Monday, November 2, 2009

வீட்டு வேலைக்கு வந்த அக்காள்- தங்கையை கற்பழித்த 3 பேர்


பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் சரன்ஜித்சிங். இங்கிலாந்தில் வசித்து வருகிறார். குடும்பத்துடன் சொந்த ஊர் வந்திருந்தார். அப்போது வீட்டு வேலைகளை செய்து கொடுப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், அவருடைய 2 மகள்களையும் அழைத்து வந்திருந்தனர்.

தாயார் மார்க்கெட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் 2 சகோதரிகளையும் சரன்ஜித் சிங், அவருடைய நண்பர் குருசரன்சிங் மற்றும் ஒருவர் சேர்ந்து கற்பழித்தனர்.

இந்த சம்பவம் சரன்ஜித்சிங் மனைவி கபல்சித் கவுருக்கு தெரிந்தே நடந்தது. அவர் இதை தடுக்கவில்லை. மாறாக அந்த இரு பெண்களையும் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்.

தாயார் மார்க்கெட்டில் இருந்து வந்ததும் நடந்த சம்பவங்களை அவரிடம் சகோதரிகள் கூறினார்கள். அவர் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுத்தார்.

இதையடுத்து 3 பேர் மீதும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்ததாக கபல்ஜித்கவுர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

இது பணத்தின் திமிரை காட்டுகிறது

Jesus Joseph said...

வெண்ணிற இரவுகள்....
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
தங்கள் வருகைக்கு நன்றி

ஜோசப்