
Wednesday, November 11, 2009
பொருளாதார மந்த நிலை மாறியது வேலைக்கு ஆள் எடுப்பதில் ஐ.டி., கார் நிறுவனங்கள் தீவிரம்

உலகில் இந்தியா முதலிடம் ஷாப்பிங் திருட்டால்ரூ.12,500 கோடி நஷ்டம்

புதுடெல்லி, : கஸ்டமர்கள், ஊழியர்கள், சப்ளை மோசடி ஆகியவற்றால் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,500 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. Ôஷாப் லிப்டிங்Õ எனப்படும் இந்த திருட்டில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் சிறிய கடைகள், ஷாப்பிங் மால்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சரக்குகள் திருடு போவது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது. Ôகுளோபல் ரீடைல் தெப்ட் பாரோமீட்டர்Õ என்ற அந்த ஆய்வின் இந்த ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்காக இந்தியா உட்பட 41 நாடுகளில் 1,069 பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. அதன்படி கடைகளில் நைசாக பொருள் திருடுவதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. சில்லறை திருட்டு மூலம் நம்நாட்டில் 3.2 சதவீத பொருட்கள் குறைகிறது. ஷாப்பிங் செய்ய வரும் கஸ்டமர், கடை ஊழியர்கள், சப்ளை நிறுவன ஆவண மோசடி ஆகிய வழிகளில் இந்த திருட்டு நடக்கிறது. இதனால், கடைகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.12,500 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. Ôஷாப் லிப்டிங்Õ திருட்டில் எலக்டிரானிக் பொருட்கள், அழகு சாதனங்கள், மது, ஆடைகள், நகைகள் ஆகியவை மற்ற பொருட்களைவிட அதிகளவில் திருடப்படுகின்றன. மும்பையைச் சேர்ந்த ஜுவல்லரி நிறுவன தலைமை அதிகாரி கூறுகையில், ÔÔநகைக் கடைகளில் வாடிக்கையாளராக நடித்து திருடுவது அதிகம் நடக்கிறது. இவர்கள் குழுக்களாக செயல்படுவதால் எளிதில் சிக்குவதில்லைÕÕ என்றார். நகை, மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளின் பாதுகாப்பு செலவாக மட்டும் ஆண்டுக்கு ரூ.760 கோடி செலவிடப்படுகிறது.
Tuesday, November 3, 2009
பன்னாட்டு நிதியத்திடம் இருந்து ரிசர்வ் பாங்கி வாங்கும் 200 டன் தங்கம்

இதில் 200 டன் தங்கத்தை இந்திய ரிசர்வ் பாங்கி வாங்க முன் வந்தது. இதற்கு பன்னாட்டு நிதியம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தங்கம் தேவை அதிகரித்து இருப்பதால் இந்த தங்கத்தை வாங்கி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட ரிசர்வ் பாங்கி முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாதம் 19-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை எவ்வளவு தங்கம் வந்துள்ளது என்பதை கணக்கிட்டு அதன் மூலம் இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் தேவை என்பதை கணக்கிட்டு உள்ளனர்.
அதன்படி 200 டன் தங்கம் வாங்க ரிசர்வ் பாங்கி முடிவு செய்தது. இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 33 ஆயிரம் கோடி.
இந்தியா தங்கம் வாங்குவதை வரவேற்பதாக பன்னாட்டு நிதியம் மேலாண்மை இயக்குனர் ஸ்டாரஸ்கான் கூறியுள்ளார்.
Thursday, October 29, 2009
சன் டிவி லாபம் 20% அதிகரிப்பு

Sunday, October 19, 2008
ஒரு வாரத்தில் ஒரு லட்சம் கோடி இழப்பு
மும்பை: மிகப்பெரிய சரிவை கண்டு இருக்கும் இந்திய பங்குச்சந்தையில், முதலீட் டாளர்கள், புரோக்கர்கள், கதிகலங்கி போய் இருக்கின்றனர். சந்தையில் கோலோச்சிய முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை சிறப்பாக இருந்த பங்குச்சந்தைக்கு இந்தாண்டு போதாத காலம். ஜனவரியில் ஆரம்பித்த சரிவு, கடந்த வெள்ளிக்கிழமை பெரும்சரிவுடன் முடிந்துவிட்டது. 'சென்செக்ஸ்' ஐந்து இலக்கத்தில் இருந்து நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது. 'சென்செக்ஸ்' பத்தாயிரத்தில் இருந்து 21 ஆயிரம் புள்ளிகளை எட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளை எட்டியது. ஏறுவதற்கு மட்டும் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட சந்தை, 21 ஆயிரத்தில் இருந்து 9,000 புள்ளிகள் சரிவதற்கு மட்டும் பத்து மாதங்கள் எடுத்துக் கொண்டது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால், சந்தையில் கோலோச்சிய முன்னணி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு நாளுக்குநாள் சரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த 10ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 734 கோடியாக இருந்தது. இது 17ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் ரூ.10 லட்சத்து 44 ஆயிரத்து 245 கோடியாக குறைந்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் ரூ.94ஆயிரம் கோடியை இழந்துள்ளது. இந்த சரிவிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், மொத்த சந்தை மூலதனம் ரூ.4,000 கோடி அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வங்கித்துறை பங்குகள் ஏற்றம், இறக்கம் கண்டு இறுதியில் சரிவில் முடிந்தது. இருப்பினும், ஸ்டேட் பாங்க் ஏற்றம் கண்டு இருப்பதற்கு காரணம் வலுவான அடிப்படையை கொண்டு இருப்பதே காரணம். ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது, அதன் மொத்த பங்குகளை, அன்றைய அதன் விலையை கொண்டு பெருக்கினால் கிடைப்பது.
* சந்தையின் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் சந்தை மூலதனம் கடந்த வாரத்தில் மட்டும் 34 ஆயிரத்து 898 கோடி ரூபாய் சரிந்துள்ளது.
* பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை மூலதனம் 29ஆயிரத்து 933 கோடி ரூபாய் இழந்துள்ளது. கடந்த 17ம் தேதியன்று இதன் மொத்த சந்தை மூலதனம் 1,65,954 கோடியாக ரூபாயாக இருந்தது.
*தனியார் வங்கிகளில் முன்னணி வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சந்தை மூலதனம் முந்தையை வாரத்தை ஒப்பிடுகையில் 3,000 கோடி அதிகரித்து, 43 ஆயிரத்து 606 கோடியாகியுள்ளது.
தீபாவளி சுவீட் கிடையாது: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் 'பெப்பே'

பெங்களூரு: சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பல தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கும், சாக்லேட் உள் ளிட்ட இனிப்பு பண்டங் களை இந்த ஆண்டு வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, அந்த நாட்டை மட்டுமல்லாமல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல நிறுவனங்கள் குறிப்பாக விமான மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை ஒத்தி வைத்துள்ளன. பணவீக்க உயர்வு காரணமாக திணறி வரும் பல நிறுவனங்கள், சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பரிசாக இனிப்பு பண்டங்களை பரிசாக வழங்குவது வழக்கம். இந்தாண்டு அதை வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. பல நிறுவனங்கள் குறைந்த அளவு இனிப்பு பண்டங்களை கடைகளில் ஆர்டர் செய்துள்ளன. இதனால், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்லாமல், சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரியங்கா சிங்கானியா கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின்போதும், நிறுவனங்களால் மட்டும் 50 முதல் 80 சதவீதம் வரை சாக்லேட் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவில் ஆர்டர்கள் வரவில்லை. கடந்தாண்டில் அதிகமான சுவீட் வாங்கிய நிறுவனங்கள், இந்தாண்டு இதுவரை ஆர்டர் தரவில்லை' என்றார். பெங்களூரில் சாக்லேட் ஜங்ஷன் என்ற கடையை நடத்தும் அனுபாமா கூறுகையில், 'ஒரு நிறுவனம் எங்கள் கடையில் தீபாவளிக்காக 80 ஆயிரம் சுவீட் பாக்ஸ்கள் ஆர்டர் செய்திருந்தது. சில நாட்களில் அந்த ஆர்டரை 40 ஆயிரமாக குறைத்து விட்டது' என்றார்.
Friday, October 17, 2008
பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றது

Sunday, October 12, 2008
அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏன்? நடந்தது என்ன
பங்குச்சந்தை குறியீட்டெண் 10 ஆயிரத்தை தாண்டியபின் மடமட வென அதிகரித்து, 15 ஆயிரத்தை தாண்டியதும், அதில் முதலீடு செய்யாமல், வங்கி நிரந்தர வைப்பில் பணத்தைச் சேமித்தவர்கள் அப்பாவிகளாகக் கூட காணப்பட்டனர்.இன்று பங்குகள், பங்குச்சந்தையின் செயல்கள், முதலீட்டில் அதன் தாக்கம் ஆகியவை பற்றி அறிந்தவர்களை விட அறியாத பலரும் ஆர்வத்தில் முதலீடு செய்துவிட்டு, தற்போதைய சந்தையின் அதலபாதாள வீழ்ச்சியில் குன்றிப் போய் இருக்கின்றனர்.
இந்நிலைக்கு அமெரிக்காவின் போக்கே காரணம். வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற கருத்தை நோக்கி செயல்படும் பொருளாதாரத்தை அங்கே ஊக்குவித்தனர். தவிரவும், எல்லாவற்றையும் நுகரும் கலாசாரம் என்ற நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன் வாங்கிய வீடுகள் தற்போது மும்மடங்கு வரை விலை அதிகரித்தது.இந்த வீட்டு வசதிக்காக வங்கிகள் கடன் தரும் நடைமுறையில் அமெரிக்கா பின்பற்றிய அணுகுமுறை பெரிய ஆபத்தை உலகம் முழுவதும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.
கடன் பெற்றவர்கள் : ஏதோ லேமென் வங்கி வீழ்ச்சி என்று ஆரம்பித்த கதை, 70 ஆயிரம் கோடி டாலரை அரசு தரமுன்வந்தும் அமெரிக்க நிலைமையை மோசமாக்கியிருக்கிறது.உதாரணமாகச் சொன்னால், மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் டாலரில் ஒரு வீடு (அன்று அதன் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம்) வாங்கினால், அமெரிக்காவில் அதற்குப் பெரிய ஆதாரம் ஒன்றும் கேட்காமல் கடன் தந்துவிடும் வங்கி.முகவரிக்கான அத்தாட்சி கூட இல்லாமல் கடன் பெற்றவர்கள் உண்டு. கிரெடிட் கார்டு கலாசார வேகம் அப்படி. வீடு வாங்கினால் அது அதிகவிலைக்கு எதிர்காலத்தில் விற்கப்படும் என்ற கருத்தில், அமெரிக்காவில் வீடு வாங்கும் மோகம் அதிகரித்தது. அந்தக் கடன்பத்திரங்களை அப்படியே அமெரிக்க வங்கிகள்,
"அதிக லாபம் தரும் கடன் உதவி வசதிகள்' என்று கவர்ச்சிகரமாகப் பெயரிட்டு மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றன.இதில் திவாலான அமெரிக்க நிதிநிறுவனம் லேமென் வாங்கிக்குவித்த கடன்பத்திரங்கள் ஏராளம். இந்தக் கடன் பத்திரங்கள் பல்வேறு வங்கிகளுக்குக் கைமாறி, அதற்கு கமிஷன் பெற்றவர்கள் ஏராளம். நீர்க்குமிழி போல இந்த வர்த்தகம் உலகெங்கும் வங்கிகளிடம் பரவியது.ஆனால், கடந்த ஆண்டு வீட்டு விலை இறங்கத் தொடங்கியது. தவணை கட்ட வேண்டியவர்கள் படுத்து விட்டனர்.
நிறைய வீடுகளை விற்க முன்வந்தனர், கிடைத்த விலைக்கு விற்று லாபம் பார்க்க முயன்றனர். ஆனால், வாங்குவதில் அதிக வேகம் இல்லை.அதேசமயம், அதிகலாபத்தில் இந்தப் பத்திரங்களை விலைக்கு வாங்குவதை லேமென் முதலிய நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டன. அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த வங்கிகள் நிதிப்புழக்கம் இன்றி முடங்கின. பத்திரங்களைப் பெற்று கணிசமான வட்டிக்குப் பணம் தரும் வங்கிகளின் சாமர்த்தியம் முடிவுக்கு வந்தது. தங்களிடம் உள்ள ஆஸ்திமதிப்பு குறைந்ததும் ஒரு வங்கி மற்றொரு வங்கியிடம் தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு வழக்குகள் தொடர்ந்தன.
அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் தடுமாறின. இது ஆசியாவுக்கும் பரவி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த "சப்பிரைம்' பிரச்னை இன்று உலகையே நிம்மதியில்லாமால் ஆக்கி விட்டது.முடிவில் 70 ஆயிரம் கோடி டாலரை அமெரிக்க அரசு தர வேண்டியதாயிற்று; உழைத்துச் சேமித்தவர்கள் பணத்தை அழித்து விட்டது. பொதுவாக ஒருவர் கடன் பெற்று வீடு வாங்கினால் அது சொத்து அல்ல; பொருளாதார சுமை. அதே போல கிரெடிட் கார்டில் மளிகைச் சமான்கள் வாங்கினால் அது சுமை; சுகம் அல்ல.
ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசை : பணக்காரர்கள் தங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்க மாட்டார் கள், அதைப் பெருக்கு வழிகாண் பார்கள். மாறாக, ஸ்டாக் புரோக்கரிடம் போனில் பேசி பங்குகள் வாங்கினால் அது பணமரமாகக் காய்க்கும் என்றால் அவ்வளவு தான்! அந்தப்பாடத்தை இப்போது அமெரிக்க அனுபவத்துடன் பலரும் கற்று வருகின்றனர். நல்ல வேளையாக, "சப்பிரைம்' நடைமுறையை இந்தியாவில் பின்பற்றவில்லை.இன்று பங்குச்சந்தை அதலபாதளத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசையால் ஏற்பட்ட பீதி தீபாவளி கொண்டாடுவேன்' : மும்பை ஸ்டாக் புரோக்கர் ஜுன்ஜுன்வாலா வெளிப்படையாக, "பங்குச்சந்தையில் 20 ஆயிரம் வரை புள்ளிகள் உயரும் என்று நான் கணிக்கவில்லை, ஆபத்தில்லா முதலீடு செய்தவர்கள் நன்றாக வரும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள், "மேலும் தீபாவளிக்கும், பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல, பேச வேண்டாம். நான் நன்றாகவே வழக்கப்படி தீபாவளி கொண்டாடுவேன்' என்கிறார். அப்படி எத்தனை ஸ்டாக் புரோக்கர்கள் இனிக் கூறப்போகிறார்கள் என்பது கேள்வி தான்.
நெம்புகோல் தத்துவம்: 150 சதவீத லாபம் எப்படி வரும்?: அமெரிக்காவில், 2003ம் ஆண்டு வட்டிவீதம் 1 சதவீதம் என்று ஏற்பட்டதிலிருந்து வீட்டுக்கடன் என்பதில் வந்த பல்வேறு நடைமுறைகள் இன்று அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நிறுவனங்களைக் கலக்குகின்றன.ஏதோ ஆதாயம் வரும் என்று எண்ணி, கையில் இருக்கும் மூலதனத்தை இழப்பது சரியல்ல; ஆனால், கையில் மூலதனமே இல்லாமல் நடக்கும் பரிவர்த்தனைகள், அதற்கான நடைமுறைகள் இப்போது உலகம் முழுவதும் எல்லாரையும் அச்சப்பட வைத்து விட்டது. ஒரு சிறிய உந்து சக்தியை வைத்து பெரிய பாறாங்கல்லைக் கூடப் புரட்டலாம் என்பது நெம்புகோல் தத்துவம், இது இயற்பியலில் உள்ளது
ஒருவர் 1,000 ரூபாயை சேமிப்பில் போட்டு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி என்றால், அது ஆண்டு முடிவில் 1,150 ரூபாயாக உயரும். ஆனால், கையில் 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு மேலும், 9,000 ரூபாய் கடன் வாங்கி பின் மொத்தமாக, 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் எப்படி? அந்த முதலீட்டிற்கு ஆண்டு இறுதியில் வட்டி 15 சதவீதக் கணக்கில் பார்த்தால், அசலுடன் சேர்த்து 11 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.பணம் வாங்கியது உறவினரிடம் என்றால், வாங்கிய அசலை மட்டும் திரும்பக் கொடுத்துவிட்டால், எந்தவித முயற்சியும் இன்றி 2,500 ரூபாய் கிடைக்கிறது. அதில் முதலில் கையில் வைத்திருந்த அசல் 1,000 ரூபாய் மட்டுமே என்பதை நினைத்தால் ஆச்சரியம் அல்லவா? அப்போது 1,000 ரூபாய்க்குக் கிடைத்தது 1,500 ரூபாயா? நினைத்தால் மலைப்பாக இருக்கும். இது, 150 சதவீத லாபம்.இப்படி லாபம் கிடைக்காமல் 15 சதவீத வட்டியும் காற்றில் பறந்து விடுகிறது என்றால், அந்த நிலையில் கிடைப்பது 8,500 ரூபாய் மட்டுமே.
உறவினரிடம் வாங்கிய 9,000 ரூபாயிலும் 500 இழப்பாகி விடுகிறது. கையில் வைத்திருந்த 1,000 ரூபாய் கிடைக்காமல் போய்விட்டது. இப்படித்தான், "சப்பிரைம்' கடன் பத்திரங்கள் லாபம் கிடைக்கும் என்று பல்வேறு முதலீடுகளாக மாறி இன்று, "வால்ஸ்டிரீட் மட்டும் அல்ல, உலகையே கலக்குகிறது. இதில் ஒரு நல்ல அம்சம். இந்தியாவில் உள்ள வங்கி ஏதும் இந்த நிதிச்சுழலில் சிக்காததால், அதில் சேமிக்கப்பட்ட டிபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை
Thursday, October 9, 2008
டிஜிட்டல் போர்டில் எழுத முடியாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் அதிகரித்து விட்டது

நியுயார்க் : இந்தியா தான் எக்கசக்க கடனில் இருக்கிறது என்று சொன்னதெல்லாம் அந்த காலம். இப்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவுக்கே எக்கச்சக்கமான கடன் இருக்கிறது. அமெரிக்கா எவ்வளவு கடனில் இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, நியுயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் ஒரு எலக்ட்ரானிக் போர்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு நேஷனல் டெபிட் கிளாக் என்று பெயர். அந்த போர்டில் 9.99 லட்சம் கோடி ( அதாவது 10 டிரில்லியனுக்கும் குறைவாக ) ( ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ) வரை மட்டுமே குறிக்க முடியும். அதாவது மொத்தம் 13 டிஜிட் மட்டுமே குறிக்க முடியும். கடன் 10 டிரில்லியன் டாலராகி விட்டால் அதில் குறிக்க முடியாது. ஏனென்றால் அதற்கு மேல் கடன் உயராது என்று அப்போது எண்ணியதால் அவ்வாறு வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கடந்த மாதத்தில் ( செப்டம்பர் ) அமெரிக்காவின் கடன் 10 டிரில்லியனையும் தாண்டிவிட்டது. எனவே அந்த கடன் கிளாக் கில் அதை குறிக்க முடியவில்லை. கிளாக்கில் அடங்க முடியாத அளவுக்கு அங்கு கடன் அதிகமாகி விட்டது. எனவே அந்த போர்டை ( நேஷனல் டெபிட் கிளாக் ) வைத்தவர்கள் அதில் இன்னும் டிஜிட்டை கூட்ட இருக்கிறார்கள். இந்த நேஷனல் டெபிட் கிளாக் 1989 ல் முதன் முதலில் அங்கு வைக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் கடன் 2.7 டிரில்லியன் டாலராக இருந்தது. 10 டிரில்லியனுக்கும் குறைவாக மட்டுமே குறிக்க கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த கிளாக் இனிமேல் ஒரு குவாடிரில்லியன் ( அதாவது 10 கோடி, கோடி ) வரை குறிக்ககூடியதாக மாற்றப்படுகிறது.
இந்த கடன் கிளாக்தை உருவாக்கிய, காலஞ்சென்ற சேமோர் டர்ஸ்ட் என்பவரின் மகன் டக்ளஸ் டர்ஸ்ட் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இப்போது தற்காலிகமாக அதில் சில டிஜிட்கள் கூட்டப்பட்டுள்ளது. அதில் இப்போதைய அமெரிக்க கடன் 10.15 டிரில்லியன் டாலர் என்று காண்பிக்கிறது. ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் 86,017 டாலர் கடன்பட்டிருப்பதாக அந்த போட்டு சொல்கிறது. சமீபத்தில் அதிபர் புஷ் கொண்டு வந்த 700 பில்லியன் டாலர் கடனுதவி திட்டத்தால், அமெரிக்காவின் கடன் 11 டிரில்லியன் டாலரை நெருங்கி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Tuesday, October 7, 2008
'ஷேர்' விலை வீழ்ச்சியால் குடும்பத்தையே கொன்ற அமெரிக்க இந்தியர்
கடும் நஷ்டம் : இவர் ஒரு காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து 5.40 கோடி ரூபாய் வரை சம்பாதித்தார். இதில், ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தன் பணத்தில் பெரும் பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். ஆனால், சமீபத்தில், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெருத்த வீழ்ச்சி காரணமாக, பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு கடும் நஷ்டம் அடைந்தார்.
மாமியாரை சுட்டுக் கொன்று : இதனால், விரக்தி அடைந்த அவர், தன் மனைவி சுபஸ்ரீ, மகன்கள் கிருஷ்ணா (19), கணேஷா (12), அர்ஜுனா மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண் டார். இந்த சம்பவம் அவர் வசித்த வீட்டிலேயே நடந் துள்ளது. கார்த்திக் ராஜாராம் கடந்த செப்டம்பர் 16ம் தேதி துப்பாக்கி வாங்கியுள்ளார். பின் தற்கொலைக் கான காரணத்தை கடிதமாக எழுதியுள்ளார்.மொத்தம் மூன்று கடிதங்கள் எழுதியுள்ளார்.
ஒன்று போலீசாருக்கு எழுதப்பட்டுள்ளது. அதில், தனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு தன் செயல்பாடுகளே காரணம் என, கூறியுள்ளார். மற்றொரு கடிதத்தை தன் குடும்ப நண்பர்களுக்கு எழுதியுள்ளார். மூன்றாவது கடிதம் அவரின் உயில் மற்றும் மரண சாசனம் போன்று உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு தன் குடும் பத்தினரை சுட்டுக் கொன்ற அவர், பின் தனக்குத்தானே சுட்டு இறந்துள்ளார். பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்பு காரணமாகவே அவர் இப்படி நடந்து கொண்டதாக, போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
Monday, October 6, 2008
2003க்குப்பின் அதிகம் குறைந்திருக்கும் ரூபாயின் மதிப்பு

புதுடில்லி : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 2003 ம் ஆண்டுக்குப்பின் இன்று காலை வர்த்தகத்தில் அதிகமாக குறைந்திருக்கிறது. ஆசிய சந்தை கடும் சரிவில் இருப்பதால், இந்திய சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று காலை 47.30/32 ஆக குறைந்திருந்தது. இது வெள்ளி அன்று முடிந்த போது ரூ.47.0750/0850 ஆகத்தான் இருந்தது. இன்று காலை வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூபாயின் மதிப்பு.47.45 வரை கூட குறைந்திருந்தது. இது கடந்த 2003 ஏப்ரலுக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு அதிகமாக குறைந்திருக்கிறது.



