Monday, November 9, 2009

டெல்லி, மும்பை 2025-ல் பணக்கார நகரமாக மாறும்; புதிய ஆய்வில் தகவல்


இங்கிலாந்தில் உள்ள “வினரைஸ் வாட்டா ஹவுஸ் கூப்பர்” என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் உலகில் உள்ள பணக்கார நகரங்களில் ஏற்படும் பொருளாதார மாற்றம் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் தற்போது உலகில் முதல் 5 இடத்தில் உள்ள பணக்கார நகரங்களான டோக்கியோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, ரெய்ஜின் ஆகிய நகரங்கள் வருகிற காலங்களில் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்கும். இதனால் முதலிடங்களுக்கு வேறு நகரங்கள் வந்து விடும் என்று தெரிய வந்துள்ளது.

அடுத்த 15 ஆண்டில் அதாவது 2025-ம் ஆண்டு வாக்கில் சீனாவின் தொல் காய், பிரேசில் நாட்டில் உள்ள சாபோலே, மும்பை போன்ற நகரங்கள் முன்னணி இடங்களை பிடித்து விடும்.

இந்த நகரங்களில் இப்போது பொருளாதார வளர்ச்சி தற்போது 6-ல் இருந்து 7 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் நியூயார்க், டோக்கியோ, சிகாகோ, லண்டன் ஆகியவற்றில் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக இருக்கிறது.

எனவே அடுத்த 15 ஆண்டுகளில் இந்த நகரங்களை மற்ற நகரங்கள் முந்தி விட வாய்ப்பு உள்ளது.

தற்போது 25-வது இடத்தில் உள்ள ஹாங்காய் 2025-ல் 9-வது இடத்துக்கும், 29-வது இடத்தில் உள்ள மும்பை 9-வது இடத்துக்கும், 38-வது இடத்தில் உள்ள பீஜிங் 17-வது இடத்துக்கும், 10-வது இடத்தில் உள்ள சாபோலோ 6-வது இடத்துக்கும் வந்து விடும்.

இதே போல டெல்லி, காஞ்சூ, ரியோடி ஜெனீரோ, இஸ்தான்புல், கெய்ரோ ஆகிய நகரங்களும் முன்னணி இடத்துக்கு வந்து விடும். சிட்னி, சிங்கப்பூர், மாட்ரிட் போன்ற நகரங்கள் பின்னடைவை சந்திக்கும்.

No comments: