Friday, November 20, 2009

ஐ.நா. சபையில் பணியாற்ற விரும்பும் பின்லேடன் மகன்


அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடன். இவன் உலகம் முழுவதும் தேடப்படும் சர்வதேச குற்றவாளி. அவனது மகன் ஒமர் பின்லேடன். இவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-

அரசியல்வாதியாகும் எண்ணம் எனக்கு இல்லை. எப்போதும் நான் உண்மையே பேசுகிறேன். சமாதானத்தையே விரும்புகிறேன். இதற்காக ஐ.நா.சபையில் சமாதான பிரசாரகாரராக பணிபுரிய விரும்புகிறேன்.

எனது தந்தையை ஒரே ஒருமுறை சந்தித்து இருக்கிறேன். அப்போது என்னையும், சகோதரர்களையும் ஆயுதம் ஏந்துமாறு எனது தந்தை பின்லேடன் கேட்டுக்கொண்டார். ஆனால் அதை யாரும் விரும்பவில்லை.

ஆனால் ஒருபோதும் என்னை அல்-கொய்தா இயக்கத்தில் சேரும்படி கூறவில்லை. ஆனால் ஒரு வேலையை என்னிடம் ஒப்படைத்தார். அதற்கு நான் தகுதியானவன் இல்லை என்று கூறி மறுத்து விட்டேன். கருத்து வேற்றுமை மற்றும் வன்முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளேன்.

ஒமர் பின்லேடன் தனது தந்தை பின்லேடனுடன் ஆன தொடர்பை 2001-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முறித்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

No comments: