Wednesday, November 4, 2009

பல லட்சம் செலவில் பத்திரப் பதிவு: சந்திர மண்டலத்தில் ஷாருக்கானுக்கு “பிளாட்” ஆஸ்திரேலிய ரசிகர் வாங்கி கொடுத்தார்



சந்திர மண்டலத்தில் எதிர் காலத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக இப்போதே சந்திரனில் பலர் இடம் வாங்கி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள லூனார் ரிபப்ளிக் சொசைட்டி இந்தி நடிகர் ஷாருக்கான் பெயரில் “பிளாட்” பத்திரப்பதிவு செய்து உள்ளது. அங்கு வசிக்கும் ஷாருக்கான் ரசிகர் ஒருவர் லூனார் ரிபப்ளிக் சொசைட்டியில் பல லட்சம் செலவில் இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த பத்திரத்தை ஷாருக்கானுக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்திரனில் ஒரு இடத்தை பதிவு செய்து பத்திரத்தை அந்த ரசிகர் ஷாருக்கானுக்கு அனுப்பி வைக்கிறாராம்.

அந்த பிளாட்டை என்ன செய்யப்போகிறீர்கள் என்று ஷாருக்கானிடம் நிருபர்கள் கேட்ட போது, எதிர் காலத்தில் எல்லோரும் அங்கு குடியேற வாய்ப்பு வந்தால் அப்போது அதுபற்றி யோசிப்பேன் என்றார்.

No comments: