Wednesday, October 28, 2009

மதுரை அரசு மருத்துவமனையில் மறைந்து போன மனித நேயம்


மதுரை : விபத்துகளில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், டாக்டர்கள், ஊழியர்கள் சிலரின் மனம் மரத்து போய் மனிதாபிமானமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்த முதியவரின் உடலை பணம் கொடுத்தால்தான் ஆம்புலன்ஸில் ஏற்ற அனுமதிப்போம் என்று போர்க்கொடி தூக்காத குறையாக சில ஊழியர்கள் மனிதாபிமானமின்றி அடம்பிடித்து சாதித்தனர். கடந்த அக்.25ல் சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் ஜாகீர் மற்றும் இரு மகள்கள் பலியாயினர். தலை, கால், மார்பு பகுதியில் படுகாயமடைந்த ஜாசிகா (3) மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். உறவினர்கள் உடன் இல்லாத நிலையில், சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள், நர்சுகள் மெத்தனமாக இருந்தனர்.
சிறிது நேரத்தில் ஜாகீரின் நண்பர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்தபோது, எந்த நிலையில் ஜாசிகா கொண்டு வரப்பட்டாரோ அதே நிலையில்தான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கொதித்து போன நண்பர்கள், "ஏன் முதலுதவிகூட அளிக்க வில்லை' என்று கேட்க, "உறவினர்கள் உடன் இல்லாததால் சிகிச்சை அளிக்கவில்லை' என்று மனிதாபிமானமின்றி "கூலாக' கூறினர். புலம்பி, திட்டி தீர்த்துவிட்டு சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்தனர். வர்களை வழிமறித்த ஊழியர்கள், "செலவுக்கு பணம் கொடுங்கள்' என்று நச்சரித்தனர்.
அவர்களுக்கு கப்பம் கட்டி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, "தாமதமாக கொண்டு வந்துள்ளீர்கள். எண்பது சதவீதம் முடிந்து விட்டது. முடிந்தளவு முயற்சிக்கிறோம்' என்று நம்பிக்கையூட்டி, இதுவரை இரு ஆப்பரேஷன்கள் செய்துள்ளனர். தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே சிறுமி சிகிச்சை பெறுகிறார். "முதலிலேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருந்தால் சிறுமி உடல்நலம் தேறியிருப்பார்' என்கின்றனர் ஜாகீர் நண்பர்கள்.
அவர்கள் கூறுகையில், ""இன்னும் பல ஆண்டுகள் வாழக்கூடிய குழந்தை என்ற மனிதாபிமானம் கூட இல்லாமல், யாரும் உடன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். ஆபத்தான நிலையில் ஒருவர் இருக்கும்போது, இதுபோன்ற மெத்தனத்தால் நோயாளியின் விதிதான் முடியும். இனியாவது டாக்டர்களும், ஊழியர்களும் மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் என்று முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுத உள்ளோம்'' என்றனர்.

4 comments:

Shyam said...

manitha neyam eppoluthu irunthathu marinthu povatharku

ரோஸ்விக் said...

மனித நேயமா? அது எந்த வார்டில் இருக்கிறது? அதனிடம் இன்னும் நாங்க வசூல் செய்யவில்லையே எனக் கேட்போரின் எண்ணிக்கை பெருகிவிட்டது வருத்தம் தான். மிக மிக சிலர் தான் மனிதனுக்கும், மனித நேயத்துக்கும் மதிப்பு தருகிறார்கள்.
இறந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள் நண்பா.

http://thisaikaati.blogspot.com

Jesus Joseph said...

தங்கள் வருகைக்கு நன்றி,
உங்கள் வலைத்தளத்தை பார்த்தான்
நல்லா இருக்கு.
follower ஆகியச்சி.
உங்கள் எழுத்துகள் நன்றாக உள்ளது.
நமக்கு எல்லாம் Copy Paste மட்டும் தான் தெரியும்

ஜோசப்

Jesus Joseph said...

//மனித நேயம் எப்பொழுது இருந்தது மறிந்து போவதற்கு //
தங்கள் வருகைக்கு நன்றி
நீங்கள் சொல்வது உண்மைத் தான்.
வெகு சிலரே மனிதர்களாக இருக்கிறார்கள்

உங்கள் ப்ளாக் நன்றாக இருக்கிறது

ஜோசப்