Showing posts with label குற்றம். Show all posts
Showing posts with label குற்றம். Show all posts

Monday, August 16, 2010

குழந்தைகளை கைவிடும் பெற்றோருக்கு தூக்கு ?

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமலேசியாவில், பச்சிளங் குழந்தைகளை தெருவில் அனாதையாக விடுவது மற்றும் குப்பைத் தொட்டிகளில் போடுவது அதிகரித்து வருகிறது. சிலர் சிசுக் கொலையிலும் ஈடுபடுகின்றனர். கடந்த மார்ச் மாதம் சாலையோரத்தில் ஒரு ஆண் குழந்தையின் உடலை அவ்வழியாக சென்றவர்கள் கண்டுபிடித்தனர். குழந்தையின் இடது கை தெருநாய் கடித்ததால் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக இந்த ஆண்டின் 7 மாதங்களில் 60 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இரு 79 ஆக இருந்தது. கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை 241 குழந்தைகள் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதுதொடர்பாக, மலேசிய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ÔÔஇந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக, அனாதை குழந்தைகள் நலத் திட்டம் உட்பட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், குழந்தைகள் புறக்கணிப்பு தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
ஆனால், இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கொலை மற்றும் கொலைமுயற்சி பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக தூக்கு தண்டனை வரை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதுÕÕ என மலேசிய பெண்கள் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஷரிஸத் அப்துல் ஜலில் தெரிவித்துள்ளார்.
பச்சிளங்குழந்தைகளை புறக்கணிப்பதில், திருமணம் செய்து கொள்ளாமல் சட்டவிரோதமாக தொடர்பு வைத்திருக்கும் தம்பதிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக ஜலில் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 12, 2010

இறந்த மாணவனுக்கு ஃபீஸ்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஆறு மாதங்களுக்கு முன் இறந்துபோன மாணவனுக்கு ஃபீஸ் கட்டுமாறு தந்தைக்கு 2 முறை பள்ளி எஸ்எம்எஸ் அனுப்பியது. வெறுத்து போன தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ளது லா மார்டினர் பள்ளி. அதில் 6ம் வகுப்பு படித்த மாணவன் ரோவன். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவனை பள்ளி தலைமை ஆசிரியர் சுனிர்மால் சக்ரவர்த்தி, பிரம்பால் அடித்தார்.

வகுப்பறையில் குறும்பு செய்ததாக காரணம் கூறினார். சம்பவம் நடந்த 4 நாட்களில் அவமானம் தாங்காமல்  ரோவன் தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்களா அல்லது மாணவனின் வயதுக்கேற்ற நடத்தை பற்றி அக்கறையில்லையா என விவாதங்கள் நடந்தன. அப்போது பேட்டி அளித்த தலைமை ஆசிரியர், மாணவர்களை பிரம்பால் அடிக்கக்கூடாது என சட்டம் இருப்பது தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில், மகனை இழந்து 6 மாதங்களாக சோகத்தில் தவிக்கும் ரோவனின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து சமீபத்தில் எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்கள் மகனின் கல்விக் கட்டணமாக ஸி6,225 ஓரிரு நாளில் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது.
கொதித்துப் போன தந்தை அஜய் ராவ்லா, பள்ளிக்கு நேரில் சென்று நிர்வாகத்தின் லட்சணம் பற்றி புகார் செய்தார்.

இனி அதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதி தரப்பட்டது. மீண்டும் ஓரிரு நாட்கள் முன் எஸ்எம்எஸ் வந்தது. அதில் ரோவன் கல்வி கட்டணமாக ஸி9,000 பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது. நொந்து போன அஜய் ராவ்லா, கொல்கத்தா போலீசில் புகார் செய்தார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிடமும் பள்ளியின் அலட்சிய போக்கு பற்றி புகார் அளித்தார். அவற்றின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

Wednesday, August 11, 2010

இன்றொருவர் & நாளை வேறொருவர் இது தானே ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஇன்றொருவருடன் தங்கலாம்; நாளை வேறொருவருடன் குடித்தனம் நடத்தலாம். பிடித்தால் ஒன்றாக சில நாள் வாழலாம்; பிடிக்காவிட்டால், ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் பிரியலாம்; இது தான் ‘தாலிகட்டா வாழ்க்கை’யான ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்.’
& ‘தாலி கட்டா கணவன் & மனைவியாக வாழும் மேற்கத்திய பாணி வாழ்க்கை பற்றி இப்படி டெல்லி உயர் நீதிமன்றம் சரமாரியாக சாடியுள்ளது.  
‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ என்ற தாலி கட்டா வாழ்க்கை முறை, மேற்கத்திய இறக்குமதி. பிட்சா, பர்கர் போன்ற ‘கொழுப்பு’ உணவுகள் போல, இந்த கலாசாரகேடும் இந்தியாவில் ஊடுருவி விட்டது.

லண்டனை சேர்ந்த வக்கீல் அலோக் குமார்; டெல்லியில் தங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார். அவருடன் பழகிய ஒரு பெண், அவருடன் ‘தாலி கட்டா மனைவி’யாக வாழ்ந்து வந்தார். இருவரும் ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் ஒன்றாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
சமீபத்தில், அந்த பெண்ணின் பெற்றோர், ‘நீ காதலிக்கும் அந்த வக்கீலையே திருமணம் செய்து கொள்ளேன்’ என்று கூற, அந்த பெண்ணும், அவரை கேட்டாள். ஆனால், அந்த வக்கீலோ, ‘நாம் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வருகிறோம்; வேண்டுமானால், பிரிந்து விடுவோம்’ என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் கொண்ட அந்த பெண், போலீசில்  புகார் தந்தார். ‘‘என்னுடன் பழகி, ஒன்றாக வாழ்ந்து இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார்; அவர் மீது கிரிமினல் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் தந்தார்.

போலீசும் வழக்குப் பதிவு செய்து, வக்கீலை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. வக்கீலோ, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். ‘‘நாங்கள் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இந்த முறையில் வாழும் தம்பதிகள் உண்மையான கணவன் & மனைவி அல்ல; எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற விருப்பத்துடன் தான் வாழ்கிறோம். என்னுடன் வாழ்ந்த பெண்ணை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. என் மீது எடுக்கப்படும் கிரிமினல் நடவடிக்கை செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி திங்க்ரா, இரு தரப்பிலும் வாதங்களை கேட்டார். பின்னர் ‘‘மனுதாரர் மீதான கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்கிறேன்’ என்று கூறி, ‘‘லிவ் இன் ரிலேஷன்ஷிÓ பற்றி சரமாரியாக கருத்துக்களை வெளியிட்டார். நீதிபதி கூறியதாவது: கணவன் & மனைவி என்பவர்கள், சட்டப்படி விதிகளை பின்பற்றி, கட்டுப்பாடுகளுடன் திருமண வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்கள் கோர்ட்டை நாடி நீதிக்கு முறையிடலாம். ஆனால், எந்த சட்டத்தின் படியும் இல்லாமல் மனம் போக்கில் வாழ்பவர்கள் ‘‘லிவ் இன் ரிலேஷன்ஷிÓப்பில் வாழ்பவர்கள். இந்த முறையில் வாழ்வோர், தாலிகட்டா மனைவி & கணவனாக வாழ்கின்றனர். இந்த முறையில்  திருமணம் ஆகாத பெண், திருமணமான ஆணுடன் வாழ முடிகிறது. அதுபோல, திருமணமாகாத ஆண், திருமணமான பெண்ணுடன் வாழ முடிகிறது.

இப்படி நிலை இருக்கும் போது, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லியோ, திருமணம் செய்ய மறுக்கிறார்; ஏமாற்றிவிட்டார் என்றோ புகார் தர முடியாது.
மேலும், இந்த முறையில், ‘‘மலடிÓ என்று தாலி கட்டா மனைவியை பார்த்து அந்த “கணவனோÓ அவனுக்கு ஆண்மைத்தனம் இல்லை என்று அந்த பெண்ணோ எந்த கோர்ட்டிலும் முறையிட்டு நீதி பெற முடியாது. காரணம், எந்த கட்டுப்பாடும், சட்டத்திட்டத்திற்கும் உட்பட்டத்தல்ல இந்த முறை. இவ்வாறு நீதிபதி திங்க்ரா கூறியுள்ளார்.

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபஸ், ரயில் நிற்பதற்குள் படியில் இருந்து குதிக்கும் பயணி போலிருக்கிறது. பழக்கதோஷத்தில் விமானம் நிற்பதற்குள் லக்கேஜை எடுக்க முயன்று, ஊழியரின் தலையில் இடித்தார். ‘சாரி’ சொல்லாமல் தன்னையே திட்டியதால் வெறுத்த ஊழியர், விமானத்தை மட்டுமின்றி வேலையிலிருந்தே இறங்கிச் சென்று விட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார்.

கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி. தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார்.

விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர். தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின.

வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.
விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார்.

பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார். விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது.

தனியார் ஆஸ்பத்திரி, அரசு பொதுமருத்துவமனை மீது பரபரப்பு புகார்: சென்னையில் தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் ஏழை பெண்

தனியார் ஆஸ்பத்திரி, அரசு பொதுமருத்துவமனை மீது பரபரப்பு புகார்: சென்னையில் தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் ஏழை பெண்சென்னையில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையாலும், அரசு பொது மருத்துவமனையின் மெத்தன போக்காலும் ஏழை இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.
 
அவர் பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பரிதாப நிலையில் உள்ளார்.
 
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் ராம்நாத் (வயது 30), டெய்லர் தொழில் செய்கிறார். இவரது மனைவி குணசுந்தரி (21). இவர்களுக்கு 2 மாத ஆண் கைக்குழந்தை உள்ளது. குணசுந்தரி கடந்த மாத இறுதியில் காய்ச்சல், இருமல், சளித்தொல்லையால் அவதிப்பட்டார். இதற்காக நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றார்.
 
பின்னர் அங்கு பணிபுரியும் டாக்டர்கள் எழுதி கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார். அந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு குணசுந்தரிக்கு வியாதி அதிகமாகிவிட்டது. அவரது உடல் முழுவதும் சிறிய, சிறிய கொப்புளங்கள் உண்டாகியது. உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதுபோல புண்களாகிவிட்டன. இதனால் அவரது முகம் கோரமாக மாறியது. கண்பார்வையும் மங்கிவிட்டது.
 
பின்னர் குணசுந்தரியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே சாப்பிட்ட மருந்து, மாத்திரையினால் ஏற்பட்ட அலர்ஜி (டிரக் அலர்ஜி) காரணமாக இவ்வாறு உடல் முழுக்க கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும் என்றும் தெரிவித்தனர்.
 
உடனே குணசுந்தரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெறுகிறார்.
 
இந்த நிலையில், தவறான சிகிச்சை கொடுத்த தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து குணசுந்தரியின் கணவர் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார்.
 
ஆனால், சம்பவம் நடந்தது நங்கநல்லூர் என்பதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கும்படி கமிஷனர் அலுவலக போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். ஆனால் ஏற்கனவே பழவந்தாங்கல் போலீசில் புகார் கொடுத்து பார்த்தோம், சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
 
எனவே, தான் இங்கு புகார் கொடுக்க வந்தேன் என்று குணசுந்தரியின் கணவர் கூறினார். மறுநாள் வரும்படி போலீசார் தெரிவித்தனர். இதன்படி நேற்று குணசுந்தரியின் கணவர் ராம்நாத், தனது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேருடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.
 
குணசுந்தரிக்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சை காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசு பொது மருத்துவமனையிலும் குணசுந்தரிக்கு அவ்வளவு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது கண்பார்வை மங்கிக்கொண்டே போகிறது. கண் டாக்டர் ஒருவரை வரவழைத்து சிகிச்சை அளிப்பதாக 3 நாட்களாக சொல்லுகிறார்கள். கண் டாக்டர் வந்தபாடில்லை.
 
உடல் முழுக்க புண்ணாக இருப்பதால் குணசுந்தரியால் அவரது கைக்குழந்தைக்குக்கூட தாய்ப்பால் கொடுக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளார். எனவே இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு குணசுந்தரிக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை காணவேண்டும் என்று பொதுமக்கள் பரபரப்பாக பேட்டி கொடுத்தனர்.

சரியாக படிக்காததால் 11 மாணவ மாணவிகளுக்கு விறகு கட்டையால் சூடு போட்ட ஆசிரியை சிறையில் அடைப்பு

சரியாக படிக்காததால்    11 மாணவ மாணவிகளுக்கு விறகு    கட்டையால் சூடு போட்ட ஆசிரியை    சிறையில் அடைப்புஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் ஜமான்ருல் பள்ளி கிராமத்தில் அரசினர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் சுருதா கீர்த்தி.
 
இப்பள்ளியில் 2 மற்றும் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் வீட்டுப்பாடம் சரியாக செய்வதில்லை. சரியாகபாடம் படிப்பதும் இல்லை.


இந்நிலையில் நேற்றும் 11 மாணவ- மாணவிகள் வீட்டுப்பாடம் படிக்காமல் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களிடம் ஏன்படிக்க வில்லை என்று கேட்டதற்கு டி.வி.யில் சினிமா பார்த்ததால் படிக்கவில்லை என்றனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மதிய உணவு சமையல் கூட அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகுக்கட்டையை எடுத்து வந்து 11 பேருக்கும் சூடு போட்டார். இதில் மாணவ- மாணவிகள் அலறித் துடித்தனர். ஆனாலும் விட வில்லை. கை, கால், முதுகு போன்ற பகுதிகளில் ஓட ஓட விரட்டி சூடு வைத்தார்.
 
அவர்களது அலறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் ஓடி வந்து மாணவ-மாணவிகளை மீட்டனர். அவர்களுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இதுபற்றி மொகராபாத் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சுருதா கீர்த்தியை கைது செய்தனர். கிராமமக்கள் கூறும்போது, தலைமை ஆசிரியையின் கடுமையான தண்டனைக்கு பயந்துதான் எங்க விட்டு குழந்தைகள் பள்ளிக்கு போக மறுக்கின்றன. சுருதாவுக்கு மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்

Tuesday, August 10, 2010

ஆதிவாசி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: செல்போனில் படம் எடுத்து பரப்பினர்

ஆதிவாசி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்:    செல்போனில் படம் எடுத்து பரப்பினர்மேற்கு வங்காளம் மாநிலம் சூரி பகுதியில் செல்போனில் ஆபாச படம் ஒன்று பரவியது.
 
அதில் 17 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். ஆண்கள் அவரை கண்ட இடங்களில் தொட்டு மானபங்கப்படுத்துகின்றனர்.
 
சிறுவர்கள் அவர் மீது கல் வீசி தாக்குகின்றனர். அந்த பெண் அழுது கொண்டே முகத்தை கைகளால் மூடிய படி வருகிறார். அவர் நடக்க முடியாமல் தள்ளாடிய போதெல்லாம் பிரம்பால் அடிக்கின்றனர்.


இந்த காட்சி 11 நிமிடம் ஓடுகிறது. வயல்வெளி மற்றும் தெருக்கள் வழியாக அவரை அழைத்து வருவது போல காட்சி இருந்தது. 100 பேர் அவரை பின் தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர்.
 
எந்த ஊரில் இந்த சம்பவம் நடந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை. நிருபர்கள் சிலரின் செல்போனுக்கும் இந்த வீடியோ காட்சி வந்தது.
 
அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிமா யூன் ஹபிக், மாவட்ட கலெக்டர் சுமித்ரா ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
 
இது பற்றி அவர்கள் விசாரணை நடத்த உத்தர விட்டனர். வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து அது எந்த ஊர் என கண்டு பிடிக்கும் பணி நடந்தது. அதில் ராம்புத்காத் பகுதியில் உள்ள சில கிராமங்கள் போல காட்சி இருந்தது. எனவே அந்த கிராமங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர்.
 
அதில் ஒரு ஊரில் இந்த சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தனர். நிர்வாண ஊர்வலம் நடத்தியதாக 5 பேரை கைது செய்தனர். ஆனாலும் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண்ணை இன்னும் அடையாளம் காணவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.
 
எதற்காக அவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தினார்கள்? பஞ்சாயத்து தீர்ப்பால் இது நடத்தப்பட்டதா? என்று விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காத தால் விஷயம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது.

ஏடிஎம் பணம் கொள்ளையடிக்க பசை, நகம்வெட்டி போதுமாம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஅடுத்த முறை நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க நுழைந்ததும், எந்திரத்தின் பட்டன்களில் ஏதாவது அழுந்தியிருக்கிறதா என்பதை கவனியுங்க. பசை, ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டி பயன்படுத்தி உங்கள் பணத்தை திருடர்கள் கொள்ளையடிக்க கூடும்.அதில் லேட்டஸ்ட் டெக்னிக் இதோ:

கணக்கில் பணம் இல்லாத ஒரு டெபிட் கார்டை கதவில் இருக்கும் கருவியில் நுழைத்து உள்ளே நுழைவார் மிஸ்டர் திருடர். கார்டை உள்ளே செலுத்த தேவையில்லாத, செருகிவிட்டு வெளியே எடுத்து விடும் வசதியுள்ள ஏடிஎம்களே அவரது குறி. (எஸ்பிஐ, பிஓபி உட்பட அரசு, தனியார் வங்கிகள் சிலவற்றில் இந்த வகை ஏடிஎம்களே உள்ளன)
ஏடிஎம் கீபோர்டில் ஒரு பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் அது மேலே வராமல் பட்டன்களுக்கு இடையே பசையை தடவி ஒட்டி விடுவார். பட்டனை அழுத்தியதும் மெஷின் ஆன் ஆகிவிடும். பிறகு, வெளியேறி விடுவார் மிஸ்டர் திருடர்.

அடுத்த அப்பாவி உள்ளே வருவார். திரையை கவனிக்காமல் நேராக கார் டை தேய்த்து வெளியே எடுப்பார். பின் நம்பர் கேட்கும். பட்டனை அழுத்துவார். ஏற்கனவே ஒரு பட்டன் அழுத்தப்பட்டிருப்ப தால் பாதுகாப்பு அம்சங்களின்படி தவறான டிரான்சாக்ஷனாக கருதி ஸ்கிரீன் ஆப் ஆகிவிடும். அடுத்ததாக காத்திருக்கும் மிஸ்டர் திருடர், ‘எவ்ளோ நேரம் சார். வெளி யே வாங்க, நாங்க போனதும் டிரை பண்ணுங்க’ என்று சத்தம் கொடுப்பார்.

அப்பாவி வெளியேறியதும், உள்ளே நுழையும் மிஸ்டர் திருடர், கையடக்கமான ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டியால் பசையுள்ள பட்டனை ரிலீஸ் செய்வார். ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகும். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட கடைசி பின் நம்பர் மெமரியில் இருக்கும் என்பதால், எவ்வளவு வேண்டுமோ பணத்தை குறிப்பிட்டு எடுத்துக் கொண்டு ஜென்டிலாக வெளியேறுவார் மிஸ்டர் திருடர்.

காதலனை அடித்து உதைத்து காதலியிடம் பலாத்கார முயற்சி

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபெசன்ட் நகர் கடற்கரையில், போலீஸ் என்று கூறி காதலனை சரமாரியாக அடித்து உதைத்து, காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சசிகலா (22). ஏற்றுமதி ஆடை நிறுவன ஊழியர். இவரது காதலன் ரமேஷ் (24) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). சிங்கப்பூரில் வேலை செய்கிறார். விடுமுறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். காதலர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலுக்கு சென்றனர். சாமி கும்பிட்டுவிட்டு, கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த 5 வாலிபர்கள், “ நாங்கள் மப்டி போலீஸ், இந்த நேரத்துல உங்களுக்கு இங்கே என்ன வேலை?, பாலியல் தொழில் செய்கிறீர்களா?“ என்று கேட்டு மிரட்டினர். பயந்து போன காதல் ஜோடி, ‘நாங்கள் லவ்வர்ஸ். நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல‘ என்றனர். ‘போலீசிடமே திமிராக பேசுகிறீர்களா’ என்று கேட்டபடி, 5 பேரும் ரமேஷை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளினர். சசிகலாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இருவரும் கூச்சலிட்டதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் 5 வாலிபர் களும் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து, திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மதியரசு தலைமையில் போலீசார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு இன்னொரு காதல் ஜோடியிடம் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் கொட்டிவாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சோழன் (38), சீனிவாசன் (29), நாகராஜ் (30), குமார் (24) மற்றும் ஒருவர் என்பது தெரிந்தது. 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர். மற்றொருவரை தேடுகின்றனர்.
பெசன்ட்நகர் கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பலர், பெற்றோருக்கும் போலீஸ் விசாரணைக்கும் பயந்து புகார் கொடுப்பதில்லை. இதுபோன்ற அடாவடி செயல்களை தடுக்க இப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு கமிஷனர் தகவல்

இதுகுறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா கூறுகையில், “கடற்கரைக்கு வரும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெசன்ட் நகர் கடற்கரையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்படும்“ என்றார்.

Monday, August 9, 2010

வரதட்சணை கேட்பது குற்றமல்ல

வரதட்சணை கேட்பது குற்றமல்ல. ஆனால், கேட்டது கிடைக்கவில்லை என்பதற்காக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினால் மட்டுமே குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்சிங். இவரது மனைவி பெயர் சந்தோஷ். இவர் கடந்த 1993ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாக சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக அமர்சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
இந்த வரதட்சணை கொடுமை வழக்கில் அமர்சிங், அவரது சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் குற்றவாளிகள் என கீழ்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 3 பேரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமர்சிங்கின் தாய் மற்றும் சகோதரரை விடுதலை செய்தது. ஆனால், சந்தோஷின் கணவர் அமர்சிங்குக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

அமர்சிங்கின் தாய் மற்றும் சகோதரர் விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அமர்சிங்கும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், Ôமனைவி வீட்டாரிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தருமாறு கேட்டது உண்மைதான். அவர்கள் ஸ்கூட்டர் வாங்கித் தரவில்லை. அதற்காக என் மனைவியை நான் எந்தவகையிலும் நிர்பந்தம் செய்யவோ அல்லது கொடுமைப்படுத்தவோ இல்லைÕ என்று அமர்சிங் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.பி.பட்நாயக் ஆகியோர், “அமர்சிங், ஸ்கூட்டர் கேட்ட விஷயம் இரண்டு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்காக மனைவியை அவர் கொடுமைப்படுத்தினார் என்பது சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை. வரதட்சணை கேட்பது குற்றமாகாது. அது கிடைக்காத பட்சத்தில் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால் தான் குற்றமாகும். இந்த கொடுமையின் காரணமாக மனைவி இறந்தால் அது தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதனால், அமர்சிங்கை விடுதலை செய்கிறோம்Ó என தீர்ப்பளித்தனர்.

வரதட்சணை கேட்பது குற்றமாகாது. அது கிடைக்காத பட்சத்தில் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தினால் தான் குற்றமாகும்.

பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி போச்சு, டவல் வந்தது

உ.பி. Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ரூப்சந்த்பூர் கிராமத்தை சேர்ந்த கீதாதேவி (38). வயிற்று வலிக்காக ஜான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு கடந்த ஜூலை 7ம் தேதி ஆபரேஷன் மூலம் கட்டி அகற்றப்பட்டது. ஆனாலும், வயிற்று வலி குறையவே இல்லை. மீண்டும் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்ற கீதாதேவிக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, வயிற்றில் கட்டிக்கு பதிலாக மர்ம பொருள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், கீதா தேவிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்தனர். வயிற்றை அறுத்து பார்த்தபோது, ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட சிறிய டவல் (துண்டு) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை உடனடியாக அகற்றினர். கட்டியை அகற்றிவிட்டு, கவனக் குறைவாக டவலை உள்ளே வைத்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலியை பலாத்காரம் செய்து நிர்வாண படம்

மிஸ்டு கால்’ காதலில் விழுந்த நெல்லை இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர், போதை மயக்கம் தெளியாமல் அரையிலேயே மயங்கி கிடந்ததால் போலீசாரிடம் சிக்கினார். தென்காசி மலையன்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் அருந்ததி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).  இவருடைய செல்போனில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு எண்ணில் இருந்து தொடர்ந்து ‘மிஸ்டு கால்’ வந்துள்ளது. இதையடுத்து, அந்த எண்ணை தொடர்பு கொண்டு அருந்ததி, பேசினார். மறுமுனையில் பேசிய வாலிபர், தான் துபாயில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வாலிபர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேசிய வாலிபர், துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வருவதாகவும் அங்கு சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய அருந்ததி, பெட்டியுடன் திருவனந்தபுரம் சென்றுள்ளார். அதற்கு முன்பாக இருவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால், அந்த வாலிபர் தான் அணிந்து வரும் உடையின் நிறத்தை கூறியுள்ளார். அதை வைத்து அருந்ததி அவரை அடையாளம் கண்டு கொண்டார்.

அன்று இரவு இருவரும் திருவனந்தபுரம் தம்பானூர் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அப்போது வாலிபர் அருந்ததிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். அந்த வாலிபரும் அதிகளவு மது அருந்தியுள்ளார். போதையில் அருந்ததி மயக்கினார். பின்னர், அவரை பலாத்காரம் செய்த அந்த வாலிபர் அவரை நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளார். மறுநாள் பிற்பகல் ஆகியும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், தம்பானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என நினைத்த போலீசார்,

 அவர்களை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்கள் போதையில் இருப்பது உறுதியானது.  
இதைத் தொடர்ந்து, அவர்களின் போதையை தெளிய வைத்து போலீசார் விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் செங்கோட்டை வடகரை ஜாகீர் உசேன் ரோடு பகுதியைச் சேர்ந்த மைதீன் மகன் அமீது என தெரிய வந்தது. அமீதை போலீசார் கைது செய்தனர்.

விமான நிலையத்தில் பறிமுதலான வாஸ்து மீன்கள் சிங்கப்பூருக்கே திரும்பின

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateசிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ^ 2.5 லட்சம் மதிப்புள்ள வாஸ்து மற்றும் அலங்கார மீன்கள் பறிமுதல்  செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் இருந்து இறங்கிய பய ணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த முதுமது ரபீக் (29) என்ப வர், சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று திரும்பினார்.  
அவரிடம் இருந்த 2 சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நீர் நிரப்பிய பாலிதீன் கவரில் 184 வாஸ்து மீன்கள், அலங்கார  மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ^2 லட்சத்து 50 ஆயிரம். அவரிடம் விசாரித்ததில், சிங்கப்பூரில்  ^50 ஆயிரத்துக்கு வாங்கியதாக கூறினார். இந்த மீன்களால் இந்தியாவில் நோய்க் கிருமிகள் பரவும் என்பதால், அதை சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.  அதன்படி, காலை 11.45 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

விமான நிலையத்தில் பறிமுதலான வாஸ்து மீன்கள் சிங்கப்பூருக்கே திரும்பின

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateசிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ^ 2.5 லட்சம் மதிப்புள்ள வாஸ்து மற்றும் அலங்கார மீன்கள் பறிமுதல்  செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் இருந்து இறங்கிய பய ணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த முதுமது ரபீக் (29) என்ப வர், சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று திரும்பினார்.  
அவரிடம் இருந்த 2 சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நீர் நிரப்பிய பாலிதீன் கவரில் 184 வாஸ்து மீன்கள், அலங்கார  மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ^2 லட்சத்து 50 ஆயிரம். அவரிடம் விசாரித்ததில், சிங்கப்பூரில்  ^50 ஆயிரத்துக்கு வாங்கியதாக கூறினார். இந்த மீன்களால் இந்தியாவில் நோய்க் கிருமிகள் பரவும் என்பதால், அதை சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.  அதன்படி, காலை 11.45 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

Friday, August 6, 2010

அசாருதீனுடன் தொடர்பு: பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா விவாகரத்து கேட்டு மனு

அசாருதீனுடன் தொடர்பு:    பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா    விவாகரத்து கேட்டு மனு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மேட்ச் பிக்சிங்கில் (சூதாட்டம்) ஈடுபட்டதால் இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. அவர்தற்போது காங்கிரசில் சேர்ந்து எம்.பி. ஆகிஇருக்கிறார்.
 
அசாருதீன் தனது முதல்- மனைவி நஸ்ரினை விவாகரத்து செய்து விட்டு சங்கீதா பிஜ்லானியை 2-வதாக திருமணம் செய்து இருந்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்ததிருமணம் நடந்தது.
 
இதற்கிடையே அசாருதீனுக்கும், பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக சங்கீதா பிஜ்லானியை அசாருதீன் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்தனர்.
 
இந்த நிலையில் ஜூவாலா தனது கணவரும் உலகின் 13-ம் நிலை பேட்மின்டன் வீரருமான சேட்டன் ஆனந்திடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இதை ஜூவாலா உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் அசாருதீனை திருமணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக அவர்கூறும் போது நான் விவாகரத்து கேட்டு மனு செய்து இருப்பது உண்மைதான். இதற்கு அசாருதீனுடன் உள்ள தொடர்புதான் என்று கூறப்படுகிறது வதந்தியே. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார்.

Thursday, August 5, 2010

வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு; ரஞ்சிதா தொடர்பு தனிப்பட்ட பிரச்சினை

திருவண்ணாமலையை சேர்ந்த
நித்யானந்தா சாமிகள் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். தமிழகத்தில்
40 ஆசிரமங்கள் இயங்கி வந்தன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும்
நித்யானந்தாவின் ஆசிரம கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
 
கடந்த
6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது
போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பெங்களூர்
பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு நெருங்கிய சீடராக இருந்த லெனின்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, ரஞ்சிதாவுடன் நித்யானந்தா
ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் ரகசியமாக படம் பிடித்தேன் என்று
ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
 
ஒரு
மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில்
போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா
ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது
பணிகளை செய்து வருகிறார்.
 
நித்யானந்தாவை கான பெண் பக்தர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில்
நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று
நித்யானந்தாவை சந்தித்து பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு
தெரிவித்தார். தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு ஹிலிங் தெரபி
சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்தார்.
 
இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
 
நித்யானந்தா
சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக
இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில்
சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில்
நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
 
தற்போதுள்ள
பிரச்சி னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம்
கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக் கொண்டதுதான்
நீங்கள் செய்த தவறு என்று அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும், சிரித்த
முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, சுமார் 200 நாடுகளில்
ஆசிரம கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச்செல்லவில்லை.
கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர்.
வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும் என்று கூறினார்.
நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார்
அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்.
 
கேள்வி:- ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?
 
பதில்:- அந்த பெண்ணே என்மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது என்றார்.
 
கேள்வி:- ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா?
 
பதில்:-
இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும்
இல்லறத்தில் ஈடுபட்டுக்கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர்.
இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.
 
அதே நேரத்தில்
தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின்
செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை
செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது
மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?
 
கேள்வி:- சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்யானந்தா தமிழ்நாட்டு பக்கமே எட்டிப்பார்க்கவில்லையே? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?
 
பதில்:-
தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது. சென்னையில் உள்ள
பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.
வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார்.
விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன்.
நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
 
பொதுவாக
தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக
உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும்
தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50
ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
 

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

Wednesday, August 4, 2010

மேல்-சபை எம்.பி. தேர்தல் ஓட்டுப்போட பணம் கேட்டதில் தவறு இல்லை; ஜார்கண்ட் எம்.எல்.ஏ. சொல்கிறார்


ஜார்கண்ட் மாநிலத்தில் டெல்லி மேல்-சபைக்கு 2 எம்.பி.க்கள் தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு அவர்களை தேர்வு செய்தனர்.

எம்எல்.ஏ.க்கள் கட்சி கட்டளைப்படிதான் ஓட்டு போடுவார்களா? அல்லது பணம் வாங்கி கொண்டு வேறு வேட்பாளருக்கு ஒட்டு போடுவார்களா? என கண்டறிய சி.என்.என்.-ஐ.பி.என். டி.வி. நிறுவனம் அதிரடி வேட்டை ஒன்றில் ஈடுபட்டது.

நிருபர்களை புரோக்கர்கள் போல அனுப்பி பல எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வைத்தனர். தொழில் அதிபர் ஒருவருக்கு ஓட்டு போட்டால் பணம் தருவதாக அவர்கள் கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட எம்.எம்.ஏ.க்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என்று பேரம் பேசினார்கள்.

இந்த உரையாடல்கள் அனைத்தையும் ரகசிய வீடியோ மூலம் பதிவு செய்த அவர்கள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்தனர். அதில் காங்கிரஸ், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா, பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிக்கினார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பி உள்ளது. கட்சி மேலிடங்களும் நோட்டீசு அனுப்பி உள்ளன.

இதில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ, ராஜேஷ், ராஞ்சியில் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

மேல்-சபை எம்.பி. தேர்தலில் ஓட்டுப்போட பணம் கேட்டது உண்மைதான். இது எனது தனிப்பட்ட விஷயம். இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

நான் பணம் கேட்டேனே தவிர பணம் வாங்கவில்லை. எனவே இதில் குற்றம் நடக்கவில்லை. இதனால் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தனிப்பட்ட முறையில் நாங்கள் பலவிஷயங்களை பலரிடம் பேசலாம். அதைப்போலத்தான் இதிலும் பேசி இருக்கிறோம். யாரோ சதித்திட்டம் செய்து எங்களை சிக்க வைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் தவறு செய்து இருந்தால் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் பணம் எதுவும் வாங்கவில்லை. நாங்கள் பணம் வாங்கியதற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, May 25, 2010

ஓமனில் இருந்து 21 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப ஏற்பாடு தீவிரம்

துபாய்: ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் பலர் கள்ளத்தனமாக அந்நாட்டில் குடியேறியுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும், விசா காலம் முடிந்தும் தங்கியுள்ள இந்தியர்களை, அபராதம் ஏதும் விதிக்காமல் வெளியேற்ற, அந்நாட்டில் உள்ள இந்திய சமூக நல அமைப்பு, இந்திய தூதரகத்துடன் இணைந்து உதவ முன்வந்துள்ளது. இதுவரை 21 ஆயிரம் பேர் தங்கள் பெயரை தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 11 ஆயிரத்து 500 பேர் கைரேகையை பதிவு செய்துள்ளனர். இதில், எட்டாயிரம் பேர் ஏற்கனவே ஓமனை விட்டு வெளியேறி விட்டனர். மீதமுள்ள மூன்றாயிரத்து 500 பேரின் கைரேகை பதிவு செய்யப்பட்ட பின் அவர்களுக்கு அவசரகால சான்றிதழ் கொடுக்கப்பட்டு தாயகம் செல்ல உரிய நடைமுறைகள் செய்யப்படும்.

Monday, February 1, 2010

ஜூனியர் என்.டி.ஆருக்கு திடீர் திருமணம்: அதிர்ச்சியில் விஷம் குடித்த ரசிகை


நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த ரசிகை விஷம் குடித்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவருக்கு ஆந்திராவில் ஏராளமான ரசிகை பட்டாளம் உண்டு. இந் நிலையில் அவர் லட்சுமி பிரணதி என்ற பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த திருமண செய்தியை தெலுங்கு தனியார் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின.

இதைப்பார்த்த கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர். ரசிகை அஞ்சனாதேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கடந்த சில மாதங்களாக தனது தோழிகளிடம் ஜூனியர் என்.டி.ஆர். போன்றவரைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தார். இதனால் அவரது கனவு தூள் தூளானது.

நீண்ட நேரம் கவலையில் மூழ்கிக்கிடந்த அவர் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணமான காதல் ஜோடியை அண்ணன்-தங்கை என்று பஞ்சாயத்து தீர்ப்பு; ஜாதி மாறி திருமணம் செய்ததால் தண்டனை


அரியானா மாநிலம் கேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்பர்வால். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

சதீஷ் பர்வால் பெர்வால் கோத்ரா என்ற ஜாதியைச் சேர்ந்தவர். கவிதா பானிவல் கோத்ரா என்ற ஜாதியைச் சேர்ந்தவர். இரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்வது இல்லை. ஏன் என்றால் இரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் சகோதரர் உறவு முறை உள்ளவர்களாக கருதுகின்றனர். எனவே தான் அவர்களுக்குள் திருமண உறவு இருப்பது இல்லை.

இதை மீறி சதீஷ், கவிதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதுபற்றி ஊர் பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையிலும் பஞ்சாயத்து விசாரணை நடத்தியது.

6 மணி நேரம் நீடித்த இந்த பஞ்சாயத்தில் தம்பதிகள் இருவரும் பிரிய வேண்டும், அவர்கள் இனி அண்ணன்-தங்கையாக கருதப்படுவார்கள் என தீர்ப்பு கூறினார்கள்.

கவிதா தனது குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு சென்று விட வேண்டும். குழந்தைக்கு சதீஷ் தந்தை ரூ. 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். 28 நாளில் தீர்ப்படி நடக்கா விட்டால் பஞ்சாயத்து கடும் தண்டனை வழங்கும் என்றும் தீர்ப்பில் கூறினார்கள்.