
போகாடா, அக். 26-
தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடு கொலம்பியா. கடந்த 11-ந்தேதி இந்நாட்டில் உள்ள லாஸ் மேனி செரோஸ்- பெனாட் அணிகள் கால்பந்து போட்டியில் மோதின.
அப்போது விளையாடிக் கொண்டிருந்த ஒரு அணி வீரர்களை அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றனர். எல்.எல்.இன் என்ற கொரில்லா அமைப்பு அவர்களை கடத்தி சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களின் 10 பேர் உடல்கள் வெனிசூலா எல்லையில் கிடந்தன. அவர்களின் உடல்களின் பல இடங்களில் குண்டு காயங்கள் இருந்தன.
அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதில் ஒரு வீரர் மட்டும் உயிர் பிழைத்து இருக்கிறார். கால்பந்து வீரர்கள் கடத்தி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment