Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, August 11, 2010

ரஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்

ரஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும்    முயற்சியில் ஈடுபட்ட புதின்;    விமானியாக செயல்பட்டார்பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தால் ரஷிய காடுகளில் தீப்பிடித்து எரிகிறது. இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மாஸ்கோ நகரம் முழுவதும் பரவியுள்ளது. இது அங்கு வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.
 
காட்டுத் தீயை அணைக் கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை.
 
எனவே, விமானம் மூலம் வானில் பறந்த படியே தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
 
மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.
 
இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. இது ரஷிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானத்தில் விமானியாக இருந்துள்ளார். அது தான் தற்போது இவருக்கு கை கொடுத்துள்ளது.
 
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ரஷியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அப்பகுதிகளுக்கு சென்ற பிரதமர் புதின் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
 
வருகிற 2012-ம் ஆண்டு ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அவர் தயாராகிறார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Monday, August 9, 2010

அமெரிக்காவில் விநோதம் அப்பாவுக்கு ஓட்டு போடாதீர் மகள் உருக்கமான வேண்டுகோள்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஅமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு நடக்கும் தேர்தலில் ‘தந்தைக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று மகள் பிரசாரம் செய்வது பரப ரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் ஆக்லகாமா பகுதியின் 3 நகரங்களில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் பதவிக்கு (நம்மூர் நாட்டாமை போல) தேர்தல்  நடைபெறுகிறது. அதில்  ஜான் மன்தூத் நிற்கிறார். மும்முனை போட்டி நிலவும் தேர்தலில், ‘எனது அப்பாவுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என  ஜானின் மகள் ஜேன் பிரசாரம் அனல் பறக்கிறது.
நல்ல குடும்பஸ்தராக உள்ளவருக்கே நீதி சொல்லும் பதவியை அளிப்பது மக்களின் வழக்கம். எனவே, ‘எனக்கு 3 மகள்கள், நிறைய பேரன்,  பேத்திகள்’ என்று ஜான் விளம்பரம் செய்து வருகிறார். ஆனால், ‘இதுபோன்ற எந்த சொந்தத்துடனும் ஜானுக்கு தொடர்பே இல்லை. அவர் நம் பகத்தன்மை இல்லாதவர். அவரால் சரியாக நீதி வழங்க முடியாது’ என்று மகள் ஜேன், தனது கணவர் ஆண்ட்ரூவுடன் இணைந்து பத்திரிகை களில் விளம்பரம் தருகிறார். இதற்காக ஒரு இணைய தளத்தையே இந்த தம்பதி தொடங்கியுள்ளது. இதுபற்றி ஜான் மன்தூத் கூறுகையில்,  ‘‘1981ல் மனைவியை விவாகரத்து செய்தேன். அப்போது சிறுமியாக இருந்த ஜேன், அந்த பிரிவால் இப்போது என்னை வெறுக்கிறாள். அது வும் காரணமாக இருக்கலாம்’’ என்றார்.

Friday, August 6, 2010

14 மாதங்களாக `தூங்கும்' எம்.பி. தொகுதி நிதி: சோனியா, அத்வானி உள்பட 130 பேர் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை; அதிகமாக பயன்படுத்தியதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்

14 மாதங்களாக `தூங்கும்' எம்.பி. தொகுதி நிதி: சோனியா, அத்வானி உள்பட 130 பேர் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை; அதிகமாக பயன்படுத்தியதில் மு.க.அழகிரிக்கு முதலிடம்நாட்டில் ஏராளமான ஏழைகள் உணவு
கிடைக்காமல் பட்டினி கிடந்து உயிர் விடும் நிலையில், மத்திய அரசின் உணவு
கிடங்குகளில் ஏராளமான உணவு தானியங்கள் மழையிலும், வெயிலிலும் நனைந்து
வீணாவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. அதுபோல, எம்.பி.க்கள் தங்கள்
தொகுதியில் நலப்பணிகளுக்கும், மேம்பாட்டு பணிகளுக்கும் செலவிட ஒதுக்கப்பட்ட
தொகுதி மேம்பாட்டு நிதி, பயன்படுத்தப்படாமல் வீணாக கிடக்கிறது என்ற
அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பாராளுமன்ற இணைய தளத்தை ஆய்வு
செய்து ஓர் அரசு சார்பற்ற அமைப்பு இதை கண்டுபிடித்துள்ளது.
 
ஒவ்வொரு
எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை
ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சில எம்.பி.க்கள் போராடி வரும்
வேளையில், நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒரு பைசா கூட இந்த நிதியில்
பயன்படுத்தவில்லை.
 
கடந்த
ஆண்டு மே மாதம் மன்மோகன்சிங் அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்றது. கடந்த
ஜுன் மாதத்துடன், 14 மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி
நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை
சுட்டிக்காட்டி, அந்த அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
 
மத்திய
மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சி.பி.ஜோஷி, சச்சின் பைலட், பா.ஜனதா மூத்த
தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, ஷாநவாஸ் உசேன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர்
லாலுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், கர்நாடக முன்னாள்
முதல்-மந்திரிகள் குமாரசாமி, தரம்சிங் ஆகியோரும் இந்த பட்டியலில்
இடம்பெற்றுள்ளனர்.
 
ராஷ்ட்ரீய
லோக்தளம் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட 4 பேர், தலா ரூ.ஒரு லட்சமும்,
ஜெய்பால் ரெட்டி, சசிதரூர் உள்பட 8 பேர் தலா ரூ.2 லட்சமும், மத்திய மந்திரி
ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் தலா ரூ.5 லட்சமும்
செலவழித்துள்ளனர்.
 
அதே
சமயத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி
மு.க.அழகிரி, அதிகமான நிதியை தனது தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்து
முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.1 கோடியே 24 லட்சத்தை தனது தொகுதிக்காக
செலவிட்டுள்ளார்.
 

அவருக்கு
அடுத்தபடியாக, சபாநாயகர் மீரா குமார் ரூ.1 கோடியே 19 லட்சமும், சமாஜ்வாடி
கட்சி தலைவர் முலாயம்சிங் ரூ.1 கோடியே 9 லட்சமும், மத்திய சட்ட மந்திரி
வீரப்ப மொய்லி ரூ.1 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ரூ.97
லட்சமும் செலவழித்துள்ளனர்.

Wednesday, August 4, 2010

மேல்-சபை எம்.பி. தேர்தல் ஓட்டுப்போட பணம் கேட்டதில் தவறு இல்லை; ஜார்கண்ட் எம்.எல்.ஏ. சொல்கிறார்


ஜார்கண்ட் மாநிலத்தில் டெல்லி மேல்-சபைக்கு 2 எம்.பி.க்கள் தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்தது. மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு அவர்களை தேர்வு செய்தனர்.

எம்எல்.ஏ.க்கள் கட்சி கட்டளைப்படிதான் ஓட்டு போடுவார்களா? அல்லது பணம் வாங்கி கொண்டு வேறு வேட்பாளருக்கு ஒட்டு போடுவார்களா? என கண்டறிய சி.என்.என்.-ஐ.பி.என். டி.வி. நிறுவனம் அதிரடி வேட்டை ஒன்றில் ஈடுபட்டது.

நிருபர்களை புரோக்கர்கள் போல அனுப்பி பல எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வைத்தனர். தொழில் அதிபர் ஒருவருக்கு ஓட்டு போட்டால் பணம் தருவதாக அவர்கள் கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட எம்.எம்.ஏ.க்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என்று பேரம் பேசினார்கள்.

இந்த உரையாடல்கள் அனைத்தையும் ரகசிய வீடியோ மூலம் பதிவு செய்த அவர்கள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்தனர். அதில் காங்கிரஸ், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா, பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிக்கினார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பி உள்ளது. கட்சி மேலிடங்களும் நோட்டீசு அனுப்பி உள்ளன.

இதில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ, ராஜேஷ், ராஞ்சியில் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

மேல்-சபை எம்.பி. தேர்தலில் ஓட்டுப்போட பணம் கேட்டது உண்மைதான். இது எனது தனிப்பட்ட விஷயம். இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

நான் பணம் கேட்டேனே தவிர பணம் வாங்கவில்லை. எனவே இதில் குற்றம் நடக்கவில்லை. இதனால் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தனிப்பட்ட முறையில் நாங்கள் பலவிஷயங்களை பலரிடம் பேசலாம். அதைப்போலத்தான் இதிலும் பேசி இருக்கிறோம். யாரோ சதித்திட்டம் செய்து எங்களை சிக்க வைத்து இருக்கிறார்கள்.

நாங்கள் தவறு செய்து இருந்தால் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் பணம் எதுவும் வாங்கவில்லை. நாங்கள் பணம் வாங்கியதற்கான ஆதாரங்களும் இல்லை. எனவே எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Friday, February 5, 2010

டி.ராஜேந்தர் தலைமையில் லட்சிய தி.மு.க. பொதுக்குழு கூட்டம்; கட்சி கொடி மாற்றம்


லட்சிய தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அதன் பொதுச்செயலாளர் விஜயடி.ராஜேந்தர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கட்சி கொடியை கருப்பு நீலம் சிவப்பு என்ற மூவர்ண கொடியாக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முல்லை பெரியாறில் கேரள அரசு அணை கட்டுவதை கண்டித்தும் சமச்சீர் பஸ்கட்டணம் நிர்ணயிக்க கோரியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும் என்றும் 25 வயதில் 25 படங்களில் நடித்து சாதனை படைத்த சிம்புவை வாழ்த்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியது: மோட்டார் சைக்கிளில் சென்ற ஜி.கே.வாசன்


போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியது: மோட்டார் சைக்கிளில் சென்ற ஜி.கே.வாசன்
திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மகள் திருமணம் திருச்சி கலைஞர் அறிவலாயத்தில் இன்று காலை நடந்தது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பிறகு கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்ற ஜிகே.வாசன் அங்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

திருவானைக்காவல் காவேரி பாலம், கல்லணை சாலை வழியாக திருச்சி- சென்னை பைபாஸ் ரோட்டில் பால்பண்ணை ரவுண்டானா அருகில் ஜி.கே.வாசன் கார் வந்த போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தன.

இந்த போக்குவரத்து நெருக்கடியில் ஜி.கே.வாசன் காரும் சிக்கிக்கொண்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்த பிறகு காரில் சென்றால் விமானத்தை பிடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. உடனே மத்திய மந்திரி ஜி.கே. வாசன் காரில் இருந்து இறங்கினார்.திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜராஜசோழனின் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறினார். உடனே அந்த மோட்டார் சைக்கிள் திருச்சி விமான நிலையம் நோக்கி பறந்தது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் மோட்டார் சைக்கிளில் செல்வதை கட்சியினர் பார்த்ததும் அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களும் மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்தனர். போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பாக சென்றனர்.

டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று ஜி.கே.வாசனை குறித்த நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு தான் காங்கிரஸ் நிர்வாகிகள் நிம்மதி பெமூச்சு விட்டனர்.

Monday, February 1, 2010

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு: ஷாருக்கான் வீட்டுமுன்பு சிவசேனா ஆர்ப்பாட்டம்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை யாரும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான், “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அணியில் சேர்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. ஷாருக்கானுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் சிவசேனா கட்சி தொண்டர்கள் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஷாருக்கானுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஷாருக்கான் மும்பையில் இருந்து பாகிஸ்தான் செல்வதற்கான மாதிரி விமான டிக்கெட்டுகளை பலர் கையில் வைத்துக்கொண்டு, “ஷாருக்கானே பாகிஸ்தானுக்கு” போ” என்று குரல் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் குறித்து சிவசேனா கட்சியினர் கூறும்போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதென்றால் ஷாருக்கான் பாகிஸ்தானுக்கே போய்விடலாம். இந்தியாவில் அவருக்கு வேலை இல்லை. “கான்” என்ற பெயரில் அவர் நடித்து வெளிவர இருக்கும் படத்தை தடைசெய்ய வேண்டும்.

இது தேசப்பற்று தொடர்பான விஷயம். மும்பையில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஷாருக்கான் இதுவரை மராட்டியர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை ஆனால் பாகிஸ்தான்காரர்களை ஆதரித்து பேசுகிறார்” என்று குற்றம்சாட்டினார்கள்.

மும்பை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஷாருக்கானின் பேனர்களையும் சிவசேனா கட்சியினர் கிழித்து எறிந்தனர். தீ வைத்தும் கொளுத்தினார்கள். அமீர்கானையும் சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து ஷாருக்கான் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Friday, January 29, 2010

ஐந்து முறை ஜெயலலிதா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்


சென்னை வானகரத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகள் இல்லத் திருமண விழா சமீபத்தில் நடந்தது. ஜெயலலிதாவுக்கு, வழக்கம்போல் ஆடம்பர வரவேற்பு கொடுத்திருந்தனர். திருவள்ளூர் மாவட்ட செயலர் மாதவரம் மூர்த்தி, தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் முன் ஒரு முறை, செய்த பின் ஒரு முறை, பேச துவங்கும் முன், துவங்கிய பின், பேசி முடித்த பின் என, ஐந்து முறை ஜெயலலிதா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். "இதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்த ஜெயலலிதா, "ஏன் இத்தனை முறை காலில் விழறீங்க' என கேட்டார். ஆனால், மாதவரம் மூர்த்தி அதை பொருட்படுத்தவில்லை. "முன்பெல்லாம், ஒரு சிலர் மட்டுமே ஜெயலலிதா காலில் விழுவார்கள்; இப்ப, எல்லாருமே காலில் விழ ஆரம்பித்து விட்டனர். இதனால், கூடுதல் எண்ணிக்கையில் விழுந்து, "அம்மா' மனதில் இடம்பிடிக்கிறார் போலிருக்கு...' என, "கமென்ட்' அடித்தார் மூத்த நிருபர் ஒருவர்.

Thursday, January 28, 2010

செம்மொழி மாநாட்டு ரகசியம்!


பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் சமீபத்தில் நடந்தது. விழாவில், கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசும்போது, "செம்மொழி மாநாடு நடத்த, கோவையை ஏன் தேர்வு செய்தனர் தெரியுமா?' என்று, பார்வையாளர்களிடம் கேட்டார். அங்கிருந்த ஆசிரியர்கள், "விருந்தோம்பல், பண்பு, பாரம்பரியம், கலாசாரம்' என ஒவ்வொருவரும், தங்களுக்கு தெரிந்த பதில்களை கூறினர். இதைக் கேட்ட வாணவராயர், "இந்த பண்புகள் நம்மிடம் உள்ளது; ஆனால், தமிழ் உணர்வு குறைந்து கொண்டே வருகிறது. குறைவாக இருப்பதை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக தான், கோவையில் செம்மொழி மாநாடு நடக்கிறது' என்றார். "செம்மொழி மாநாட்டுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!' என வியந்தனர் பார்வையாளர்கள்.

ஆமா, இந்தியா பூரா பிள்ளைகள்!'



ஆந்திர கவர்னராக இருந்து, செக்ஸ் ஊழலில் சிக்கி பதவி பறிபோன பழம் பெரும் காங்., தலைவர் என்.டி.திவாரிக்கு, சொந்த ஊரான டேராடூனில் இப்போதும் தலைவலி தான். காலையில் எழுந்து, எங்காவது பொது இடங்களுக்கு சென்றால், மீடியாக்கள் துரத்துகின்றன. உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூன் நகரில் திவாரி, தன் வீட்டை விட்டு வெளியே வரவே முடிவதில்லை. சமீபத்தில் தன் ஆதரவாளர்களுடன் பேச வெளியே வந்தவரை, நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து, திவாரியால் தப்பவே முடியவில்லை; அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. எப்படி கூற முடியும்? எல்லா கேள்விகளுமே செக்ஸ் ஊழல் பற்றித்தானே! ஆனால், ஒரு உள்ளூர் நிருபர் கேட்ட கேள்வி, திவாரியின் பொறுமையை சிதைத்து விட்டது; "திவாரிஜி, ஏற்கனவே ஒருவர் தன்னை உங்கள் மகன் என்று கூறி வழக்கு போட்டார்; இப்போது, டில்லியைச் சேர்ந்த ஒரு வக்கீலும், தன்னை உங்கள் மகன் என்று சொல்கிறாரே' என்று கூற, கொதித்து விட்டார் திவாரி. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "ஆமா! இந்தியா பூரா எனக்கு பிள்ளைகள் இருக்காங்க...!'

Wednesday, January 20, 2010

சினிமாவில் இருந்து அமிதாப்பச்சன் ஓய்வு பெறுகிறார்: அரசியலில் குதிக்க திட்டம்?



இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் 1969-ல் திரையுலகில் அறிமுகமானார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான பா படத்தில் சிறுவனாக நடித்து திரும்பி பார்க்க வைத்தார்.இதற்காக பாராட்டுகளும், பரிசுகளும் குவிகின்றன. தற்போது நடித்த வரும் ராண் என்ற படம் ஜனவரி 29 அன்றும் “டீன் பட்டி” பிப்ரவரி 26-ந்தேதியும் ரிலீசாகின்றன. “ஷ¨பைட்” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மும்பையில் சமீபத்தில் நடந்த சினிமா பட விழாவில் அமிதாப்பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் பேசிய அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது. விரைவில் ஓய்வும் பெற போவதாக சூசக தகவல் வெளியிட்டார். எனது எல்லைக்கோடு முடிந்துவிட்டதாக உணர்கிறேன் என்றார்.

எனவே அமிதாப்பச்சன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக இந்தி பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.

ஏற்கனவே 1984-ல் ஒருமுறை சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் நுழைந்தார். அலகாபாத் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1988-ல் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

சினிமா தணிக்கை குழுவில் சிரஞ்சீவி மருமகனுக்கு பதவி; மகளை கடத்தி காதல் திருமணம் செய்தவர்


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கடந்த2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசிய திரு மணம் செய்து கொண்டார்.

ஸ்ரீரிஸ்பரத்வாஜ் என்பவருக்கும், ஸ்ரீஜாவுக்கும் 4 வருடமாக காதல் இருந்தது. ஒருநாள் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தை சிரஞ்சீவி ஏற்கவில்லை. இதனால் அவர் மூலம் தனது கணவருக்கு ஆபத்து வரலாம் என்றும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோர்ட்டுக்கு போனார். போலீசாரும் பாதுகாப்பு அளித்தனர்.

தற்போது ஸ்ரீஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சிரஞ்சீவி குடும்பத்தினரும் நெருங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்ரீரிஷ் பரத்வாஜுக்கு திரைப்பட தணிக்கை குழுவில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அக்குழுவில் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பை அரசு அதிகாரிகள் வெளியிட்டனர்.

தெலுங்கானாவுக்காக எப்போது தலையை வெட்டிக் கொள்ளப் போகிறீர்கள்?- மாணவர்கள் கேள்வியால் சந்திரசேகரராவ் அதிர்ச்சி


நல்ல கேள்வி,நச்சுனு இப்படி அரசியல் தலைவர்களிடம்,வேஷம் போடும் அரசியல் வாதியிடம் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும். நம் தமிழகத்தில் வசனம் பேசுவதில் வல்லவர்கள் பல தலைவர்கள்,சூடு சொரணை இல்லாதவர்கள்.புலி தலைவர் உயிரோடு இருக்கிறார்,வருவார் .... என்று கூறி காலத்தை சிலர் ஓட்டுகிறார்கள்.சிலர் ஜாதி போர்வை, இனப்போர்வை,மொழிப்போர்வை,இலவசப்போர்வை. எத்தனை அரசியல் கோமாளித்தனங்கள் நம் தமிழ் மண்ணில்.மக்கள் தான் விழித்துக் கொள்ளவேண்டும்.உண்மையில் தமிழன் முன்னேற்றத்துக்காக உள்ளப்பூர்வமாக எந்த தலைவரும் பணியாற்றவில்லை என்பது தான் சுடும் உண்மை.

தெலுங்கானா தனி மாநிலம் கோரி முன்னாள் மத்திய மந்திரி சந்திரசேகரராவ் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசு சார்பில் தனி மாநிலம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

அவரது உண்ணாவிரதத்தை காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், நாடகம் என்றும், உடலில் வைட்டமின் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினால் 30 ஆண்டு வரை உயிருடன் இருக்கலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தெலுங்கானா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகரராவ் கூறும்போது, தெலுங்கானா தனி மாநிலம் தராவிட்டால் நான் தலையை வெட்டி தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் நேற்று தெலுங்கானாவுக்காக தீக்குளித்து இறந்து போன மாணவர் வேணுகோபாலுக்கு அஞ்சலி செலுத்த ஐதராபாத் உஸ்மானி பல்கலைக்கழகத்திற்கு சந்திரசேகரராவ் சென்றார்.

அஞ்சலி செலுத்திய பிறகு அவர் மாணவர்களிடம், தெலுங்கானா எனது உயிர். அது கிடைக்காவிட்டால் உயிர் துறப்பேன். தெலுங்கானா மக்களுக்காக எந்த தியாகமும் செய்யத்தயார் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எழுந்த 2 மாணவர்கள், தெலுங்கானாவுக்காக தலையை வெட்டி தற்கொலை செய்வேன் என்று தொடர்ந்து கூறி வருகிறீர்கள். எப்போது உங்கள் தலையை வெட்டிக் கொள்ளப்போகிறீர்கள்? என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டனர்.

இதை கேட்டதும் சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சி அடைந்தார். மாணவர்கள் தன்னிடம் இப்படி ஒரு இக்கட்டான கேள்வியை கேட்டு விட்டார்களே என்று நொந்து போனார்.

பின்னர் சற்று சுதாரித்த படி, தற்போது எனக்கு தெலுங்கானா போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இது தெரிந்தும் மாணவர்கள் குழப்பமான கேள்விகளை கேட்டு போராட்டத்தை திசை திருப்பி விடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, எனக்கு அவசர வேலை இருக்கிறது என்று கூறியபடி வேகமாகச்சென்று காரில் ஏறி பறந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்திரசேகரராவ் மகன் தாரக்ராமாராவ் எம்.எல்.ஏ., மருமகன் ஹரீஷ்ராவ் எம்.எல்.ஏ. உள்பட 5 எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஆந்திர சபாநாயகர் கிரன்குமார் ரெட்டியை முற்றுகையிட்டனர். பின்னர் அவரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்ளும்படி கூறினர். அதன் பிறகு வெளியே வந்த அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Monday, November 23, 2009

இலங்கை கடற்படைக்கு பயந்து இருளில் மீன் பிடிக்கும் மீனவர்கள்


மண்டபம் : இலங்கை கடற்படைத் தாக்குதலுக்கு பயந்து, விசைப்படகில் இரவில் மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்கின்றனர்.
இலங்கை கடற்படை ராமேஸ்வரம், மண்டபம் விசைப்படகு மீனவர்களை தாக்குவது தொடர்ந்து நடக்கிறது. மத்திய,மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலையில், மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இரவில் மீன் பிடிக்கும்போது வெளிச்சத்திற்காக போகஸ் லைட், தீப்பந்தங் களை உபயோகிப்பர்.ஆனால், மண்டபம் மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படைக்கு பயந்து, நடுக்கடலில் இரவில் விசைப்படகில் எவ்வித வெளிச்சமும் இன்றி, இருளில் மீன் பிடி தொழில் செய் கின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "நம் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமைகளை நாம் இழந்து வருகிறோம். இலங்கை கடற்படை அத்து மீறி நுழைந்து எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.இலங்கை கடற்படை இரவில் எங்களை அடையாளம் கண்டு தாக்குவதால், வெளிச்சமின்றி இருளில் மீன் பிடித்து வருகிறோம். வெளிச்சம் இல்லாததால் மீன் பிடிக்க மிகுந்த சிரமமாக உள்ளது' என்றனர்.அரசு தலையிட்டு மீனவர்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவர வேண்டும்.

பாவம், இவர்களின் அழுகுரலுக்கு கை கொடுக்கும் முதல் அமைச்சர் வேண்டும், தமிழகத்துக்கு சொந்த மண்ணில் (நாட்டில்) அந்நிய அரசுக்கு அதுவும் ஒரு இந்தியாவை விட மிகவும் சிறய கப்பற்படையை கொண்ட ஒன்றை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை. அவர்கள் அதிகம் துப்பாக்கி சூடு நடத்துவது சர்வதேச கடல் எல்லையில் தான். இந்த பிரச்சனையை எதிர்த்து குரல் கொடுக்க எந்த அரசியல் அமைப்பும் முன் வருவதில்லை. நம் மக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிபடுதுவதிலை. இனிமேலாவது மீனவ மக்களின் வாழ்வாதார உரிமையை நிலை நாட்ட நம் அரசியல்வாதிகள் சுயநலமற்ற முறையில் தீர்வு காண வேண்டும்.

Friday, November 20, 2009

90 நிமிட வாழ்க்கை வரலாற்று படம்: ராஜசேகர ரெட்டி சினிமா படப்பிடிப்பு முடிந்தது; அடுத்த மாதம் வெளியாகிறது


ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் ஆந்திராவில் 500-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியில் உயிர் இழந்தனர்.

அவர் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களது குறைகளை உடனுக்குடன் தீர்த்ததால் ஆந்திர மக்களின் இதயத்தில் சிம்மாசனம் அமர்ந்தார். அவரது இழப்பை மாநில மக்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

இப்போதும் கூட அவரது சமாதி அமைந்துள்ள இருப்புலசாயா எஸ்டேட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அவரது வாழ்க்கை கதையை அம்மா ஆர்ட் புரடொக்சன் நிறுவனம் டாகுமென்டரி சினிமாவாக தயாரித்துள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் ஆதித்யா இயக்குகிறார்.

இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் ஜானி பாஷா, ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் சுபம், ராஜசேகர ரெட்டி உதவியாளர் கேரக்டரில் ராமுலுவும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி ரெங்காரெட்டி மாவட்டம் செவலா பகுதியில் தொடங்கியது. இதையடுத்து ஆந்திராவில் உள்ள 10 மாவட்டங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.

மொத்தம் 68 நாட்கள் நடந்த படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது.

முதலில் இப்படத்தை 60 நிமிடத்தில் முடிக்க டைரக்டர் ஆதித்யா திட்டமிட்டிருந்தார். ஆனால் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை சேர்க்க வேண்டி இருந்ததால் 90 நிமிடம் நேரம் ஓடும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி டைரக்டர் ஆதித்யா கூறும்போது, ராஜசேக ரெட்டி டாகுமென்டரி சினிமா படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படப்பிடிப்புக்கு பிறகு நடைபெறும் வேலைகளை தற்போது தொடங்கி உள்ளோம். இது முடிய இன்னும் 20 நாட்கள் ஆகும். எனவே படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Thursday, November 12, 2009

600 வாகனங்கள் வாங்கினார் மதுகோடா


ராஞ்சி : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆதரவாளர்களுக்கு பரிசாக வழங்க 600க்கும் மேற்பட்ட வாகனங்களை ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுகோடா ரூ.4,000 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்திருப்பதும் அவரும் அவரது நண்பர்களும் ரூ.2,000 கோடிக்கு ஹவாலா மோசடியில் ஈடுபட்டதும் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் நடத்திய சோத னையில் கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ராஞ்சியில் தனது வீட்டில் தங்கியுள்ள மதுகோடாவிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தினர். கடந்த மக்களவை தேர்தலில் ஜார்கண்ட்டில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட மதுகோடா வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தனது ஆதரவாளர்களுக்கு லஞ்சமாக கொடுக்க 600 மோட்டார் பைக்குகள் மற்றும் ஸ்கார்பியோ, பொலிரோ ரகங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கார்களை மதுகோடா வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் ஒரு கடையில் இருந்து 200 பைக்குகள் வாங்கப்பட்டுள்ளன. எச்சரிக்கை: இதனிடையே, ராஞ்சியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகாத மதுகோடாவின் நண்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமானவரித் துறை எச்சரித்துள்ளது.

Wednesday, November 11, 2009

எனது ஆட்கள் கையில் சிக்கி இருந்தால் ஆஸ்மியை வறுவல் போட்டுஇருப்பார்கள்


மும்பை: இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த ஆஸ்மி எனது ஆட்கள் கையில் கிடைத்திருந்தால் வறுவல் அல்லது தந்தூரி போட்டு இருப்பார்கள் என்று பால் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார். மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் அபு அசிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேயின் கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான ÔசமனாÕவில் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பது வருமாறு: மகாராஷ்டிராவில் இருந்து பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் ஆஸ்மி, மராத்தியில் பதவி ஏற்பு உறுதி மொழி எடுக்காமல் இந்தியில் எடுத்து இருக்கிறார். அவரை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) கட்சியினர் தாக்கியிருக்கிறார்கள்.பேரவையில் நடந்த வன்முறைக்கு ஆஸ்மியே பொறுப்பு. மராத்தியின் கவுரவத்தில் பிறந்தது சேனா. கடந்த காலங்களில் இந்தி, ஆங்கிலத்துக்கு எதிராக சிவசேனை உறுப்பினர்கள் பேரவையில் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக மூத்த உறுப்பினர் திவாகர் ரட்டே போன்றவர்கள் ஆணித்தரமாக பேசியிருக்கிறார்கள். ஆஸ்மி போன்றவர்கள் அவர் கையில் கிடைத்திருந்தால் வறுவல் அல்லது தந்தூரி போட்டிருப்பார். மராத்தியின் பெருமையை காப்பதே சிவசேனையின் கொள்கை. இதில் எந்த மாற்றமும் இருக்காது. எனினும் சட்டப் பேரவைக்குள் எம்.என்.எஸ். உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டதை யாராலும் ஆதரிக்க முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளன. இந்த அவைகளின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அவற்றை மல்யுத்த களமாகவோ, காய்கறி சந்தையாகவோ மாற்றிவிடக் கூடாது. இவ்வாறு பால் தாக்கரே எழுதியுள்ளார்.

Tuesday, November 10, 2009

மூன்று ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள் பயண செலவு 300 கோடி


புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் காபினட் அந்தஸ்தில் உள்ள மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணச் செலவு ரூ.300 கோடியை தாண்டி இருக்கிறது. இதில் உள்நாட்டு பயணத்துக்காக செலவிடப்பட்டு இருப்பது ரூ.163 கோடி. இந்த செலவினங்கள் அனைத்தும் 2006ல் இருந்து கணக்கிடப்பட்டவை. ஐ.மு. கூட்டணியின் முதல் ஆட்சியில் காபினட் அமைச்சர்கள் 30 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளில் குறைவாக இருந்த பயணச் செலவு 2008&09ம் ஆண்டில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் மத்திய இணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.21 கோடி என்றும், உள்நாட்டுப் பயணச் செலவு ரூ. 27 கோடி என்றும் தெரிய வந்துள்ளது. தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின்கீழ் எஸ்.சி. அகர்வால் என்பவர் கேட்ட தகவலுக்கு மத்திய அமைச்சரவை தலைமையகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.

பதவியில் இருந்த போது குறைகள் தெரியவில்லை திருநாவுக்கரசருக்கு பா.ஜனதா கண்டனம்; வாழ்வு தந்த கட்சியை வசைபாடுவதா?


வாழ்வு தந்த கட்சியை திருநாவுக்கரசர் வசைபாட கூடாது என்று பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பா.ஜனதா துணை தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

திருநாவுக்கரசர் கடந்த 7 ஆண்டுகளாக எங்களுடன் பணியாற்றினார். பா.ஜனதாவில் இருந்த போது அவருக்கு அதிகபட்சமான மரியாதை கொடுக்கப்பட்டது. கட்சியில் சேர்ந்ததும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் எங்களை போன்றவர்களுக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே கப்பல்துறை மந்திரியாக்கப்பட்டார். 2004 தேர்தலில் சில சூழ்நிலைகள் காரணமாக அவர் போட்டியிட முடியவில்லை. அப்போது அவரையும் ஒரு பெரிய தலைவராக மதித்து அவரது மனம் புண்பட கூடாது என்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி. ஆக்கப்பட்டார். 5 1/2 ஆண்டுகள் அந்த பதவியை அனுபவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. கடந்த தேர்தலில் ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டு காங்கிரஸ் பதவிக்கு வரும் சூழ்நிலை உருவானதும் பா.ஜனதாவில் இல்லை என்பது போல் தன்னை காட்டிக்கொண்டார்.

1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. அவரது வெற்றிக்காக உழைத்த தொண்டர்களை சந்திக்கவில்லை.

இப்போது இங்கு இருப்பதை விட காங்கிரசில் இருந்தால் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சென்றிருக்கிறார். பதவி சுகங்களை அனுபவித்து விட்டு தோல்விக்காக கட்சி மாறுவது சரியான அணுகுமுறையா? வாழ்வு தந்த கட்சியை வசை பாடலாமா?

பா.ஜனதா மதவாத கட்சி. ஆர்.எஸ்.எஸ். தலையீடு உள்ளது. சிறுபான்மையினருக்கு உதவமுடியவில்லை என்று வார்த்தைகளை அள்ளி தெளித்து இருக்கிறார். வார்த்தைகளை வெளியிடுவதற்கு முன்பு தன் மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்.

போலி மதசார்பின்மை பேசி ஓட்டுக்காக சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் கட்சிகள் அன்று முதல் இன்று வரை பா.ஜனதா மீது இதே பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இதை எல்லோரும் அறிவார்கள்.

பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது கட்சிக்கு வந்தார். அப்போது மதவாத கட்சி என்று அவருக்கு தெரிய வில்லையா?

ஆர்.எஸ்.எஸ்.சின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து பெருமை தேடி கொண்டார். அதே போல் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் நிகழ்ச்சிகளிலும் கலந்து பெருமை பெற்றார்.

குஜராத் கலவரத்தை கண்டித்ததாக கூறும் திருநாவுக்கரசர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்றது ஏன்? நரேந்திர மோடி சுற்றுப்பயணம் வரும் போதெல்லாம் அவருடன் சுற்றி கைகுலுக்கி கொண்டது ஏன்?

அவர் சென்று விட்டதால் பா.ஜனதாவே இல்லாதது போலவும், அன்னிய கட்சியாக மக்கள் பார்ப்பதாகவும் கூறும் திருநாவுக்கரசர் 7 ஆண்டுகளாக அன்னியராக இருந்தாரா?

கறவை வற்றிய மாட்டை கைகழுவும் விவசாயிபோல் திருநாவுக்கரசரும் கறவை வற்றிய மாடாக பா.ஜனதாவை நினைத்து இருக்கலாம். மீண்டும் பா.ஜனதா எழும். அப்போது மீண்டும் வரலாமா என்று யோசிப்பார்.

பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த பல கட்சி தலைவர்களும் அணி மாறியதும் பாடிய அதே பல்லவியைத்தான் திருநாவுக்கரசரும் பாடியிருக்கிறார்.

7 ஆண்டுகள் பழகிய நட்பின் காரணமாக சொல்கிறோம். கட்சியை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது.

திருநாவுக்கரசர் மனப்பூர்வமாக இந்த கருத்துக்களை வெளியிட்டாரா? என்பதை நம்ப முடியவில்லை.

இது காங்கிரசின் அறிக்கையாக இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கிறோம். காங்கிரசில் இணைந்துள்ள அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் அமைய எனது நல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, November 3, 2009

ஆப்பிரிக்காவில் நிலக்கரி சுரங்கம், தாய்லாந்தில் ஓட்டல்: வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவித்த மதுகோடா


ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி முதுகோடா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. அன்னிய செலாவணி மோசடி செய்தும் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்தார்.இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்க பிரிவினர் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்வேறு இடங்களில் சோதனையும் நடந்து வருகிறது.

மதுகோடாவுக்கு டெல்லி, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர் சாய்பசா, பாட்னா, ராஞ்சி, லக்னோ, காசியாபாத் ஆகிய நகரங்களில் 70 இடங்களில் சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து உள்ளது. நேற்று ஜாம்ஷெட்பூர், ராஞ்சியில் 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

மதுகோடா இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதை அமலாக்க பிரிவு கண்டுபிடித்தது.

ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. தாய்லாந்தில் ஓட்டல் ஒன்று இருக்கிறது. இவை தவிர ஐக்கிய அரபுநாடு, சிங்கப்பூர், துபாய், மலேசியா, இந்தோனேசியா ஆகிய இடங்களிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றை ஹவாலா பணம் மோசடி மூலமே வாங்கி இருக்கிறார்.

வெளிநாட்டில் மட்டும் ரூ.2500 கோடிக்கு சொத்து வாங்கி உள்ளார். மொத்தத்தில் ரூ.4 ஆயிரம் கோடி சொத்துக்களை குவித்து உள்ளார்.

இது ஜார்க்கண்ட் மாநில பட்ஜெட்டில் 5-ல் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் மதுகோடா இரும்பு வெல்டிங் தொழில் செய்யும் சாதாரண தொழிலாளியாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.

2005-ல் தனது 35-வது வயதில் அவர் முதல்- மந்திரி ஆனார். அப்போது தனக்கு ரூ.12 லட்சம் சொத்து இருப்பதாக தேர்தல் கமிஷனிடம் கணக்கு காட்டி இருந்தார். அதன் பிறகுதான் இவ்வளவு சொத்துக்களை குவித்து இருக்கிறார்.

பல சொத்துக்களை அவருக்கு நெருக்கமான 6 பேர் பெயரில் வாங்கி உள்ளார். அதில் வினோத் சின்கா, சஞ்சய் சவுத்திரி ஆகியோர் பெயரில்தான் அதிக சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் இப்போது அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மதுகோடாவிடம் வருமான வரி, அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஆனால் மதுகோடா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.