Monday, November 23, 2009

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மலை மின் கம்பத்தில் தூக்கில் போட வேண்டும்: மரணமடைந்த அதிரடிப்படை வீரரின் தந்தை ஆவேசம்


மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேசிய பாதுகாப்பு படையில் மேஜராக இருந்த சந்தீப் உன்னி கிருஷ்ணன் கொல்லப்பட்டார்.

இவருடைய தந்தை உன்னி கிருஷ்ணன் பெங்களூரில் வசித்து வருகிறார். சந்தீப் பெற்றோருக்கு ஒரே மகன். அவரை இழந்த துக்கம் இன்னும் பெரிய அளவில் அவர்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது. மகன் மரணம் அடைந்து ஒரு ஆண்டு ஆவதையொட்டி உன்னிகிருஷ்ணன் மகனை நினைவு கூர்ந்து கூறியதாவது:-

எங்கள் மகன் மரணம் அடைந்த அந்த நிகழ்வுகள் இன்னும் எங்கள் மனதை விட்டு அகலவில்லை. அவன் எங்களுடன் இல்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கிறோம்.

அந்த தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை இன்னும் உயிருடன் வைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள். அஜ்மலை யாரோ இயக்கி இருக்கிறார்கள், அவனை என்னை செய்வது என்று சிலர் கூறலாம். அவனுக்கும் சுயமாக செயல்பட மூளை இருக்கிறது. திட்டமிட்டு செயல்களை செய்கின்றனர்.

அவனும், அவனுடைய கூட்டாளியும் மட்டுமே 53 அப்பாவிகளை சுட்டுக் கொன்றனர். குழந்தைகள், கர்ப்பிணி பெண்களை எல்லாம் துடிக்க துடிக்க கொன்றனர். அவர்கள் உயிரிழந்ததை பார்த்து சிரித்தபடி அஜ்மல் நின்றிருக்கிறான். இந்த கொடூர மனிதனை விளக்கு கம்பத்தில் தூக்கில் போட வேண்டும்.

நாம் பாகிஸ்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டு இருக்கிறோம். முதலில் அஜ்மலை கொல்ல வேண்டும், இதை பழிவாங்கும் நோக்கத்துடன் சொல்லவில்லை. இது தீவிரவாதிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

malar said...

இது தீவிரவாதிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும்.