Monday, November 23, 2009

சூதாட்டத்தில் சிக்கிய அசாருதீன் மீதான தடை நீக்கப்படுமா?- கிரிக்கெட் வாரியம் பரிசீலனை


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்.
99 டெஸ்டில் விளையாடி 6215 ரன்னும், 334 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9378 ரன்னும் எடுத்துள்ளார். 1992, 1996, 1999 ஆகிய 3 உலக கோப்பை போட்டியில் கேப்டனாக பணியாற்றினார். அறிமுகமான 3 டெஸ்டிலும் சதம் அடித்து சாதனை படைத்தார்.

2000-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்த போது சூதாட்ட புயல் வெடித்தது.

அப்போது அசாருதீன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அசாருதீனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆயுட் கால தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே அசாருதீன் அரசியலில் அதிரடியாக நுழைந்தார். காங் கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரும், ஐ.சி.சி. துணை தலைவருமான சரத்பவாரை சந்தித்து அசாருதீன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக திக்விஜய் சிங் கூறும் போது பல்வேறு வீரர்கள் மீதும் சூதாட்ட குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவர்கள் எல்லாம் தடையில் இருந்து வெளியே வந்து விட்டார்கள். அசாருதீன் மட்டும் தடையில் தொடர்ந்து நீடிப்பது எப்படி சரியாகும்? அவர் தனது திறமை மூலம் பெருமை தேடிக்கொடுத்துள்ளார். அவரது தடையை நீக்க வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
இந்த எம்.பி.க்கள் குழுவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான ராஜீவ் சுக்லாவும் இடம் பெற்றுள்ளார். அவர் காங்கிரஸ் எம்.பி. ஆவார். ராஜீவ் சுக்லா இது குறித்து கூறும் போது, கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க் மனோகரிடம் இது தொடர்பாக பேசினேன். அதற்கு அவர் அசாருதீன் ஒரு மனு கொடுத்தால் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று என்னி டம் தெரிவித்தார் என்றார்.
அசாருதீன் மீதான தடையை நீக்குவது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்ய விரும்புகிறது. இதனால் விரைவில் அவர் மீதான தடை நீக்கப்படுகிறது.

1 comment:

meena said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?