
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கர். 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். வருகிற 15-ந்தேதி அவர் 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த 20 ஆண்டு கால விளையாட்டில் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். சாதனை என்றாலே சச்சின் தான் என்று சொல்லுமளவுக்கு உள்ளது.
தெண்டுல்கர் தற்போது மேலும் ஒரு மைல்கல்லை நோக்கி செல்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சேர்த்து அவர் 30 ஆயிரம் ரன்னை நெருங்குகிறார். அதற்கு இன்னும் 49 ரன் தேவை. அவர் 436 ஒருநாள் போட்டியில் விளையாடி 17, 178 ரன்னும், 159 டெஸ்டில் 12,773 ரன்னும் எடுத்துள்ளார். இரண்டையும் சேர்த்து 29,951 ரன் குவித்துள்ளார்.
இன்றைய போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 30 ஆயிரம் ரன்னை தொடுவார். தெண்டுல்கரின் சாதனைகளை எட்டிபிடிக்க முடியாத தூரத்தில் மற்ற வீரர்கள் உள்ளனர்.
Source: http://www.maalaimalar.com/
3 comments:
நல்ல பதிவு. இந்த தொடரில் அவர் இரண்டு சதங்கள் மற்றும் டெஸ்ட் தொடரில் 13000 ரன் எடுப்பார் என்று நம்புகின்றேன். வாழ்த்துக்கள். நன்றி.
தங்கள் வருகைக்கு நன்றி
நீங்கள் கூறியது கண்டிப்பாக நடக்கும்
நன்றி
ஜோசப்
தங்கள் வருகைக்கு நன்றி
நீங்கள் கூறியது கண்டிப்பாக நடக்கும்
நன்றி
ஜோசப்
Post a Comment