Showing posts with label மொபைல். Show all posts
Showing posts with label மொபைல். Show all posts

Monday, November 23, 2009

எந்த செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் ஒரே டெலிபோன் எண்ணை பயன்படுத்தலாம்: புதிய திட்டம் அறிமுகம்


செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் தொடர்பு துறையில் அரசு நிறுவனம், பி.எஸ்.என்.எல். தவிர தனியார் நிறுவனங்கள் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் உள்ளன.

ஒரு நிறுவனத்தில் செல்போன் சந்தாதாரராக உள்ள ஒருவர் அதில் இருந்து விலகிதான் விரும்பும் வேறு நிறுவனத்துக்கு மாறி போக வேண்டும் என்றால் அந்த எண்ணை ரத்து செய்தவிட்டு அதன் பிறகு அந்த நிறுவனத்தில் புதிய எண் பெறவேண்டும். இந்த முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த செல் நிறுவனத்திலும் சேர்ந்து பயன்பெற விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது. அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள போன் எண்ணையே பயன்படுத்தியவாறு வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.

எந்த மொபைல் போன் ஆபரேட்டர்களிடமும் மாறிக்கொள்ளலாம். இதற்கு ரூ.19 மட்டும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் தான் பயன்படுத்தும் அதே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாறினாலும் பயன்படுத்தும் வசதி 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் 60 சதவீத ரோமிங் கட்டணத்தை குறைத்துள்ளது. 115 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் ரோமிங் சமயத்தில் செல்போன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் டர்போ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் அனைத்து ரோமிங் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 காசு வீதமும் வேறு நெட்ஒர்க் எண்களை தொடர்பு கொள்ள 80 காசு வீதமும் வசூலிக்கப்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராஜீவ் ராஜ்கோபால் தெரிவித்தார்.

Tuesday, December 30, 2008

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்


. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.
2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.
3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.
4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள
எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.
5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.
6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.
7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.
8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.
9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.
12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.
13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.
14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.
15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.
16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.

Friday, October 17, 2008

மொபைலில் அதிக நேரம் பேசுபவர்களுக்கு தோல் நோய் வரும் : பிரிட்டிஷ் டாக்டர்கள் தகவல்


லண்டன் : இப்போது மொபைல் போன் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாகி விட்டது. அது இல்லை என்றால் அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு முக்கிய பொருளாகி விட்டது. ஆனால் அதை உபயோகிப்பவர்களுக்கு தோல் அரிப்பு நோய் வரும் வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் டெர்மடாலஜிஸ்டுகள் அசோசியேஷனை சேர்ந்த டாக்டர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில் நிக்கல் கோட்டிங் இருக்கும் மொபைல் ஹேண்ட்செட்டை உபயோகிப்பவர்களுக்கு நிக்கலால் ஏற்படும் அலர்ஜி காரணமாக முகம் மற்றும் காது பகுதியில் தோல் அரிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆராய்ச்சியில், அதிக நேரம் மொபைலில் பேசுபவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு நிக்கல் அலர்ஜி இருக்கிறது. மொபைல் போன் ஹேண்ட்செட்களில் பட்டன்கள், ஸ்கிரீனின் விளிம்பு போன்றவற்றில் அதிகளவு நிக்கல் கலந்திருப்பதால், அதை உபயோகிப்பவர்களின் கன்னம், காது போன்ற பகுதிகளில் தோல் பாதிக்கப்படும் என்கிறார்கள். தோல் சிவப்பாகி, வறண்டு, வெடித்து விட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். பொதுவாக தங்க நகை அணியும் மங்கையர்களுக்கும், பெல்ட் அணியும் ஆண்களுக்கும் ( பெல்ட்டில் இருக்கும் பக்கிலால் ), அதில் நிக்கல் இருப்பதால் அலர்ஜி ஏற்படுவது உண்டு. அம்மாதிரி நபர்கள் மொபைலில் அதிக நேரம் பேசினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மொபைல் பட்டன்களை அதிக நேரம் அழுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு விரல்களில் கூட தோல்நோய் வர வாய்ப்பு உள்ளதாம்