
அதிகம் சாப்பிடுவதை குறைக்க முடியலே; அதுபோல மொறுமொறுக்களையும் விட மனசில்லை. அப்படியானால், கலோரி அதிகமாகத்தானே செய்யும். அதை குறைக்க வழியென்ன என்று தவியாய் தவிக்கின்றனர் பலரும்.
உண்மையில் வெயிட் குறைய கண்டிப்பாக, கலோரி அளவை பார்த்துத்தான் எதையும் சாப்பிட வேண்டும்; முதல் கட்டமாக, மொறுமொறுக்களை கைவிட வேண்டும்; காய்கறி, பழங்களை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
நெகட்டிவ் கலோரி புட்
எந்த காய்கறி, பழம் உட்பட உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டாலும், கலோரி குறைவாக இல்லை. அப்படியானால், என்னதான் வழி? கவலைப்பட வேண்டாம்; நெகட்டிவ் கலோரி உணவு வகைகளை சாப்பிட ஆரம்பிக்கலாம்.
நீங்கள் சாப்பிடும் உணவு 50 கலோரி உள்ளது என்றால், அதை ஜீரணிக்க உடலில் 65 கலோரியை செலவழிக்க வேண்டும். இப்படிப் பட்ட சூழ்நிலையில், ஒரு பக்கம் வாய்க்கு ருசியாக சாப்பிட்ட மாதிரியும் ஆகிவிட்டது; உடலில் உள்ள கலோரியில் 15 கலோரி சத்தை குறைத்த மாதிரியும் ஆகிவிட்டதே!
அதிக வைட்டமின் கனிம சத்துக்கள்
நெகட்டிவ் கலோரி உணவு வகைகளால் ஒரு முக்கிய லாபம் இருக்கிறது. இந்த வகை உணவுகளில் அதிக வைட்டமின், கனிம சத்துக்கள் உள்ளன. அதனால், கலோரி குறைவதுடன், சத்துக்களும் உடலில் சேரும்.
உடலில் எதிர்ப்பு சக்தியும் வெகுவாக அதிகரிக்க வாய்ப்பு இந்த உணவு வகைகளால் ஏற்படுகிறது. நாளடைவில், இந்த உணவுகளை தவிர, சாட் புட் போன்றவற்றை சாப்பிடக்கூட மாட்டீர்கள்.
தோற்றப்பொலிவு உணவிலும் கூடவா?
கடையில் வெள்ளரிக்காய் உட்பட சில காய்கறிகள் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து அள்ளுபவர்களும் இருக்கின்றனர்; அந்தப் பக்கமே திரும்பாதவர்களும் இருக்கின்றனர். இரண்டாமவருக்கு ஒன்று, வெள்ளரிக்காய் பிடிக்காமல் இருக்கலாம்; இரண்டாவது, அது பற்றி தெரியாமல் இருக்கலாம்.சில காய்கறிகள், பழங்களை பார்த்தாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. தோற்றப் பொலிவை பார்த்து தான் இவர்கள் உணவை கூட தேர்ந்தெடுக்கின்றனர். இது பெரும் தவறு.
வெள்ளரிக்காய் முதல் சாய்ஸ்
வெள்ளரிக்காய் பற்றி பலருக்கு தெரியாது. உடலுக்கு ஏகப்பட்ட வைட்டமின், கனிம சத்துக்களை தருவதுடன், கலோரியை அதிகமாக இழக்கவும் செய்கிறது.வெள்ளரிக்காயை சும்மாவே சாப்பிடலாம்; காலை சிற்றுண்டியில் ஒரு பகுதியாக சாப்பிடலாம். உணவிலும் சேர்த்து சமைக்கலாம். பகல் உணவு மட்டுமல்ல, இரவு டின்னரிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment