Friday, October 16, 2009

கின்னஸ் முயற்சி: மாணவர்கள் பங்கேற்பு


விழுப்புரம்: "உலக கை கழுவும்' தினத்தையொட்டி சுகாதாரம், கல்வித் துறைகள் இணைந்து கின்னஸ் சாதனை முயற்சியாக விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில், 5,000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற "கை கழுவும்' நிகழ்ச்சி நடந்தது.
உலகம் முழுவதும் அக்டோபர் 15ம் தேதி "உலக கை கழுவும்' நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறைகள் இணைந்து கின்னஸ் சாதனை முயற்சியாக மாணவ, மாணவிகள் பங்கேற்ற சுகாதாரமான முறையில் "கை கழுவும்' நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பாட்ஷா வரவேற்றார். சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில்,
"கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால், நாம் சாப்பிடும் உணவில் அசுத்தம் சேர்ந்து விடும். கைகள் சுத்தமாக வைத்திருந்தால், வியாதிகள் நம்மை விரைவில் அணுகாது. வெயிலையும் பொருட்படுத்தாது அரிய சாதனைக்காக பங்கேற்ற மாணவ, மாணவிகளை பாராட்டுகிறேன்' என்றார். நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 2,500 பேர், ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 1,200 பேர், இ.எஸ்.,மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர். அப்பள்ளிகளுக்கு சுகாதார துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Source: http://www.dinamalar.com

1 comment:

Anonymous said...

[url=http://profiles.friendster.com/122865092]kamagra lovegra uk paypal[/url]
[url=http://trig.com/tovissige1973/biography]kamagra blue[/url]
[url=http://trig.com/chieprenrengua1978/biography]using cialis with viagra[/url]
[url=http://profiles.friendster.com/122853769]side effects from taking lasix[/url]