லாஸ்ஏஞ்சலஸ்: அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டதால், அதில் பெருமளவு முதலீடு செய்திருந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் கடும் நஷ்டமடைந்தார். இதனால், மனைவி, மூன்று மகன்கள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, "லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்தவர் கார்த்திக் ராஜாராம் (வயது 45). எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், எந்த நிறுவனத்திலும் வேலை செய்யவில்லை. மாறாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடும் நஷ்டம் : இவர் ஒரு காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து 5.40 கோடி ரூபாய் வரை சம்பாதித்தார். இதில், ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தன் பணத்தில் பெரும் பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். ஆனால், சமீபத்தில், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெருத்த வீழ்ச்சி காரணமாக, பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு கடும் நஷ்டம் அடைந்தார்.
மாமியாரை சுட்டுக் கொன்று : இதனால், விரக்தி அடைந்த அவர், தன் மனைவி சுபஸ்ரீ, மகன்கள் கிருஷ்ணா (19), கணேஷா (12), அர்ஜுனா மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண் டார். இந்த சம்பவம் அவர் வசித்த வீட்டிலேயே நடந் துள்ளது. கார்த்திக் ராஜாராம் கடந்த செப்டம்பர் 16ம் தேதி துப்பாக்கி வாங்கியுள்ளார். பின் தற்கொலைக் கான காரணத்தை கடிதமாக எழுதியுள்ளார்.மொத்தம் மூன்று கடிதங்கள் எழுதியுள்ளார்.
ஒன்று போலீசாருக்கு எழுதப்பட்டுள்ளது. அதில், தனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு தன் செயல்பாடுகளே காரணம் என, கூறியுள்ளார். மற்றொரு கடிதத்தை தன் குடும்ப நண்பர்களுக்கு எழுதியுள்ளார். மூன்றாவது கடிதம் அவரின் உயில் மற்றும் மரண சாசனம் போன்று உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு தன் குடும் பத்தினரை சுட்டுக் கொன்ற அவர், பின் தனக்குத்தானே சுட்டு இறந்துள்ளார். பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்பு காரணமாகவே அவர் இப்படி நடந்து கொண்டதாக, போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
Tuesday, October 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment