Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Monday, January 4, 2010

மனைவியை கணவன் அடிக்கலாம்: காஷ்மீர் பெண்கள் சொல்கின்றனர்


ஸ்ரீநகர் : மனைவியை அடிக்க கணவனுக்கு முழு சுதந்திரம் உள்ளதாம்; ஆம்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இப்படி வித்தியாசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய குடும்ப நல மையம் ஒன்று, நடத்திய ஆய்வில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களில், 64 சதவீதத்தினர், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, நாடு முழுவதும் நடத்தப்பட்ட, ஆய்வு தகவல் கடந்த 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு தகவலை மாநில வாரியாக, மத்திய குடும்ப நல அமைச்சகம், கவனித்து வந்தது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளது.அதில்,"கணவன் வீட்டாரை மனைவி மதிக்காமல் நடந்தால், அவர்களை கணவன் அடிப்பது நியாயம் என 50 சதவீதம் பெண்களும், வீடு மற்றும் குழந்தைகளை புறக்கணித்தால், அவர்களை அடிப்பது நியாயம் என 48 சதவீதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளதாக' கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக நிபுணர்கள் கூறுகையில்,"இந்தியாவில் கணவன் மனைவியை அடிப்பதை பெண்கள் ஏற்றுக் கொள்வதற்கு, குறைந்த கல்வியறிவு உட்பட பல்வேறு சமூக பொருளாதார நிலையே காரணம்' என்றனர்.இதுகுறித்து, கல்வியாளர் ஏ.ஜி.மாதோஷ் கூறுகையில்,"காஷ்மீர் பெண்கள் மத்தியில் அதிகளவு பாதுகாப்பின்மை நிலவுகிறது. கணவன் மனைவியை அடிப்பது சரியே என பெண்கள் கருதுவதற்கு, கல்வியறிவின்மை மற்றும் வறுமை ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக அமைகின்றன' என்றார்.
கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தம் 55.5 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். சுகாதாரம் தொடர்பான ஆய்விற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்த 2,415 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 15 வயது முதல் 49 வயது வரையிலான 3,281 பெண்கள் மற்றும் 15 வயது முதல் 54 வயது வரையிலான 1,076 ஆண்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆய்வில், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என ஜம்மு காஷ்மீர் மாநில ஆண்களும், அதிகளவில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Friday, November 20, 2009

பிரசவத்திற்கு அனுமதிப்பதில் தாமதம்: அரசு ஆஸ்பத்திரி வாசலில் குழந்தை பெற்ற பெண்; செவிலியர்கள் மீது புகார்


தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், ராயப்பன்பட்டி, அணைப்பட்டி கோகிலாபுரம், ஆனை மலையன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

ஆனைமலையன் பட்டியை சேர்ந்த தங்க பாண்டி என்பவரது மனைவி ரெங்கம்மாள் (வயது 26) கர்ப்பிணி ஆன இவர் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக நேற்று காலை 8.30 மணிக்கு தனது தாயருடன் வந்துள்ளார். மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அங்கு பணியில் இருந்த நர்சு டாக்டர் வரட்டும் வந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக காத்திருந்த ரங்கம்மாள் மருத்துவமனை வாசலில் நடந்து கொண்டு இருந்தார். மதியம் 2 மணியாகியும் டாக்டர் வரவில்லை.

இந்த நிலையில் வாசலில் நடந்து கொண்டிருந்த ரெங்கம்மாள் இடுப்பு வலியால் துடித்து மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுதார். தனது மகள் அழுகுரலை கேட்ட தாய் ஓடி வந்தார். மகளின் நிலை கண்டு தான் அணிந்து இருந்த சேலையை உருவி மறைத்துவைத்து மகளுக்கு தாயே பிரசவம் பார்த்தார். இதில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் கேட்டு வந்த உறவினர்கள் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை என்று மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து கோம்பை வட்டார மருத்துவ அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனை அடுத்து குழந்தை பெற்ற தாய்க்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மகளுக்கு பிரசவம் பார்த்த தாய் நாகரத்தினம் கூறியதாவது, ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பாகும். காலை 8.30 மணிக்கு வந்த எங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் டாக்டர்கள் வரட்டும் என்று காலம் கடத்திவிட்டு எனது மகளுக்கு மருத்துவமனை வாசலில் பெற்ற தாயே பிரசவம் பார்க்கும் நிலை உள்ளது என்று கதறி அழுதார்.

இது தொடர்பாக கலெக்டர் உத்தரவின் பேரில்மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்லத்துரை மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் மனோகரன் ஆகியோர் இன்று விசாரணை நடத்துகிறார்கள்.

Wednesday, November 18, 2009

டெல்லியில் ஓடும் காரில் சிறுமி கற்பழிப்பு 2 பேர் கைது


டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (12) (பெயர் மாற்றம்) இவளது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். தாய் மகிபல்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

சினேகா பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். இதனால் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 2 பேர் அவளுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி கொடுத்தனர். அபபோது அவளது தயார், சினேகா மீதுள்ள பாசத்தில் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்.
இந்நிலையில் 2 புரோக்கர்களும் சினேகாவை காரில் டெல்லி விமான நிலைய பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏற்றிச் சென்றனர்.
அவர்கள் வழியில் சினேகாவை மிரட்டி காரி லேயே கற்பழித்தனர். அவர் விட்டு விடுங்கள் என்று கதறித் துடித்தாள்.
அவள் திடீரெய மயங்கியதால் பயந்து போன இருவரும் அவளை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். அப்போது அவளிடம், இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பி விட்டனர்.
இதுபற்றி சினேகா பெற் றோரிடம் கூறி அழுதாள். அவளுக்கு காயம் ஏற்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றி துவராகா போலீசார் வழக்கு பதிவு செய்து 2 புரோக்கர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Thursday, November 12, 2009

நடத்தையில் சந்தேகம்: கணவரை துப்பறியும் பெண்கள்



இப்போதெல்லாம் பெண்கள்- நிறையவே மாறிவிட்டார்கள். கணவன் சொல்லே மந்திரம் என்று அவர் சொல்லுக்கு மறுவார்த்தை சொல்லாமல் அடங்கி கிடந்ததெல்லாம் அந்த காலம்.

தற்போது கணவன் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ, அலுவலக வேலை என்று கூறி வெளியூரில் தங்கி வந்தாலோ... அவர்களிடம் கேள்வி கேட்க தவறுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் கணவர் நடத்தையில் சிறிது மாற்றம் தெரிந்தாலே போதும். உடனே சுதாரித்துக் கொண்டு தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு சென்று கணவரின் நடத்தை சரி இல்லை. அவர் ஒழுங்காக வீட்டுக்கு வராமல் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று படையெடுக்கிறார்கள் என்கிறார் சென்னையின் பிரபல துப்பறியும் நிபுணர் மாலதி.

தென்னிந்தியாவின் முதல் பெண் ஜேம்ஸ்பாண்ட் என்று வர்ணிக்கப்படும் இவர் ஏராளமான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவரது கணவர் அருள்மணிமாறன். இவர் சென்னை மவுண்ட் ரோட்டில் “ஸ்டார் டிடக்டிவ்” என்ற துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இருவரும் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பறிந்து சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள் தற்போது திருமணத்திற்கு முன்பே மணமகன் நல்லவரா? கெட்டவரா? என்று கண்டறிவது, மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் கணவரை கையும்- களவுமாக பிடிப்பது, கல்லூரி மாணவ- மாணவியரின் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை துப்பறிந்து பெற்றோரிடம் அறிக்கை தருவது... என்று உயிரை பணயம் வைத்து துப்பறிந்து வருகிறார்கள்.

இவர்களிடம் துப்பறிவதற்கான மைக்ரோ கேமரா, ரிக்கார்டர், அதிநவீன பைனாகுலர், அதிக தூரத்தில் இருந்து கண்காணிக்கும் நவீன கருவிகள்... என்று ஏராளம் உள்ளன. துப்பறிவதற்கென்று 10-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் ஊழியர்களும் உள்ளனர்.

இதனால் எப்பேர்பட்ட கில்லாடி மனிதர்களையும் இந்த ஜேம்ஸ்பாண்ட் தம்பதிகளால் எளிதில் துப்பறிந்து உண்மையை கண்டறிய முடிகிறது.

சமீப காலமாக இவர்களிடம் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் வருகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் கணவரின் நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவருக்கு வேறு எந்த பெண்ணுடனாவது தொடர்பு இருக்கிறதா? என்று துப்பறிந்து சொல்லுங்கள். அவரது நடத்தையைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள். நாங்களும் அவர்கள் சொன்னபடியே துப்பறிந்து அறிக்கை கொடுக்கிறோம் என்கிறார், மாலதி.

இந்த தம்பதி உயிரை பணயம் வைத்து துப்பறிந்த சில சம்பவங்களை நம்மிடம் திக்... திக்... திகிலுடன் விவரித்தார் அருள்மணிமாறன்.

இதோ....
சென்னை அண்ணாநகரை சேர்ந்த டாக்டர் சேகர் (பெயர் மாற்றம்). அவருக்கு 40 வயது. 12 வயது மகன், 10 வயது மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மாதம் ஒரு தடவை சேகர் சிறப்பு மருத்துவராக செல்வது வழக்கம்.

அப்போது ஒரு மாடல் அழகி ஸ்வீட்டிக்கு ஆபரேசன் செய்தபோது அவர் மீது காதல் வயப்பட்டார். இதனால் ஸ்வீட்டியிடம் ஆபரேசனுக்கு பணம் கூட வாங்கவில்லை. ஸ்வீட்டியும், டாக்டருடன் நெருங்கிப் பழகினார். டாக்டரும் பெங்களூர் போகும்போதெல்லாம் 4 நாட்கள் தங்கி விடுவார்.

அவளது அழகில் கிறங்கிப்போன டாக்டர் சில மாதங்களுக்கு பிறகு ஸ்வீட்டிக்கு தாலி கட்டி மனைவியாக்கி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்தார். சேகரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது மனைவி எங்களிடம் வந்து கணவரின் பெங்களூர் “விசிட்” பற்றி துப்பறிந்து சொல்லுங்களேன் என்றார்.

நாங்களும் முதலில் இது சாதாரணமானதுதானே என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் பெங்களூர் சென்று டாக்டரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தபோதுதான் அவரது லீலைகள் தெரிய வந்தது. இதுதவிர இன்னொரு அதிர்ச்சியான தகவலும் எங்களுக்கு கிடைத்தது. ஸ்வீட்டிக்கு டாக்டர் தவிர வேறு சில வி.ஐ.பி.க்களுடனும் தொடர்பு இருந்தது எங்களுக்கு தெரிய வந்தது.

நான் உடனே டாக்டர் சேகரின் மனைவிக்கு கணவரின் 2-வது மனைவி பற்றி சொன்னதுதான் தாமதம் பொங்கி எழத்தொடங்கி விட்டார். அப்போது அவரை நாங்கள் சமாதானம் செய்தோம்.

அடுத்ததாக டாக்டர் சேகருக்கு மாடல் அழகி ஸ்வீட்டியின் கெட்ட நடத்தைகள் தெரிய வேண்டும் என்பதற்காக அவரை ஒருநாள் நைசாக பெங்களூர் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, ஸ்வீட்டி தனது வேறு சில ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருப்பதை காட்டினோம்.

இதைப்பார்த்ததும் டாக்டர் சேகர் 2-வது மனைவி ஸ்வீட்டியை அந்த நிமிடமே கைகழுவினார். பின்னர் அவரை முதல் மனைவியிடம் அழைத்து வந்தோம். அவர் மனைவியிடம், தனது தவறான செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார். மனைவியும் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். தவறான பாதையில் சென்ற என்னை சரியான நேரத்தில் கண்டுபிடித்ததுடன், ஸ்வீட்டியின் தவறான நடத்தையை நேரில் காண்பித்து திருந்த வைத்தீர்கள்.

இல்லை என்றால் என் மீதும் குழந்தைகள் மீதும் உயிரையே வைத்திருக்கும் அன்பு மனைவியை அல்லவா பிரிந்திருப்பேன் என்றார், டாக்டர் சேகர் கலங்கிய கண்களுடன். கடந்த மாதம் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் மல்லிகா என்பவர் எங்களிடம் வந்து, எனது கணவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் 6 இளம்பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 2 பேருடன் அவர் தவறான உறவு வைத்திருப்பாரோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

இது பற்றி அவரிடம் கேட்டு தகராறு செய்தேன். ஆனால், அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். அவர் சொன்னபடியே அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்கு எங்கள் ஊழியர்களை பயணிகள் போல் அனுப்பி ஒரு வாரம் பின் தொடர்ந்தோம்.

அவர் தொழில் விஷயமாக எங்கு சென்றாலும் ஊழியர்கள் ஒருவர் மாறி ஒருவர் கண்காணித்தனர். அப்போது அவர் குணத்தில் சுத்த தங்கம் என்பது தெரிந்தது. உடனே நாங்கள் மல்லிகாவை சாந்தி தியேட்டரின் எதிரில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வரச்சொன்னோம்.

அவரிடம் நீங்கள் சந்தேகப்படுவது போல் உங்கள் கணவர் சபலபுத்தி உடையவர் அல்ல. தொழிலில் அக்கறையுடன செயல்படுகிறார். அவரை எளிதில் எந்த பெண்ணாலும் கவர்ச்சியை காட்டி ஏமாற்ற முடியாது.

உங்கள் கணவருடன் வீண் தகராறு செய்யாமல் விட்டுக்கொடுத்து வாழுங்கள். நாம் இந்த உலகத்தில் நன்றாக வாழப்போவதென்னவோ அறுபதோ எழுபதோ ஆண்டுகள்தான். வாழும் நாட்களில் முடிந்தவரை கணவருடன் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.

அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை தூக்கி எறியுங்கள் என்று “அட்வைஸ்” செய்து அனுப்பி வைத்தோம் என்றார்.

மாலதி கூறும்போது, சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் விவேக் (பெயர் மாற்றம்) தொழில் அதிபர். இவரது மனைவி லதா (பெயர் மாற்றம்) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் விவேக்குக்கும், அவரது நிறுவனத்தில் பணியாற்றிய 21 வயதே ஆன ஷீலாவுக்கும் காதல் மலர்ந்தது. ஷீலா மிகவும் அழகாக இருந்ததால் அவளுக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள கொட்டி வாக்கத்தில் தனி வீடு வாங்கி குடியமர்த்தினார்.

இதனால் அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை. அலுவலக வேலையாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு ஷீலா வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்தார். அவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த லதா என்னிடம் வந்தார். நாங்கள் விவேக்கை பின் தொடர்ந்து சென்று ஷீலா வீட்டை கண்டுபிடித்தோம்.

பின்னர் நான் எனது கணவர் அருள்மணிமாறன், லதா மற்றும் மனநல ஆலோசகர்கள் ஆகியோர் ஷீலா தனியாக இருக்கும் போது சுற்றி வளைத்தோம். அவளிடம், “விவேக்குக்கு 15 வயதில் மகள், இருக்கிறாள். அவரது மனைவிக்கு கணவர்தான் உயிர் நீ தயவு செய்து அவரை விட்டுவிட்டு உன் வயதுக்கு பொருத்தமான நல்ல மணமகனை தேடிக்கொள். அனாவசியமாக அடுத்த பெண் வாழ்க்கையில் நுழைந்து கெடுக்காதே. இதையும் மீறி நீ விவேக்குடன் வசித்தால் உன்னை ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று கூறிவிட்டு வந்தோம்.

இதனால் பயந்து போன ஷீலா மறுநாளே தனது சொந்த ஊரான மைசூருக்கு ஓடிவிட்டாள். அதன் பிறகு விவேக் ஷீலாவை மறந்து மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார். அவர்களது குடும்பத்தில் வீசிய புயல் மறைந்து தென்றல் காற்று வீசுகிறது. லதா கடந்த வாரம் எங்களிடம் வந்து, “சரியான நேரத்தில் உங்களிடம் வந்தேன். எனது வாழ்க்கையில் புகுந்த ஷீலாவை சாமார்த்தியமாக செயல்பட்டு விரட்டி விட்டீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை என்றபோது என்னையும் மீறி கண்களில் ஆனந்த கண்ணீர்!

துப்பறியும் துறை மூலம் பிரிந்திருந்த பல குடும்பங்களை எங்களால் சேர்க்க முடிகிறது. இதில் நிறைய சவால்கள் இருந்தாலும் முழுமையான மனநிறைவும் கிடைப்பது நிஜம் என்கிறார் மாலதி.

Tuesday, October 13, 2009

பழிக்கு பழி வாங்குவதற்காக உடலில் தீ வைத்து கொண்டு காதலியை கட்டி பிடித்த சாமியார் இருவரும் கருகி பலியானார்கள்



சென்னை, அக். 13-

சென்னை ஒட்டேரி கொசப்பேட்டை வெங்கட திரி தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). இவரது கணவர் யுவராஜ். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.

விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற சாமியாருடன் தொடர்பு வைத்திருந்தார். சங்கருடன் தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார். விஜய லட்சுமிக்கு வேறு சில ஆண் களுடனும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சங்கர் கண்டித்துள்ளார். ஆனால் அவரோ நான் உனக்கு பொண்டாட்டி இல்லை. காதலி மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று திமிராக பேசி உள்ளார்.

இப்படி அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி வேறொரு காதலனை பார்ப்பதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதை சாமியார் சங்கர் எதிர்த் துள்ளார். மேலும் கண்டித்து அடித்து உதைத்துள்ளார். ஆனால் அதையும் மீறி விஜயலட்சுமி வீட்டை விட்டு புறப்பட தயாரானார்.

திடீரென ஆவேசமான சங்கர் மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொளுந்து விட்டு எரிந்த தீயுடன் ஓடிச்சென்று கள்ளக் காதலி விஜயலட்சுமியை கட்டி பிடித்தார். இதனால் அவர் மீதும் தீ பற்றியது.

விஜயலட்சுமி உடும்பு பிடியில் சிக்கியது போல் தப்பிக்க முடியாமல் அவதிப் பட்டார். அவரது உடலிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இருவரும் தீயில் கருகினர். பலத்த காயம் அடைந்த இருவரையும் சிகிச் சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல்ஸ்டேன்லியிடம் விஜயலட்சுமி மரணவாக்கு மூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-நான் மற்ற ஆண்களுடன் பழகுவதை தவறாக நினைத்து எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். அதன் பிறகு சாமியார் சங்கருடன் குடித் தனம் நடத்தினேன். அவரும் என்னை சந்தேகித்தார். வீட்டை விட்டு வெளியே புறப்பட தயாரான போது தீக்குளித்த அவர் என்னை கட்டி பிடித்து கொண்டு என் உடலிலும் தீ பரவ காரணமானார். ஆண் நண் பர்களின் தொடர்பு என் உயிருக்கு உலை வைத்து விட்டது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tuesday, December 30, 2008

வாழ்க்கை வாழ்வதற்கே... கருப்பாக இருப்பதை நினைத்து கவலைப்படும் பெண்ணா நீங்கள்...



பொதுவாக, பெண்கள் அனைவருமே, அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள நினைப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான். நிறம் மற்றும் உடல் வடிவமைப்புக்கு, பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான விஷயம். காரணம், எதிர் பாலினத்தை ஈர்ப்பதில், இவை இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது தான். நமது நிறத்தை தேர்ந்தெடுப்பது நமது கைகளில் இல்லை.

அதுபோல, நம் நிறத்தை மாற்ற முடியாது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. என்றாலும், கருப்பாக இருக்கும் பெண்கள் பலருக்கு, நாம் இப்படி கருப்பாக இருக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மை இருப்பது மறுக்க முடியாத உண்மை..
நன்கு படித்த, பெரிய பதவிகளில் இருக்கும் பெண்கள் கூட, தாங்கள் கருப்பாக இருப் பது பற்றி கவலை அடைவதுதான் வேதனைக்குரிய ஒன்று. இதற்கு காரணம் என்ன? வெள்ளையாக இருக்கிறவர்கள் எல்லாம் மேதைகளாகவும், அழகுள்ளவர்களாகவும், கறுப்பாக இருக்கிறவர்கள் படிக்காதவர்களாகவும் அழகற்றவர்களாகவும் மீடியாக்களிலும், விளம்பரங்களிலும் சித்தரிக்கப் படுகின்றனர். இதன் தாக்கமே, சிறு குழந்தைகளிடம் இருந்து, கல்லூரி மாணவி, திருமணமான பெண் என அனை வரிடமும் தொடர்கிறது.ஒரு விஷயத்தை, நாம் அனைவருமே நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நிறமும், அழகும் முதல் ஹலோவுக்கு மட்டும் தான் உதவும். அதன் பிறகு, நாம் பிறரிடம் பழகும் விதம், நம்மிடம் காணப்படும் ஆளுமை, அறிவு, பழக்க வழக்கம் போன் றவை தான், நம்மை வழிநடத்தும். நான் கருப்பானவள், எனவே, விரும்பத்தகாதவள், என்ற எண்ணத்தை உங்கள் மனதில் நீங்களாகவே வளர்த்துக் கொள் ளும் போது, அந்த நினைப்பே, உங்களை சமூகத்திலிருந்து அன்னியப்படுத்திவிடும். இப்படிப்பட்ட ஒதுக்கத்தை நீங்கள் உணரும் போது, உங்கள் திறமைகளை, அறிவை வெளிக்கொணர இயலாது. எனவே, நிறத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு ஒழியுங்கள். கருப்பு என்பது, வெறுக்கத்தக்க நிறமோ அல்லது அசிங்கமான நிறமோ அல்ல என்பதை உணருங்கள். நம் உடலில் இருக்கும் மெலனின் அளவு தான், நிறங்களை முடிவு செய்கிறது. மேலும், நமது சீதோஷ்ண நிலை காரணமாகவும், நமது நிறம் கறுப்பாகவே இருக்கிறது. தென் இந்தியாவின் நிறம் கருப்பு தான். கருப்பாக இருப்பதன் நன்மை என்ன தெரியுமா? கருப்பு நிற சருமம் வெயிலில் இருந்து நமது உடலைப் பாதுகாக்கும். அதிகப்படியான சூடு நமது உடலை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும். நிறத்தை ஒதுக்கி விட்டு பார்த்தால், பெண்களுக்கு திறமையே கிடையாதா? தங்கள் தனித் திறமை யாலும், கடும் உழைப்பாலும், குணத்தாலும், பொறுமையாலும் பெண்கள் முன்னேறுவதில்லையா? பின் ஏன் இந்த கவலை?வெறும் அழகால், நிறத்தால் எவ்வித பலனுமில்லை. எனவே, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த துறையில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாரிடமும் ப்ளஸ் பாயின்ட் இருக்கும். உங்களுடைய ப்ளஸ் பாயின்ட் என்ன என்பதை கண்டு பிடித்து, அதில் வெற்றி காண முயலுங்கள். உங்களை எப்போதும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். உங்களுடைய தாழ்வு மனப்பான்மைக்கு குட் பை சொல்லிவிட்டு, சுறுசுறுப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் வெல்கம் சொல்லுங்கள். சினேகமாக சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள். பர்சனாலிட்டி தானாக எகிறும்.பிறரிடம் அன்பாகவும், பண் பாகவும் பேசத் துவங்குங்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள். அப்படி இருக்கும் போது, உங்களை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? "கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு...' என்று கூறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள்.