உண்மையான கணவன் & மனைவி அல்ல; எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற விருப்பத்துடன் தான் வாழ்கிறோம். என்னுடன் வாழ்ந்த பெண்ணை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. என் மீது எடுக்கப்படும் கிரிமினல் நடவடிக்கை செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி திங்க்ரா, இரு தரப்பிலும் வாதங்களை கேட்டார். பின்னர் ‘‘மனுதாரர் மீதான கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்கிறேன்’ என்று கூறி, ‘‘லிவ் இன் ரிலேஷன்ஷிÓ பற்றி சரமாரியாக கருத்துக்களை வெளியிட்டார். நீதிபதி கூறியதாவது: கணவன் & மனைவி என்பவர்கள், சட்டப்படி விதிகளை பின்பற்றி, கட்டுப்பாடுகளுடன் திருமண வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்கள் கோர்ட்டை நாடி நீதிக்கு முறையிடலாம். ஆனால், எந்த சட்டத்தின் படியும் இல்லாமல் மனம் போக்கில் வாழ்பவர்கள் ‘‘லிவ் இன் ரிலேஷன்ஷிÓப்பில் வாழ்பவர்கள். இந்த முறையில் வாழ்வோர், தாலிகட்டா மனைவி & கணவனாக வாழ்கின்றனர். இந்த முறையில்  திருமணம் ஆகாத பெண், திருமணமான ஆணுடன் வாழ முடிகிறது. அதுபோல, திருமணமாகாத ஆண், திருமணமான பெண்ணுடன் வாழ முடிகிறது.

இப்படி நிலை இருக்கும் போது, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லியோ, திருமணம் செய்ய மறுக்கிறார்; ஏமாற்றிவிட்டார் என்றோ புகார் தர முடியாது.
மேலும், இந்த முறையில், ‘‘மலடிÓ என்று தாலி கட்டா மனைவியை பார்த்து அந்த “கணவனோÓ அவனுக்கு ஆண்மைத்தனம் இல்லை என்று அந்த பெண்ணோ எந்த கோர்ட்டிலும் முறையிட்டு நீதி பெற முடியாது. காரணம், எந்த கட்டுப்பாடும், சட்டத்திட்டத்திற்கும் உட்பட்டத்தல்ல இந்த முறை. இவ்வாறு நீதிபதி திங்க்ரா கூறியுள்ளார்.

கரடியை முட்டியே கொன்றது தாய் பசு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateகடம்பூர் மலைப்பகுதியில் கன்றுக்குட்டியை தாக்கிய கரடியை தாய் பசு முட்டி கொன்றது. ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் கரளையம் லைன்தொட்டி கிராமம் உள்ளது. நேற்றுமுன்தினம் காட்டில் இருந்து ஆண் கரடி ஒன்று திடீரென கரளையம் கிராமத்தில் புகுந்தது. அங்கு பட்டியில் அடைக்கப்பட்ட 3 ஆடுகளை கடித்து கொன்றது. சில ஆடுகள் காயம் அடைந்தன. மணி என்பவரின் வீடு முன்பு நிறுத்தியிருந்த பைக் இருக்கையை சேதப்படுத்திவிட்டு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்தது. கன்றுகுட்டி அலறியதால் ஆவேசமடைந்த தாய் பசுவும், மற்ற மாடுகளும் சேர்ந்து கரடியை துரத்திச் சென்று, கொம்புகளால் முட்டித் தள்ளிக் கொன்றன.  தகவலறிந்து வனத்துறையினர் வந்து கரடியின் உடலை கைப்பற்றி ஆசனூரில் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், அங்கேயே கரடியின் சடலத்தை எரித்தனர்.