
நம் நாட்டில் மதுவை அறவே ஒழிக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடரும் . மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று பிரச்சாரம் செய்து அதை விற்கும் அரசே இதற்கு பொறுபேற்க வேண்டும் .
திருவள்ளூரை அடுத்த பன்னூர் சூசைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (வயது 47) கூலி தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (45). 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மாரி குடிப்பழக்கம் கொண்டவர். வேலைக்கு செல்லாமல் மனைவி வீட்டில் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்து மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். சின்னப்பொண்ணு தன்னுடைய சேமிப்பு பணத்தை மாரியின் தம்பி ராமதாசிடம் கொடுத்து வைத்திருந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரி மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் இல்லை என்று கூறினார். எனக்கு பணம் தராமல் என் தம்பியிடம் பணம் கொடுக்கிறாயே உனக்கு அவனுடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்று கூறினார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சின்னப்பொண்ணு கணவரிடம் கோபித்துக்கொண்டு கொழுந்தன் ராமதாஸ் வீட்டிற்கு சென்று தங்கி விட்டார்.
சம்பவத்தன்று மாரி குடிபோதையில் மனைவியை தம்பி வீட்டிற்கு தேடி சென்றார். சின்னப்பொண்ணு கணவருடன் வர மறுத்தார். இதில் ஏற்பட்ட தகராறில் மாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டி.எஸ்.பி. முருகேசன், இன்ஸ்பெக்டர் சிவபாதசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்.
மாரியை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் தர மறுத்ததால் என் தம்பியுடன் கள்ளத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடிபோதையில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கைதான மாரி போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment